சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரச்செடிகள்

தாமரன்கோட்டை சிவன் கோயிலில் தமிழ் சோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களுக்கான மரச்செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நட்சத்திரங்களும் கிரகங்களும் சோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தத்தமது பிறந்த நட்சத்திரம் மற்றும் கிரக நிலைகளுக்கேற்ப வழிபட உதவும் வகையில் இம்மரங்கள் நடப்பட்டுள்ளன.

அவற்றை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்

Like and Share

சிவன் கோயில் கும்பாபிஷேகம் : காணொளி

27-மே, தாமரன்கோட்டை: சிவன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளின் சிறு தொகுப்பை கீழ் காணலாம்.

விவரமான கட்டுரை, புகைப்படங்கள், காணொளிகள் வரும் நாட்களில் பதிவேற்றப்படும்.

ஜூன் 1 இணைப்பு: கீழ் காணும் காணொளிகள் தம்பாவால் பதியப்பட்டு ரமேஷினால் வலையேற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன

கும்பாபிஷேகத்திற்காக கேரளத்திலிருந்து வந்திருந்த செண்டி மேளம் பஞ்ச வாத்தியக் குழுவினர்.

அன்றைய இரவு ஊர்வலத்தின் போதான வான வேடிக்கை

ஜூன் 4 இணைப்பு: கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். மேலதிகப் படங்களுக்கு இங்கே சுட்டவும் படங்களை எடுத்து வலையேற்றியது ரமேஷ்

Thamarankottai Sivan Temple Kumbabishekam
Photos from Thamarankottai Sivan Temple Kumbabishekam
Like and Share

தீ மிதியல் 2010 காணொளி

தாமரன்கோட்டை அருள்மிகு தீக்குதித்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெரும் தீ மிதியல் திருவிழா ஆவலுடன் எதிர் பார்க்கப்படும் நிகழ்வு. இந்த ஆண்டின் தீ மிதியல் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்வின் காணொளி இதோ

காணொளியை எடுத்து உதவிய ராஜேஷ் மற்றும் ஜெயபாலனுக்கு மிக்க நன்றி.

Like and Share

தாமரையில் திமுக வேட்பாளார் பிரச்சாரம்- காணொளி

தஞ்சைத் தொகுதி திமுக வேட்பாளார் திரு பழநிமாணிக்கம் அவர்கள் கடந்த ஞாயிறு(26-ஏப்ரல்) அன்று தாமரன்கோட்டையில் பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட காணொளியின் தொகுப்பு கீழே.

Like and Share

சிங்கையில் மக்கள் கவிஞருக்கு விழா

சிங்கப்பூரில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவாக மே 1ம் தேதி கலை விழா செராங்கூன் சாலையில் அமைந்துள்ள திரு கோவிந்தசாமிப் பிள்ளை அரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இவ்விழாவில், இவ்வாண்டு நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் காணொளியை கீழே காணலாம்.

நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில

மேலும் புகைப்படங்களைப் பார்க்க

தகவல் உதவி: புயல் வெங்கட்
புகைப்படம்/காணொளி உதவி: சு வீரமணி

Like and Share

சிவன் கோயில் புனரமைப்பு காணொளி

கண்டேசுவரர் ஆலய திருப்பணி நடைபெற்று வருவதை முன்னர் தெரிவித்திருந்தோம். கோயில் கோபுரங்களின் புனரமைப்பு வேலையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

Like and Share

தீ மிதியல் காணொளி

தாமரன்கோட்டையில் ஆண்டுதோறும் ஆவலுடனும் பக்தியுடனும் எதிர்பார்க்கப் படும் திருநாள், தீ குதித்த அம்பாள் கோயிலில் நடைபெறும் தீ மிதியல் திருவிழாவாகும். பக்தர்கள் 40 நாட்களுக்கு விரதம் இருந்து தீ மிதியல் நாளன்று(ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் ஞாயிறன்று நடைபெறும்) அய்யானார் கோயிலில் இருந்து புனித நீரை குடத்தில் ஏந்தி, அதை தலையில் சுமந்து தீ குதித்த அம்பாள் சந்நிதிக்கு வருவர். அங்கே பரப்பப்பட்டிருக்கும் தீயில் நடந்து சென்று பின்னர் அம்பாளை வணங்குவர்.

அதைப்பார்ப்பதற்கு மக்கள் கூட்டமாக கூடி தீயிறங்கும் பக்தர்களை ஆதரித்தும் அம்பாளை வணங்கியும் ஆசி பெறுவார்கள். புலம் பெயர்ந்த அன்பர்களும், நேரில் காண இயலாத பிற நண்பர்களும் தீ மிதியலை கண்டு களிக்கும் நோக்கத்தோடு இந்த ஆண்டு நடைபெற்ற தீ மிதியலின் காணொளியை இங்கே இணைத்திருக்கிறோம்.

காணொளியை எடுத்து உதவிய இராஜேஷுக்கும், ஜெயபாலனுக்கும் தாமரன்கோட்டை.காம் சார்பாக நன்றிகள். இந்த காணொளியைப் பர்த்து உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதுடன், மற்றவர்களையும் இதைக் காண அழைக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

Like and Share

காணொளி : வயல் வெளி & சிவன் கோயில்

தாமரன்கோட்டையில் விவசாயம் என்பது மக்களின் வாழ்வின், கலாச்சாரத்தின், பொருளாதாரத்தின் ஆணி வேராகும். அங்கே பசுமையான நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும் நீக்கமற நிறைந்திருக்கும்.

சில மாதங்களுக்கு முன் பதியப்பட்ட இக்காணொளியில் தாமரன்கோட்டையின் வயல் வெளிகளையும் சிவன் கோயிலையும் காணலாம்.

கேள்வி: இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை உங்களால் கண்டுகொள்ள முடிகிறதா? தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Like and Share

காணொளி : 2006 மாட்டுப் பொங்கல் விழா

தாமரன்கோட்டை கீழக்காடு, ஆவுடையார் குளக் கரையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின் காணொளி.

இது பற்றி உங்களது கருத்துக்களை வரவேற்கிறோம்

Like and Share

காணொளி : தாமரையைச் சேர்ந்த நானிலவேந்தன் அப்துல் கலாமை சந்திப்பு

தாமரன்கோட்டையைச் சேர்ந்த நானிலவேந்தன் சாக்கட்டியில் தான் செதுக்கிய உருவத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் நேரில் சந்தித்து அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளியை இங்கே பார்க்கலாம்.

நானிலவேந்தன் திருப்பூரில் உள்ள தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்பக் கல்லூரியில்(NIFT-TEA) படித்து பட்டம் பெற்றிருக்கிறார். வகுப்பில் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பாட்டிருந்த அவர், கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த டாக்டர் அப்துல் கலாமை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அப்துல் கலாமை சந்தித்த பொழுது தான் சாக்கட்டியில் அப்துல்கலாமின் முகத்தை செதுக்கிய சிற்பத்தை அன்பளிப்பாக கொடுத்தார். அன்பளிப்பை பெற்றுக்கொண்ட அப்துல் கலாம், “உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்றும் ”அன்பளிப்பிற்கு நன்றி” என்றும் நானில வேந்தனிடம் கூறினார்.

மாணவர்களும் இளைஞர்களும் போற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்து, அன்பளிப்பு கொடுத்து, அவரிடம் பாராட்டு பெற்றது தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம் என நானிலவேந்தன் தெரிவிக்கிறார்.

நானில வேந்தனின் திறமைக்கும் முயற்சிக்கும் எமது பாராட்டுக்கள்.

Like and Share