அரசினர் மேல்நிலை பள்ளி – மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம்

தாமரன்கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் இக்கல்வியாண்டின் (2016-2017) பத்தாம் வகுப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரும் (29-05-2016) தேதி முதல் இன்று வரை பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திங்கள் வா , புதன் வா என்று மாற்றி மாற்றி கூறி மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம் காட்டுகிறார்.மேலும் பள்ளியில் சேர்பதற்கு நாற்காலி,மேசை,மின்விசிறி போன்ற பொருட்கள் வாங்கி கேட்பதாக கூறப்படுகிறது. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இவரின் அலட்சிய போக்கால் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சேர்க்கைக்கா இன்று வரை காத்திருக்கிறார்கள் . (more…)

Like and Share

பட்டுக்கோட்டை – தஞ்சை இரயில் பாதை 300 கோடி முதலீட்டில் அமைப்பு

நெடு நாளாக பட்டுக்கோட்டை பகுதி மக்களால் ஆவளுடன் எதிர்பார்க்கப்பட்ட தஞ்சை-பட்டுக்கோட்டை இரயில் பாதை திட்டத்திற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த இரயில் பாதை சுமார் 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஒப்புதல் பற்றி இரயில் துறை மந்திரில் பி கே பன்சால் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவிடம் அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் இரயில்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரத்தநாடு வழியாக அமைக்கப்படும் இந்த பாதை 47 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பாதை அமைக்கப்பட்டால் இராமநாதபுரம் வரை இணைப்பை இது ஏற்படுத்தும். பட்டுக்கோட்டை பகுதி மக்களுக்கு சென்னை மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல இது மிகவும் ஏதுவாக இருக்கும். எவ்வளவு நாட்களில் இந்தப் பணி நிறைவடையும் என்பதைப் பற்றி செய்திக்குறிப்பில் குறிப்பிடவில்லை. விரைவாக நிறைவடைந்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் பட்டுக்கோட்டை-தஞ்சை இரயில் பாதை அமைப்பது தொடர்பான ஆய்வை இரயில்வே துறை மேற்கொண்டது. அப்பொழுது டி ஆர் பாலுவிற்கும், தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் பழனி மாணிக்கத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையானது நினைவிருக்கலாம்.

Like and Share

புத்தண்டு நல்வாழ்த்துக்கள்…

உயிரினும் மேலான தாமரன்கோட்டை இனையத்தின் தோழர்,தோழிகள் அனைவருக்கும் 2013 புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும்,இந்த புத்தாண்டின்  முதல் நாம் நமக்கென ஒரு இலக்கை நிர்ணையித்து, அந்த இலக்கை இவ்வாண்டிலேயே அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்…..

நன்றி….

Like and Share

பொறியியல் துறைகள்

என் தாமரன்கோட்டை மக்களிடம் என் கருத்தை தெருவிக்க ஆசைபடுகிறேன்,
பொறியியல் பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள் உள்ளன  , ஆனால் நம் ஊர் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை ஆண்களாக இருந்தால்  இயந்திரப் பொறியியல் ( mechanical Engineering )-ம் , பெண்களாக இருந்தால் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல்(Electronics and Communication Engineering)-ம் தெர்ந்தெடுகின்றனர்,பொறியியலில் பல்வேறு துறைகள் உள்ளன. இதனால் மானவர்கள் இனையதளத்தின் வயிலாக பொறியியல் பல்வேறு துறைகளை தேடி, பிடித்த துறையை தெர்ந்தெடுகுமாறு நம் இனையதளத்தின் (thamarankottai.com) வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

பொறியியல் பல்வேறு துறைகள்:
 • ஒருங்கியப் பொறியியல் – Systems Engineering
 • குடிசார் பொறியியல் – civil Engineering
 • இயந்திரப் பொறியியல் – mechanical Engineering
 • மின்பொறியியல் – Electrical Engineering
 • இலத்திரனியல் பொறியியல் – Electronic Engineering
 • கணினிப் பொறியியல்
 • உற்பத்திப் பொறியியல்
 • மென்பொருட் பொறியியல் – Software Engineering
 • விமானப் பொறியியல் – Aircraft Engineering/Aeronautical Engineering
 • விண்வெளிப் பொறியியல் – Aerospace Engineering
 • ஆழ்கடல் பொறியியல் – Marine Engineering
 • வேதிப் பொறியியல் – Chemical Engineering
 • உயிரிப் பொறியியல்
* வேளாண்மைப் பொறியியல்
 • மருத்துவக்கருவிப் பொறியியல்
 • மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல்
 • தகவல் தொழில்நுட்பம்
 • நானோ பொறியியல்
 • பொருள் பொறியியல்
 • ஒலிப் பொறியியல்
 • கட்டமைப்புப் பொறியியல் – structural engineering

இப்படிக்கு

செந்தில்

குறிப்பு: தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்……

Like and Share

கல்விக் கடனுதவி தொடர்பாக….

என் பெயர் செந்தில் குமார், நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன் , நான் கடந்த ஜுன் 30-ஆம் நாள்,2011 அன்று கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகளை தெரிவித்தேன் ,
அதற்கு தனது கருத்தை பகிர்ந்து கொண்ட வினோத் மற்றும் மகேந்திரன் அவர்களுக்கும் மிக்க நன்றி , ஆனால் இருவர் மட்டும் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் வெட்கத்தையும்,வேதனையையும் அளிக்கிறது ,
ஏனெனில் தாமரன்கோட்டை வெப்தளத்தை அனைவரும் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர தங்களுடைய கருத்தை பரிமாறிகொள்வதில்லை,  இந்த கொரிக்கை சாத்தியமானால் பல மாணவ,மாணவிகள் நன்மை பெறுவார்கள் ,
தாங்கள் பெருமளவில் முயற்சியெடுக்கவில்லை என்றாலும் , தங்களுடைய கருத்துகளையும்,கோரிக்கை சாத்தியமாக்குவதற்கு வழிமுறைகளையாவது பகிர்ந்து கொண்டால் நான் அதற்கான முயற்சியை எடுப்பேன்,

நமது ஊர் தேவைகளை நாம் கேட்டு பெறுவதினால் தவறு ஏதும் இல்லையே…..?

Like and Share

ச.வீரமணி முதலாமாண்டு நினைவேந்தல்

சில மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய பதிவு இது .தனியொருவரை பற்றிய விடயங்களை பதிவேற்றுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்ததால் முடியவில்லை. ஆசிரியரின் அனுமதியோடு தற்பொழுது பதிவேற்றுகிறேன்.

 அந்த நாள் ….. அந்த நிமிடம் …..
அந்த செய்தியை கேட்டவுடன்
என் கணினியை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை ..
கைபேசி கல்லாக தெரிந்தது….
காலை பொழுது சில நேரம் இரவாகி மீண்டது
வணங்கிய கடவுள் எல்லாம கல்லோ என தோன்றியது
கடல்கண்ட சுனாமி என் கண்கண்டது
காற்றலையாய் வந்த அந்த செய்தி…
அண்ணன் இறந்து விட்டான்!!!
வீரமணி இறந்து விட்டான்!!!

காற்றலையா அது!!! இல்லவே இல்லை !!!
கம்பியில்லா மின்சாரம் காது வழி புகுந்து
உச்சந்தலையில் பாய்ந்து
உடம்பை உலுக்கி எடுத்தது….
அண்ணன் இறந்து விட்டான்!!!
வீரமணி இறந்து விட்டான்!!!

யாருக்கு என்ன பாவம் செய்தாய் நீ?
கயவர்கள் எல்லாம் கண் முன்னே
கவலையின்றி திரியும் பொழுது
கருங்காலி காலன் பின்னால்
நீ கலங்காமல் சென்றது ஏன் ?
நீ வணங்கிய கண்டேசுவரன்
கண்டவர் ஏசும்படி ஆனதே!!!
நீ இறந்து விட்டாய் என்கிறார்கள்.
யார் சொன்னது நீ இறந்தாய் என்று?
இறந்தது உன் உயிர் சுமந்த உடல் மட்டுமே!
உன் உயிர் இன்னும் எங்களிடம் தான் உள்ளது.
நீ எங்களை விட்டு பிரிந்து விட்டதாய் சொல்கிறார்கள்!!
இல்லை இல்லை …
எங்களை வரவேற்கவே நீ முந்தி கொண்டாய்!!!
தெருவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும்
உன் இழப்பை நினைவுபடுத்துகிறது …
ஈடு செய்ய முடியவில்லை…….
ஒரு வருடம் கழித்து உன் முகம் பார்த்தாலும்
அனிச்சையாய் அணிவகுக்கின்றன கண்ணீர் துளிகள் !!!
கண்ணீர் விழுந்து காகிதம் கதறுவதாய்
கடிந்து கொள்கிறது என் பேனா !!!
இதற்கு மேல் முடியவில்லை!!!
எப்படியோ… முந்திக்கொண்டாய் …
எங்களுக்கான முன்பதிவை உறுதி செய்து வை!!
பேச வேண்டிய கதைகள் ஏராளம்!!!
அது சில வருடங்களாகலாம் ..
சில மாதங்களாகலாம் …
சில நாட்களில் கூட நடக்கலாம்…..
விரைவில் சந்திப்போம் …..
முறை செய்ய என் மாமன் ராஜாவையும் தயார் செய்து வை !!!
ஆவலுடன்….

அன்புத்தம்பி வினோத் .

Like and Share

புகைப் பட போட்டி

தாமரன்கோட்டை தொடர்பான சிறந்த புகைப்படங்களை அதிக அளவிலாக வலையேற்றும் நோக்கத்துடன் ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்பது மிக எளிது. தாமரங்கோட்டை தொடர்பான புகைப்படங்களை https://www.facebook.com/thamarankottai தாமரன்கோட்டை.com க்கான முகநூல்(Facebook) பக்கத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். மிக அதிகமான விரும்பல்(Like)கள் பெரும் புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும். நவம்பர் மாதம் முழுவதுமாக புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம். ஒருவர் எத்தனை புகைப்படங்களை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

பெரிதாக விதிமுறைகள் ஒன்றும் இல்லை. சுய முன்னிறுத்தல்கொண்ட தனி நபர் படங்களை தவிர்க்கவும். சட்டத்திற்கு புறம்பான அல்லது அடிப்படை வாதத்தை தூண்டும் படங்கள் நீக்கப்படும். அவ்வளவுதான்.

Like and Share

தாமரங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் 2011

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி. சுபத்ரா ராஜேந்திரன் அவர்களும், ஒன்றிய குழு உறுப்பினராக திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்கண்டவர்கள் அதிகாரபூர்வ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் வழக்கம்போல் திருமதி.சுபத்ரா ராஜேந்திரன் அவர்களின் கணவர் திரு G.R அவர்களும், திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களின் கணவர் திரு .நடனம் எ நடராசன் அவர்களும் கிராம செயல்பாட்டில் ஈடுபடுவார்கள். கடந்த 15 வருடங்களில் நமக்கு கிடைத்துள்ள மூன்றாவது தலைவர் திரு G.R அவர்கள். இதற்கு முன் இந்த பதவியில் இருந்த இரண்டு தலைவர்களில் இருந்து சற்றே மாறுபட்டவர். அவர்கள் இருவரும் தாங்கள் எடுத்த முடிவிலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டார்கள். சரியோ தவறோ அதையே செயல்படுத்த முனைவார்கள். அதுவே அவர்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது. திரு G.R அவர்கள் நெளிவு சுளிவு நன்றாக தெரிந்தவர். மிக எளிதாக எவரிடமும் நட்பாகிவிடும் குணம் இவருடைய பலம். எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பது பலவீனம் . எந்த அளவிற்கு அரசின் திட்டங்களை கிராமத்தில் செயல் படுத்த முடியும் என்பது கேள்விகுறிதான். ஏனென்றால் பழிவாங்குவதில் பட்டம் வாங்கியவர்கள் நமது அரசியல்வாதிகள். பொறுத்திருந்து பார்ப்போம்.

திரு. நடனம் அவர்கள் ஆளுங்கட்சியில் இருப்பது நமக்கு பலம். கட்சி பேதங்களை மறந்து திரு G.R அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம். பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததும், ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருப்பதும் மிக எளிதாக இவருக்கு வெற்றியை தேடித் தந்தது.

ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரு.B.T. பாணி அவர்கள் தோல்வியை தேடி அவரே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததும், தவறான கணிப்பும் எளிதான வெற்றியை கோட்டை விட வைத்தது.

கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. சரியான, அர்த்தமுள்ள திட்டங்களும் கருத்துகளும் ஊராட்சி மன்ற தலைவரிடம் அதற்கான வழி காட்டுதலோடு கொண்டு சேர்க்கப்படும்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திரு A. பாலசுப்ரமணியம் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார்.

*ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு வார்டு உறுப்பினர் வாக்களிக்க செல்லவில்லை.

சரி விடுங்க…. கடுமையான மக்கள் பணியில் மறந்தாலும் மறந்திருப்பார்!!!!!!!!!!

Like and Share

கபடி போட்டியில் தாமரன்கோட்டை அபார வெற்றி!

தாமரன்கோட்டையில் 6.8.2011 மற்றும் 7.8.2011 ஆகிய இரண்டு நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது,
தங்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக,வருடா வருடம் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது,
இரவு பகலாக நடைபெற்ற இப்போட்டியில்  தாமரன்கோட்டை அணி முதல் இடத்தை தட்டிச்சென்றது,
இரண்டாம் இடத்தை  புலவஞ்சி’ம்,
மூன்றாம் இடத்தை செங்கபடுதான்காடு’ம்,
நான்காம் இடத்தை உள்ளுர் பட்டிகாடு’ம் தட்டிச்சென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாமரன்கோட்டை மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவிக்கப்படுகிறது.

Like and Share