சிவன் கோயில் பிரச்சனை – வாசகர் கருத்து

சிவன் கோயில் திருவிழாவின் பொழுது என்ன பிரச்சனை என்று முழுவதுமாக எமக்கு தெரியாது. ஆனால் இது தொடர்பாக வாசகர் ஒருவர் அனுப்பிய பொதுவான கருத்தை அவரது பெயர் நீக்கப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

[தாமரன்கோட்டையில்] ஏன் இப்படி செய்கிறார்கள், உள்ளூர் லோக்கல் பொலிடிக்ஸ் அரசியல் செய்ய சிவன் கோவிலா கிடைத்தது. அநியாயங்களை தட்டி கேட்க கடவுள் வருவார். ஆனால் இப்படி செய்யும் இவர்களை யார் கேட்பார் என்று தெரியவில்லை. தாமரன்கோட்டை இனைய தளம் நீங்கள்தான் பராமரித்து கொண்டுள்ளிர்கள் எனவே தவறுகளையும் சுட்டி காட்டுங்கள். [மக்கள்] முன்னேற நாமும் படிக்கட்டாக இருப்பதில் தவறில்லை. அரசியல் வருடம்தான், ஆனால் ஆயுள் அப்படி இல்லை இறைவனின் சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி அவஸ்தை பட வேண்டாம்.

Like and Share

ஜெயா தொலைக்காட்சியில் தாமரன்கோட்டை

ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜூன் 14(திங்கள்) மற்றும் 15(செவ்வாய்) காலை அருள் நேரம் நிகழ்ச்சியில்(6:00 – 6:30 AM) தாமரன்கோட்டை சிவன் கோவில் கும்பாபிஷேகத்தின் ஒளிப்பதிவு காண்பிக்கப் படும் என ஜெயா டிவியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை பார்க்கவும். இணைய வசதி இல்லாத மற்றவர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜெயா தொலைக்காட்சியின் மூலம் தமிழகம் முழுவதும் இக்கும்பாபிஷேகத்தை காண வழிவகை செய்த M திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றிகள்.

தகவல் உதவி : பாலச்சந்தர்

Like and Share

சிவன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரச்செடிகள்

தாமரன்கோட்டை சிவன் கோயிலில் தமிழ் சோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களுக்கான மரச்செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நட்சத்திரங்களும் கிரகங்களும் சோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தத்தமது பிறந்த நட்சத்திரம் மற்றும் கிரக நிலைகளுக்கேற்ப வழிபட உதவும் வகையில் இம்மரங்கள் நடப்பட்டுள்ளன.

அவற்றை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்

Like and Share

சிவன் கோயில் கும்பாபிஷேகம் : காணொளி

27-மே, தாமரன்கோட்டை: சிவன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளின் சிறு தொகுப்பை கீழ் காணலாம்.

விவரமான கட்டுரை, புகைப்படங்கள், காணொளிகள் வரும் நாட்களில் பதிவேற்றப்படும்.

ஜூன் 1 இணைப்பு: கீழ் காணும் காணொளிகள் தம்பாவால் பதியப்பட்டு ரமேஷினால் வலையேற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன

கும்பாபிஷேகத்திற்காக கேரளத்திலிருந்து வந்திருந்த செண்டி மேளம் பஞ்ச வாத்தியக் குழுவினர்.

அன்றைய இரவு ஊர்வலத்தின் போதான வான வேடிக்கை

ஜூன் 4 இணைப்பு: கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். மேலதிகப் படங்களுக்கு இங்கே சுட்டவும் படங்களை எடுத்து வலையேற்றியது ரமேஷ்

Thamarankottai Sivan Temple Kumbabishekam
Photos from Thamarankottai Sivan Temple Kumbabishekam
Like and Share

சிவன் கோயில் நன்கொடையாளர் விபரம்

19-07-08 வரையிலான நன்கொடையாளர்களின் விபரம்: பாகம் மூன்று

எண் பெயர் ஊர் தொகை
1. பேராவூரணி அன்பழகன் 15,000
2. A. வைரவ சுந்தரம் தாமரன்கோட்டை மேலக்காடு 20,000
3. பன்னீர் செல்வம் தம்பிக்கோட்டை கீழக்காடு 1,000
4. R. கலைச்செல்வன் காசங்காடு நடுத்தெரு 5,000
5. Dr. R. K. P. சீனிவாசன் 2,000
6. அய்யப்பன் மளிகை தாமரன்கோட்டை 2,500
7. R. ராஜரத்தினம் ஒ. பெ. தலைவர் சேதுபாவசத்திரம் 2,000
8. V. S. தர்மராஜ் தேவர் த. மேலக்காடு 5,000
9. அசோக்குமார் பேரூராட்சி பெ தலைவர் 3,000
10. A. பானிவேல் VAO தாமரன்கோட்டை 5,000
11. A.K. அண்ணாமலை கலர் லேப் பட்டுக்கோட்டை 5,000
12. M. R. தாமோதரன் தாமரன்கோட்டை 5,000
13. N. அய்யாத்துரை தாமரன்கோட்டை 5,000
14. பழஞ்சூர் K. செல்வம் ( 1 கி வெள்ளிக்காக) பழஞ்சூர் 23,000
15. சந்திரா மரவாடி ( தட்டுக்கல் 1050 க்காக) பட்டுக்கோட்டை 10,500
16. J. சம்பத், ஆசிரியர் செங்கப்படுத்தான்காடு 2,000
17. VNS எஸ்டேட் N R நடராஜன் 15,000
18. P வைத்திலிங்கம் தாமரன்கோட்டை 10,000
19. M R முருகேசன் தாமரன்கோட்டை 25,000
20. P பன்னீர்செல்வம், சார் பதிவாளர் பட்டுக்கோட்டை 10,000
21. S. கடம்பநாதன் பட்டுக்கோட்டை 3,000
22. எஸ். பாரத் பட்டுக்கோட்டை 5,000
23. கே. ராஜமாணிக்கம் பட்டுக்கோட்டை 1,000
24. ராமதாஸ், ஜெயம் மெடிக்கல்ஸ். தாமரன்கோட்டை கீழக்காடு 7,000
25. மு. கி. முத்து மாணிக்கம், ஒன்றிய தி.மு.க செயலாளர் சேதுபாவ சத்திரம் 5,000
26. என். செல்வரா, மாவட்ட தி.மு.க செயலாளர் பேராவூரணி 5,000
27. கே கண்ணன் திருச்சிற்றம்பலம் 5,000
28. வி. திருவேங்கடம், ஒப்பந்தக்காரர் ஆவிக்கோட்டை 5,000
29. A. பாலசுப்ரமணியம் & சன்ஸ் தாமரன்கோட்டை மேலக்காடு 15,000
30. R. தென்னரசு பிச்சினிக்காடு 10,000
31. R. முருகேசன் ராசியங்காடு 5,000
32. சுவாமி நடராஜன் தாமரன்கோட்டை 10,000
33. ஜெ. பழனிவேலு (பளிங்கு கல் 900 ச அடிக்காக) தாமரன்கோட்டை கீழக்காடு 40,000

முன்னர் பதிப்பிக்கப்பட்ட நன்கொடையாளர் விபரத்தை இங்கே காணலாம்

யாருடைய பெயராவது விடுபட்டிருப்பினோ, தகவல் தவறாக இருப்பினோ, பின்னூட்டம்/மின்னஞ்சல்/தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கவும்.

Like and Share

சிவன் கோயில் புனரமைப்பு காணொளி

கண்டேசுவரர் ஆலய திருப்பணி நடைபெற்று வருவதை முன்னர் தெரிவித்திருந்தோம். கோயில் கோபுரங்களின் புனரமைப்பு வேலையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

Like and Share

சிவன்கோயில் திருப்பணிகள் இறுதி கட்டம்

கண்டேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகள் பெரும்பான்மை முடிவுக்கு வந்துள்ளன.

தாமரன்கோட்டை அருள்மிகு கண்டேசுவரர் ஆலய திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்தது.  சற்றேறக்குறைய 80 விழுக்காட்டுப் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் 20 விழுக்காட்டுப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன என்றும் திருப்பணிக் குழுத் தலைவர் திரு சி. முருகப்பன் அவர்கள் கூறினார்.

வரும் வைகாசித் திங்கள் ஆலயத்திற்கு குடமுழக்கு நடைபெரும் என்றும், குட முழக்கு விழாவின் பொழுது ஒரு கால யாக சாலை பூஜைக்கு சுமார் 50 ஆயிரம் செலவு வீதத்தில் சுமார் ஆறு காலம் சிறப்பாக யாக சாலை பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஊருக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் கோயில் மறுசீரமைக்கப் பட்டு செய்யப்படும் இந்த குடமுழக்கு விழாவிற்கு மேலும் நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன என்று கூறிய அவர் நன்கொடைகள் அனுப்ப கீழ்கண்ட முகவரியைத் தொடர்புகொள்ள வேண்டிக்கொண்டார்.

C. முருகப்பன்
தாமரன்கோட்டை
தலைவர், திருப்பணிக்குழு,
போன்: 04373 – 283141
செல்: 99429 25933

Like and Share

தாமரை அருள்மிகு கண்டேசுவரர் ஆலயம்

எழில்மிகு ஊராகிய‌ தாம‌ர‌ங்கோட்டையில் ஊரின் ஈசான்ய‌ மூலையில் அம‌ர்ந்து ம‌க்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் தெய்வ‌மாக‌ விள‌ங்கும் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத‌ கண்டேஸ்வர சுவாமியின் திருத்த‌ல‌ம்தான் இது. இத்த‌ல‌ம் ஊரின் பிர‌தான‌ சாலையிலிருந்து சுமார் 1/2 கி.மீ தூர‌த்தில் வாட்டாகுடி செல்லும் சாலைய‌ருகே அமைந்துள்ள‌து.

தல வரலாறு:

இன்ன நற்றலம் தாமரங்கோட்டை என்றிசைப்ப
வின்னதி யாவையும் தருமய நகரின் மிக்கிலங்கு
மன்னு சீகண்ட நாதனாங்கருள் செயல் வாம
மன்னு தாயறம் வளர்த்த நாயகி பெயர் வயக்கும்

அறம் வளர்ப்பது நாமிரு நாழிநெல்லாலெத்
திறனிவர்க் கோடச்செயல் விரிக்குதுமெனத் தெளிந்தம்
முறையளித்த நெல்லால் உலகூட்டு மூதகசீர்
நிறைவளர்த்த வேளாளர் கூட்டம் அவணிலாவும்
….

சூதனவனபுராணம் – இராமன் மந்திரோபதேசம் பெற்ற
சருக்கம்

திருப்பாற்கடலில் அமுதம் பெறவேண்டி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்ற அரவினை நாணாகவும் கொண்டு கடைந்த காலத்தில் திருப்பாற் கடலினின்றும் விடம் எழுந்து பரவியது. அவ்விட வேகந்தாங்க முடியாமல், தேவர்கள் கூட்ட தலைமையான திருமாலின் மேனி கருகியதால், தேவர்கள் கூட்டத்தினருடன் ஓடி அலைந்து, இத்தலத்து வந்து சிவபெருமானிடம் முறையிட்டு விடவேகத்தினின்றும் அனைவரையும் காக்க வேண்டினர்.பெருமான் மனமிறங்கி, அவ்விடத்தினை திரட்டி சுருக்கி சிறிதாக்கி உண்டார். அருகிலிருந்த அம்பிகை உலகம் உய்யக் கருதியும் பெருமானின் உடலுள் விடம் செல்லாதிருக்கவும் இறைவன் கண்டத்தைப் பிடித்து தடுத்தருளினார். விடம் கண்டத்திலேயே தங்கியதால், “கண்டேசுவரர்” எனும் திருநாமம் பெற்று விளங்கி தேவர்கள் முதல் அனைவருக்கும் அருள் புரிந்து, மீண்டும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றுய்யவும் அருளினார். இறைவி அறம் வளர்த்த நாயகி
என்னும் திருநாமத்தோடு விளங்கிவருகிறார்.

த‌ல அமைப்பு:

இத்த‌ல‌ம் பழ‌ம்பெறும் கால‌த்தில் க‌ட்ட‌ப‌ட்டதால் அக்கால‌
நாக‌ரீக‌த்தின்ப‌டி ச‌துர அமைப்பில் அமைந்துள்ள‌து.

தல அமைப்பு வரைபடம்
தல அமைப்பு வரைபடம்

இவ்வால‌ய‌த்துள் மூன்று முக்கிய‌ ச‌ன்னிதான‌ங்கள் உள்ள‌ன‌. ந‌டுவில் சிவ‌ன், அம்பாள், பைர‌வர் கொண்ட‌ பிர‌தான‌ ச‌ன்னிதான‌மும் இவ‌ற்றின் பின்புறம் இரும‌றுங்கிலும் விநாய‌கர் மற்றும் முருக‌ன் ச‌ன்னிதான‌மும் அமைந்துள்ள‌ன. பிர‌தான‌ ச‌ன்னிதானத்தின் முன்புற வலதுபக்கத்தில் ந‌வ‌க்கிர‌கங்க‌ளும் ம‌ற்றும் சில‌ தெய்வ‌ங்க‌ளும் உள்ள‌ன‌. இட‌துப‌க்க‌த்தில் ம‌ட‌ப்ப‌ள்ளி அமைந்துள்ள‌து. பிர‌தான‌ ச‌ன்னிதானத்தில் இத்த‌லத்தின் மூலவரான அருள்மிகு கண்டேஸ்வர சுவாமியும் அதன் அருகருகே அம்பாள் மற்றும் பைரவர் அறையும் உள்ளது. இக்கோயிலின் இராஜ‌கோபுர‌ம் ஐந்து நிலைக‌ளை கொண்ட‌து. சுதை வேலைபாடுக‌ள் குறைவாக‌ இருந்தாலும் அன்னார்ந்து பார்க்க‌ கைக‌ள் இர‌ண்டும் குவிய‌ ம‌றுப்ப‌தில்லை.

த‌ல‌ச் சிற‌ப்பு:

எத்த‌ல‌த்திலும் இல்லாத‌ சிற‌ப்பு இத்த‌ல‌திற்கு உண்டு. சிவால‌ய‌ங்க‌ளில் காவ‌ல் தெய்வ‌மாக‌ விள‌ங்கும் பைர‌வ‌ர் பிர‌தான‌ ச‌ன்னிதானத்தின் சுவாமி அம்பாள் அருகே அவைக‌ளை போன்றே த‌னிஅறையில் சுமார் ஐந்து அடி உய‌ர‌த்தில் கால‌பைரவ கோல‌ம்பூண்டு அருள்பாலிக்கிறார். இவ‌ரை பிள்ளைபேறு இல்லாத‌ த‌ம்ப‌தியின‌ர் வ‌ழைப் ப‌ழ மாலை அணிவித்து அபிஷேக‌ ஆராத‌னை செய்து இறைவ‌னின் திருவ‌ருளை பெறுகிறார்க‌ள். மேலும் பைர‌வருக்கு உக‌ந்த‌ நாளான‌ திங்க‌ள் ம‌ற்றும் வெள்ளிக் கிழமைகளில் வடைமாலை சாத்தியும் ஆராதிக்கின்றனர். இவ‌ருக்கு உக‌ந்த‌ திதியான‌ பௌர்ண‌மி, அம்மாவாசை, ந‌வ‌மி திதிக‌ளிலும் சிறப்பு அபிஷேக‌ ஆராத‌னை செய்து பைர‌வ‌சுவாமியின் திருவ‌ருளை பெறும் ப‌க்த‌ர்க‌ள் ப‌ல‌ர். இங்கு கிருஷ்ண‌ப‌ட்ச‌த்தில் வ‌ரும் ந‌வ‌மிதிதிய‌ன்று அபிஷேக‌ம் ந‌ட‌த்தும் குழு ஒன்றும் செய‌ல்ப‌டுகிற‌து. மேலும் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ப‌க்த‌ர்கள் குழு சேர்ந்து அபிஷேக‌ ஆராத‌னை செய்வது மட்டுமல்லாமல் பெரும் அளவில் அன்னதானமும் செய்கின்றனர்.

வழிபாடு:
இத்த‌ல‌த்தில் தினசரி பின்வ‌ரும் கால அள‌வோடு ஐந்து கால பூஜைகள் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன.

காலை ந‌டைதிற‌ப்பு‍‍‍‍‍:6.00க்கு
1)ச‌ந்தியா வ‌ந்த‌ன‌ம்:6.30
2)காலை பூஜை :9.00
3)உச்சிகால‌ம் :11.00
காலை ந‌டைசாத்த‌ப‌டுவ‌து :11.30
மாலை ந‌டைதிற‌ப்பு‍‍‍‍‍ :3.00க்கு
4)ஷாய‌ர‌ட்சை :6.00
5)அர்த‌ஜாம‌ம் :8.30
இர‌வு ந‌டைசாத்த‌ப‌டுவது:8.45

விழாகாலங்களில் இந்த கால அளவு மறுதலுக்குட்பட்டது.

கடைசிகால‌ பூஜையின் போது குறைந்தது இரண்டு துறவிகளுக்கேனும் அன்னம் வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்கு தமிழ் மற்றும் வடமொழியில் அர்ச்சனை செய்யப்படுகிறது. மாலை 6.30 ம‌ணி முத‌ல் 7.00
ம‌ணிவ‌ரை த‌மிழ் திரும‌றைப்பாக்கள் ஓதுவார் மூர்த்தியால் பாட‌ப்ப‌டுகிற‌து. சுற்றுவ‌ட்ட பகுதி கோயில்களில் எந்த கோயிலிலும் இல்லாது இந்த கோயிலில் மட்டும் திரும‌றைப்பாக்கள் பாட‌ப்ப‌டுவ‌து ஊர் ம‌க்க‌ள் தாங்க‌ள் செய்த‌ புண்ணிய‌மாக‌ க‌ருதுகிறார்க‌ள். இங்கு உள்ள‌ ஓதுவார் ப‌ணிஓய்வு பெற்ற‌போதிலும்,அர‌சால் மாற்று ஓதுவார் நியமிக்க‌ப‌டாத நிலையிலும் அனுப‌வ‌ம் மிகுந்த‌ அதே ஓதுவார் கொண்டு தொட‌ர்ந்து திரும‌றைபாசுரங்கள் பாடப்படுவது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுதும்
திருப்பள்ளியெழுச்சி காலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை ந‌டைபெறுகிற‌து. இவ்வ‌ழிபாட்டில் சுவாமிக‌ளுக்கு அபிஷேக‌ ஆர‌த‌னை செய்தும் தமிழ் திரும‌றைப் பாசுரங்கள் பாடியும் இறைவனை பள்ளியெழுப்புகிறார்கள்.

த‌ல‌ விருச்ச‌‌ம்:
த‌ல‌விருச்ச‌ம் என‌ குறிப்பிடும்ப‌டியாக‌ எதுவும் இல்லாது இருந்தாலும், இவ்வால‌ய‌ பிர‌கார‌ங்க‌ளை சுற்றிலும் கிடைப்ப‌தற்கு அரிதான‌ முக்கிய‌ ம‌ர‌ங்க‌ளான‌ வண்ணி ம‌ற்றும் வில்வ‌ம் ம‌ர‌ம் உள்ள‌ன‌. மேலும் கோயிலின் அருகாமையில் ந‌ந்த‌வ‌ன‌ம் ஒன்றும் அமைக்கப்ப‌ட்டுள்ளது. இங்கிருந்து அனைத்துகால‌ பூஜைக‌ளுக்கும் ம‌ல‌ர்க‌ள் எடுக்கப‌டுகிற‌து. த‌ற்ச‌ம‌ய‌ம் ப‌ராம‌ரிப்பின்றி அழியும் தருவாயில் உள்ள‌து.

திருக்குள‌ம்:
ஆல‌ய‌ வாயிலின் ச‌ற்றுமுன்பே தாம‌ரைபூக்க‌ள் நிறைந்த‌ குளம் உள்ள‌து. இக்குள‌ம் கிட்டதட்ட சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத‌ன் மையப்ப‌குதி சுமார் இருப‌து அடி ஆழ‌ம் கொண்ட‌தாகும். இக்குள‌க் க‌ரையின் அர‌ச‌ம‌ர‌த்தடியில் தான் வ‌ல்லப விநாய‌க‌ர் ஆல‌ய‌ம் அமைந்துள்ள‌து. இவ்வால‌ய‌ம் முழுமுத‌ற் க‌ட‌வுளான‌ மூத்த‌வ‌னை வ‌ழிப‌ட்டு பின் சுவாமியின் ஆல‌ய‌திற்கு செல்லும் வ‌கையில் அமைந்துள்ள‌து. இங்கு ம‌ணமாகாத‌ க‌ன்னிய‌ர்க‌ள் அதிகாலையில் எழுந்து அர‌ச‌ ம‌ர‌திற்கு த‌ண்ணீர்
ஊற்றி ம‌ர‌த்தை வ‌ல‌ம்வ‌ந்து முழும‌ன‌தோடு இறைவ‌னை வ‌ழிப‌ட‌வே விரைவில் ம‌ண‌மாக‌ பெறுவ‌து திண்ணம். மேலும் இக்குள‌ம் எக்கால‌த்திலும் வ‌ற்றா த‌ண்ணீர் கொண்டு விள‌ங்குவதால் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் திவ்ய நீர்நிலையாக‌ விள‌ங்குகின்ற‌து.

விழாக்க‌ள்:
சைவ‌ச‌ம‌ய‌த்தின் முக்கிய‌ விழாவாக‌ க‌ருத‌ப்ப‌டும் சிவ‌ராத்திரி,
திருவாதிரை, ந‌வ‌ராத்திரி என‌ அனைத்து விழாக்க‌ளுமே த‌னித்த‌னியே ஒவ்வொரு வ‌கைய‌ராக்களை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் அதற்கென‌ பொருப்பேற்று அத‌னை செவ்வ‌னே செய்து வ‌ருகிறார்க‌ள். [வ‌கைய‌ரா ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ விழாக்கள் விவரம் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தால் விவ‌ர‌ங்க‌ள் வ‌ர‌வேற்க்க‌ப்ப‌டுகிற‌து.]

சிவ‌ராத்திரி: தாண்ட‌வேளாள‌ர் வ‌கைய‌ரா
திருவாதிரை: ஆண்டிவேளாள‌ர் வ‌கைய‌ரா
ந‌வ‌ராத்திரி : தெற்குதெரு வ‌கைய‌ரா

திருவிழா:
ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாத‌ம் விசாக‌ ந‌ட்ச‌த்திர‌ தின‌த்த‌ன்று திருவிழா ந‌டைபெறுகிற‌து. இவ்விழா ஒன்ப‌து நாட்க‌ள் முன்பே தொட‌ங்கி தொட‌ர்ந்து ப‌த்து நாட்க‌ளுக்கு ந‌டைபெறுகிற‌து. இவ‌ற்றுள் தேர், தெப்ப‌ம், காவ‌டி, என‌ ப‌ல்வேறு வ‌கையில் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து. [நிக‌ழ்ச்சி நிர‌ல் பற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்றன.]

மூர்த்தியும் கீர்த்தியும்:
இத்த‌ல‌த்தின் மூர்த்தி உருவ‌மும் அருவ‌மும் இல்லாத லிங்க‌ரூப‌த்தில் விள‌ங்குகிறார். இந்தலிங்கம் சுமார் மூன்று அடி உயரம் கொண்டதாகும். இம்மூர்த்தி மும்மூர்த்திக‌ளில் அழிக்கும் க‌ட‌வுளுமான‌, ப‌ல்வேறு திருவிளையாட‌ல்க‌ளை புரிப‌வ‌ருமான‌ சிவ‌ன் த‌ன்மிட‌ரிலே ஆழ‌கால‌விட‌த்தை அட‌க்கி ஆத‌லால் கண்டேஸ்வரன் என‌ பெயரும்பெற்று த‌ன் அடியார்க‌ளின்
ஊழ்வினைத‌னை ம‌ழிய‌ச்செய்து த‌ன்திருப்ப‌த‌ம் காட்டி திருவ‌ருள் புரியும் கோமானாக‌ விள‌ங்குகிறார். முன்செய்த‌ வினையால் எழும் இன்ன‌லை, அல்லலை ந‌ழிய‌ச்செய்யும் அவ‌ரின் எல்லையில்லா திருவ‌ருளை இத்த‌ல‌திற்கு வந்தால் க‌ண்டுகொள்ளலாம். உமைக்கு ச‌ரிநிக‌ர் ‌பாக‌ம் த‌ந்த‌ அந்த‌ நாத‌னின் உமைய‌வளான‌ அருள்மிகு அற‌ம்வ‌ள‌ர்த்த‌ நாய‌கி நின்ற‌ கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

அடியார்க‌ள் குழு:
இங்கு ஏராள‌மான‌ அடியார்க‌ள் த‌ங்க‌ளுக்கென‌ குழுஅமைத்து இறைவ‌னுக்கு தொண்டாற்றி வ‌ருகிறார்க‌ள். அவ‌ற்றுள் பிர‌தொஷ‌ வ‌ழிபாட்டு குழு, மார்க‌ழி திருப‌ள்ளியெழுச்சி குழு, ஐய‌ப்ப‌
ப‌க்த்த‌ர்கள் குழு , க‌ந்த‌ர் ச‌‌ஷ்டி முருக‌ ப‌க்த்த‌ர்க‌ள் குழு ஆகியவை முக்கியமானவை.

Like and Share

சிவன் கோவில் திருப்பணி வரவு செலவு அறிக்கை

அருள்மிகு கண்டேசுவர சுவாமி திருக்கோயில்

திருப்பணி வரவு செலவு அறிக்கை (28-01-2007 முதல் 19-07-2008 முடிய)

வரவின விபரம் (சுருக்கமாக)

வ.எண் வரவின தலைப்பு தொகை
1. உபயதாரர் மூலம் வரவு 5,31,000
2. நன்கொடை வரவு 3,88,000
3. வங்கி வட்டி முலம் வரவு 748
4. 1600 செங்கல் விற்று திரும்ப வரவு 3,300
கூடுதல் 9,23,048

செலவின விபரம்

வ.எண் செலவின தலைப்பு தொகை
1. சிமெண்ட் 81,022
2. ஆர்.எஸ்.பதி மரம் 35,154
3. மணல் 10,320
4. கயறு 2,000
5. செங்கல் 19,800
6. பிலக் போர்டு 1,000
7. நன்கொடை சீட்டு மற்றும் தல வரலாறு அச்சுக்கூலி 4,050
8. மொசைக் மாவு 850
9. காப்பர் கம்பி 11,864
10. மணல் வலை மற்றும் சாந்து சட்டி வகை 700
11. பிரஸ்,குடம்,மண் வெட்டி வகை 3,010
12. மதில்சுவர் வேலை(உடைந்தது) 4,250
13. குதிரை அடித்தது 650
14. அலுவலக சுவர் இடித்தது 16,380
15. கட்டுமானப் பணி வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்த செலவு 5,000
16. ஆர்.டி.ஓ அலுவலக செலான் செலுத்திய வகையில் 7,700
17. பிளம்பர் வேலைகள் 1,100
18. திருப்பணிக்காக ஓஸ் பைப் வாங்கிய வகையில் 1,255
19. வங்கி பிடித்தம் 217.40
20. திருக்கோயில் கட்டுமான பணிக்காக பகுதி பட்டுவாடா ஸ்தபதி வசம் அளித்தது 3,75,000
கூடுதல் 5,81,322.40
முடிவு இருப்பு 3,41,725.60
ஆககூடுதல் 9,23,048.00

உபயதாரர் மூலம் வரவு

வ.எண் உபயதாரர் தொகை
1. ஆர்.வீரப்பன், தாமரங்கோட்டை (அருள்மிகு முருகன் சன்னதி) 70,000
2. எஸ்.சரவணன், தாமரங்கோட்டை(கத்தார்) அம்பாள் சன்னதி 50,000
3. ஆர்.தண்டாயுதம் மூலம்(துபாயிலிருந்து) 50,000
4. சி.முருகப்பன்,தாமரங்கோட்டை 50,000
5. டாக்டர்.எம்.செந்தில்,பி.வி.எஸ்.ஸி(பைரவர் சன்னதி) 37,000
6. என்.ஆர்.ரெங்கராஜன்,எம்.எல்.ஏ.,விநாயகர் சன்னதி 25,000
7. வணங்காமுடி,சென்னை 20,000
8. ஏ.எம்.மணிமாறன்,சு.நா.புரம் 10,000
9. கே.செல்வம்,பழஞ்சூர் 10,000
10. பி.நடனசபாபதி,தாமரங்கோட்டை 10,000
11. உலகநாதன்,ஒப்பந்தக்காரர்,தஞ்சை 10,000
12. ஜி.வி.கோவிந்தராஜ்,தாமரங்கோட்டை 10,000
13. ஏ.ஆர்.எம்.கோவிந்தராஜ்,ஆலத்தூர் 10,000
14. சா.திருநாவுக்கரசு,அரசு பிளாசா,பட்டுக்கோட்டை 10,000
15. வி.இராமதாஸ்,ஜெயம் மெடிக்கல்ஸ,பட்டுக்கோட்டை 10,000
16. டாக்டர்.நியூட்டன்,பட்டுக்கோட்டை 5,000
17. கோவி.முருகானந்தம் 5,000
18. வழக்கறிஞர். எம். செல்வராஜ், பி.ஏ., பி.எஸ்., பட்டுக்கோட்டை 5,000
19. எம்.பக்கிரிசாமி கண்டியர்,பழஞ்சூர் 5,000
20. டாக்டர்.அசோகன்,பட்டுக்கோட்டை 5,000
21. டாக்டர்.கூத்தப்பெருமாள்,பட்டுக்கோட்டை 5,000
22. டாக்டர்.பாலகிருஷ்ணன்,பட்டுக்கோட்டை 5,000
23. பாபு நடராஜன்,பட்டுக்கோட்டை 5,000
24. ஜி.ராமநாதன்(ஜி.ஆர்),வடகாடு 5,000
25. வி.பழனித்துரைதேவர் & சன்ஸ்,வாட்டாகுடி 5,000
26. டி.ராஜா,மான்னங்காடு 5,000
27. பி.பாலசுப்ரமணியன்,லாரல் பள்ளி,வடகாடு 5,000
28. எம்.கே.செந்தில்,கீழக்காடு 5,000
29. வி.முத்துக்குமார்,ஒப்பந்தக்காரர்,பேராவூரணி 5,000
30. ஜே.பி.எர்த்.மூவர்ஸ்,பட்டுக்கோட்டை 5,000
31. டாக்டர்.சாமி அய்யர்,பட்டுக்கோட்டை 5,000
32. ராஜா சில்க் பேலஸ்,பட்டுக்கோட்டை 5,000
33. பி.மேகநாதன்,பரக்கலக்கோட்டை/td> 5,000
34. எம்.கே.சேதுராமன்,த.கீழக்காடு 5,000
35. டாக்டர்.செல்லப்பன் 5,000
36. டாக்டர்.ராஜகோபால் 5,000
37. எம்.ஆர்.முருகேசன்,தாமரங்கோட்டை 5,000
38. ஜி.சந்துரு தேவர் & சன்ஸ்,த.வடகாடு 5,000
39. சுப.சேகர்,ஒன்றிய திமுக செயலாளர்,பேராவூரணி 5,000
40. டாக்டர்.வி.ராமச்சந்திரன் 5,000
41. டாக்டர்.ராஜேஸ்வரி பிரகாஷ் 5,000
42. பி.ஆர்.என்.பாலகிருஷ்ணன்,வாட்டாக்குடி 3,000
43. கே.கே.ஜயப்பன்,பரக்கலக்கோட்டை 2,000
44. டாக்டர்.கே.அமுதா,செங்கப்படுத்தான்காடு 2,000
45. என்ஜினியர்.தர்மலிங்கம்,பட்டுக்கோட்டை 2,000
46. எம்.மனோகர்,பிச்சினிக்காடு 2,000
47. வி.காத்தமுத்து,தாமரங்கோட்டை 1,000
48. ஜி.குமரன்,தாமரங்கோட்டை 1,000
49. ஏ.செந்தில்நாதன்,பொன்னவராயன்கோட்டை 1,000
50. ஜி.செந்தில்,பட்டுக்கோட்டை 1,000
51. வ.வி.குமார்,பொன்னவராயன்கோட்டை 1,000
52. பாலகுமார்,ஒப்பந்தக்காரர்,பட்டுக்கோட்டை 1,000
53. வி.செல்வராஜ்,துவரங்குறிச்சி 500
54. பட்டு தேவர்,த.வடகாடு 500
55. ஜோதி ராமலிங்கம் 500
56. லெட்சுமணன்,சென்னை 500
கூடுதல் 5,31,000
செங்கள் விற்று திரும்ப வரவு 3,300
வங்கிவட்டி(31.3.2008) 748
நன்கொடை வரவு 3,88,000
ஆகக் கூடுதல் 9,23,048

நன்கொடையாளர்கள் விபரம் II

வ.எண் நன்கொடையாளர்கள் விபரம் தொகை
1. ராஜசேகரன் சுசீலா(சிங்கப்பூர்) 10030.40
2. ராஜசேகரன் சுசீலா (விநாயகர் புராஜெக்ட் ஸ்பெஷல்) 26443.77
3. பழனிவேல் அமுதா(சிங்கப்பூர்) 6079.03
4. எம்.கல்யாணசுந்தரம்(தாமரங்கோட்டை) 5623.10
5. கே.குமரன் த/பெ குழந்தைவேலு(தாமரங்கோட்டை) 5623.10
6. பி.வைரவசுந்தரம் (சிங்கப்பூர்) 5623.10
7. சண்முகம் மேனகா (சிங்கப்பூர்) 5623.10
8. சுப்ரமணியம் குணசுந்தரி (சிங்கப்பூர்) 5075.99
9. கே.திருச்சிற்றம்பலம்(தாமரங்கோட்டை) 5075.99
10. மதியழகன் ரெஜினா (சிங்கப்பூர்) 5623.10
11. ஆர்.வி.சுப்பிரமணியன்(தாமரங்கோட்டை) 5623.10
12. இ.கோவியகுமரன்(சிங்கப்பூர்) 5075.99
13. பி.சக்திவேல்(உள்ளூர் புதுக்கோட்டை) 5075.99
14. இளையராஜா சுபாஷினி(சிங்கப்பூர்) 5075.99
15. வீரமணி ஜெயந்தி(சிங்கப்பூர்) 6079.03
16. தனபால் சுமதி(சிங்கப்பூர்) 5075.99
17. வினைதீர்த்தான்(காசங்காடு) 10151.98
18. வைத்திலிங்கம்(மன்னங்காடு) 10151.98
19. ராணி (த/பெ சோமசுந்தரம்) 5075.99
20. நடராஜன் அன்னலெட்சுமி(சிங்கப்பூர்) 6079.03
21. ஜெயராமன் பத்மினி(சிங்கப்பூர்) 6079.03
22. சிவபிரகாஷ் ப்ரீத்தி(சிங்கப்பூர்) 5075.99
கூடுதல் 155440.75

குறிப்பு: மேற்கண்ட அறிக்கையில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது பிழையாக இருந்தாலோ admin@thamarankottai.com என்ற முகவரிக்கு தெரிவிக்கவும்

Like and Share

சிவன் கோயில் தல புராண விளக்கம், திருப்பணி அறிவிப்பு

தல புராணம் விளக்கம்

இன்ன நற்றலம் தாமரங்கோட்டை என்றிசைப்ப
வின்னதி யாவையும் தருமய நகரின் மிக்கிலங்கு
மன்னு சீகண்ட நாதனாங்கருள் செயல் வாம
மன்னு தாயறம் வளர்த்த நாயகி பெயர் வயக்கும்

அறம் வளர்ப்பது நாமிரு நாழிநெல்லாலெத்
திறனிவர்க் கோடச்செயல் விரிக்குதுமெனத் தெளிந்தம்
முறையளித்த நெல்லால் உலகூட்டு மூதகசீர்
நிறைவளர்த்த வேளாளர் கூட்டம் அவணிலாவும்
….

சூதனவனபுராணம் – இராமன் மந்திரோபதேசம் பெற்ற சருக்கம்

திருப்பாற்கடலில் அமுதம் பெறவேண்டி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையை மத்தாகவுவும் வாசுகி என்ற அரவினை நாணாகவும் கொண்டு கடைந்த காலத்தில் திருப்பாற்கடலினின்றும் விடம் எழுந்து பரவியது. அவ்விட வேகந்தாங்க முடியாமல், தேவர்கள் கூட்ட தலைமையான திருமாலின் மேனி கருகியதால், தேவர்கள் கூட்டத்தினருடன் ஓடி அலைந்து, இத்தலத்து வந்து சிவபெருமானிடம் முறையிட்டு விடவேகத்தினின்றும் அனைவரையும் காக்க வேண்டினர்.பெருமான் மனமிறங்கி, அவ்விடத்தினை திரட்டி சுருக்கி சிறிதாக்கி உண்டார். அருகிலிருந்த அம்பிகை உலகம் உய்யக் கருதியும் பெருமானின் உடலுள் விடம் செல்லாதிருக்கவும் இறைவன் கண்டத்தைப் பிடித்து தடுத்தருளினார். விடம் கண்டத்திலேயே தங்கியதால், “கண்டேசுவரர்” எனும் திருநாமம் பெற்று விளங்கி தேவர்கள் முதல் அனைவருக்கும் அருள் புரிந்து, மீண்டும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றுய்யவும் அருளினால்,இறைவி அறம் வளர்த்த நாயகி என்னும் திருநாமத்தோடு விளங்கிவருகிறார்.

ஆலயச் சிறப்புகள்

எவ்வாலயத்திலும் இல்லாவகையில் அருள்மிகு பைரவர் ஆலய மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.பிரார்த்தனைக்குரிய மூர்த்தியாய் விளங்கி,புத்திரப்பேறும் மற்ற நலங்களும் பெறவேண்டி சிறப்பு அபிஷேகம்,வடைமாலை முதலியன நிகழ்த்தி பக்தர்கள் நலம் பெறுவது கண்கூடான ஒன்று.

கண்டேசுவரப் பெருமான் விடமுண்டு தேவர்கள் முதல் யாவர்ககும் அருள் புரிந்து காத்தமைநினைவாக மாதம் இரு பிரதோஷ காலங்களிலும் வழிபாடு சிறப்புற தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

ஆலயத்தின் முன்புறம் “தாமரை நிறைந்த திருக்குளம்” அமைந்துள்ளது பல்லாற்றானும் சிறப்பு வாய்ந்த இத்தலம் தாமரங்கோட்டை எனும் திருப்பெயரால் சிறப்புப்பெற்று விளங்கி வருகிறது.விவசாயத்தினை முக்கியத் தொழிலாகக் கொண்ட,வேளாளர் பெருமக்கள் நிறைந்து வாழ்கின்றனர்.அப்பெருமக்களில் சிறந்தவரான அமரர்,திரு.காரிமுத்து வேளாளர் என்பவரும். அமரர். திரு. சுப்ரமணிய வேளாளர் என்பவரும் பெருமானிடம் பெரு ஈடுபாடு கொண்டு ஆலயத்தை விரிவுபடுத்தி திருப்பணிகள் செய்து, நஞ்சை, புஞ்சை நிலங்கள் அளித்து வேளாளர்களின் நான்கு கரைகாரர்களையும் பங்கு பெறச்செய்து, அனைவர்களின் வழிபாட்டுத்தலமாகவும் சிறந்து விளங்கி வருகிறது.

தலப்பெயரும், சுவாமி, அம்பிகையின் திருநாமங்களும், ஊரில் வாழ்ந்துவரும், “வேளாளர்கள்” செய்தொழில் “விவசாயம்” என்ற குறிப்புகளும் கம்பராமாயணம் சூதனவனபுராணம்-இராமன் மந்திரோபதேசம் பெற்ற சருக்கத்தில் மேற்கொண்டுள்ள 157, 158 ஆகிய இருபாடல்களும் தெளிவுற விளங்கும், இது பழமையான வைப்புத்தலமாகும்.

இவ்வாலயத்தில் விஜய தசமி, திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம் ஆகிய விழாக்கள் நடைபெறுவதுடன் வைகாசி விசாகத்தில் முக்கியப் பெருந்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்தலம் பக்தர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் பிரார்தனைக்குரிய தலமாக விளங்கிவருவது பெரும் சிறப்பு.

திருப்பணி

இத்திருத்தலத்திற்கு கடைசியாக 28.1.2007ல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இத்திருக்கோயிலில் கீழ்கண்ட மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடை பெறுகின்றன.

1. இராஜகோபுரம் திருப்பணி 4,10,000
2. கருவரை 2,14,750
3. அம்பாள் சன்னதி 1,90,750
4. விநாயகர் சன்னதி 1,01,500
5. முருகன் சன்னதி 1,06,400
6. நடராஜர் சன்னதி 90,000
7. பைரவர் சன்னதி 92,000
8. மணி மண்டபம் 17,450
9. வெளி விநாயகர் 26,100
10. சண்டிகேஸ்வரர் 40,000
11. திருமதில்சுவர் 2,02,000
12. மடப்பள்ளி 40,000
13. உள்மண்டபம் தரைத்தளம் 95,000
14. வெளிப்பிரகாரம் 2,00,000
15. தட்டுக்கல் பரப்புதல் 1,52,000
மொத்தம் 19,77,950

இத்திருக்கோயிலில் விநாயகர் சன்னதிக்கு மாண்பபுமிகு,வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய இணை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் ரூ.50,000/- மும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.ரெங்கராஜன் அவர்கள் ரூ.25,000/- மும் நன்கொடையாக அளித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்றும் முருகன் சன்னதி திருப்பணி வேலைகள் முழுவதும் தாமரங்கோட்டை குமரன் ஆசிரியர் பயிற்சி நிறுவனர் தாளார் திரு.ஆர்.வீரப்பன் அவர்கள் ஏற்றுக்கொண்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்றும் பைரவர் சன்னதி திருப்பணிக்கு தாமரங்கோட்டையை சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் டாக்டர்.செந்தில் அவர்கள் ரூ.37,000/-மும் சுந்தரநாயகிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ஏ.எம்.மணிமாறன் ரூ.25,000/-மும் நன்கொடையாக அளித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.மற்ற திருப்பணி வேலைகளுக்கு தங்களால் இயன்ற நிதியுதவி செய்து இறைவனின் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்
சி.முருகப்பன்
தலைவர்,திருப்பணிக்குழு
பொ.ஜெயராமன்
செயலாளர்/ பொருளாளர்
நிர்வாக அதிகாரி

நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி

C. முருகப்பன்
தாமரன்கோட்டை
தலைவர், திருப்பணிக்குழு,
போன்: 04373 – 283141
செல்: 99429 25933

Like and Share