அரசினர் மேல்நிலை பள்ளி – மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம்

தாமரன்கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் இக்கல்வியாண்டின் (2016-2017) பத்தாம் வகுப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரும் (29-05-2016) தேதி முதல் இன்று வரை பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திங்கள் வா , புதன் வா என்று மாற்றி மாற்றி கூறி மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம் காட்டுகிறார்.மேலும் பள்ளியில் சேர்பதற்கு நாற்காலி,மேசை,மின்விசிறி போன்ற பொருட்கள் வாங்கி கேட்பதாக கூறப்படுகிறது. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இவரின் அலட்சிய போக்கால் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சேர்க்கைக்கா இன்று வரை காத்திருக்கிறார்கள் . (more…)

Like and Share

கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகள்

என் பெயர் செந்தில் குமார், நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தாமரன்கோட்டை இணையதளத்திற்கு மிகுந்த நன்றி.

தாமரன்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கடன் கிடைப்பது சிரமமாக உள்ளது. தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கல்விக் கடன் வழங்க பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்படியே தரும் பட்சத்தில் முழுமையான கட்டணத்திற்கு கடன் தருவதில்லை. சிலருக்கு 50% கட்டணமே கடனாகத்தரப்படுகிறது. மேலும் வட்டி விகிதமும் மிக அதிகமாக இருக்கிறது. பட்டுகோட்டையில் உள்ள அரசு வங்கிகளில் கடனுதவி கோரினால், தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியை அணுகும்படிக் கூறி கை விரித்து விடுகிறார்கள்.

கல்விக்கட்டணம் பல ஆயிரங்களாக இருக்கும் நிலையில் முழுமையான கடனுதவி இல்லாமல் மாணவர்கள் மேற்கல்வி பயில்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பலர் கந்து வட்டிக்கு பணம் வாங்கி படிக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் அவர்களின் உயர் கல்வி தடைபட்டும் போகிறது. இந்நிலை மாற வேண்டும். தாமரன்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு, பட்டுக்கோட்டை அரசு வங்கிகளில் கல்விக் கடன் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒரு அரசு வங்கியாவது தாமரன்கோட்டையில் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற மாற்றங்கள் தாமாக நிகழப்போவது இல்லை. மக்கள் ஒன்றிணைந்து ஒரு குரலில் கோரிக்கை வைத்து, எல்லா வழிகளிலும் முயன்றால்தான் நிகழும்.

பெற்றோர்களும், மாணவர்களும், வெளிநாடுகளில் வசிப்போரும், அரசியலில் செல்வாக்குள்ளவர்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும் இந்த விசயத்தில் ஒத்துழைத்து என் போன்ற மாணவர்களுக்கு அரசு வங்கிகளில் குறைந்த வட்டியில் கல்விக்கடன் கிடைக்க வழி செய்தால் பேருதவியாக இருக்கும். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Like and Share

எந்தத்துறையில் எவ்வளவு வேலை வாய்ப்பு?

மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படிப்புக்கு எந்த துறையை தேர்வு செய்யலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிக்கொண்டிருக்கும் நேரம் இது. எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள முக்கிய கேள்வி. அவர்களுக்கு உதவும் வகையில் மாஃபோய் நிறுவனம் ஒவ்வொரு முக்கிய துறையிலும் உள்ள வேலை வாய்ப்பு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவருகிறது. அதன் தமிழ் சுருக்கத்தை இந்த வலைப்பதிவில் காணலாம்.

Like and Share

+2 தேர்வு முதல் மூன்று இடம் பெற்றவர்கள்

தாமரன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களின் விபரம்.

  1. கல்பனா – 1088 – முதலிடம்
  2. ரமேஷ் பாபு – 1076 – இரண்டாமிடம்
  3. அலெக்ஸ் பாண்டியன் -1070 – மூன்றாமிடம்

கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற்ற எல்லா மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் எமது வாழ்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Like and Share

பட்டதாரி மாணவர்களுக்கு மாதம் 1000ரூ மத்திய அரசு உதவி தொகை

மத்திய அரசு +2 தேர்வில் 80% க்கு மேல் மதிப்பெண் எடுத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை தமிழக கல்வித்துறை வரவேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்குறிப்பின் படி, தமிழகத்தில் 4883 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு மணவர்களுக்கு மாதம் 1000ரூபாயும், முதுகலை மாணவர்களுக்கு 2000ரூபாயும் வழங்கப்படும். 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை – 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.

Like and Share

பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்

தாமரன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு(12ம் வகுப்பு)

இடம் மாணவர் பெயர் மதிப்பெண்
முதலிடம் வீரபாண்டியன் 1103/1200
இரண்டாமிடம் பாலமுருகன் 1068/1200
மூன்றாமிடம் காருண்யா 1064/1200

உயர்நிலை பொதுத்தேர்வு(10ம் வகுப்பு)

இடம் மாணவர் பெயர் மதிப்பெண்
முதலிடம் மகிழா 480/500
இரண்டாமிடம் சந்துரு 479/500
மூன்றாமிடம் வாணிப்பிரியா 478/500

அரசு பள்ளியில் பயின்றாலும் மிகச்சிறந்த கல்வியையும் அதிக மதிப்பெண்களையும் பெற இயலும் என்பதை நிருபித்துள்ள இந்த மாணவர்களுக்கும், தேர்ச்சி பெற்ற மற்ற அனைவருக்கும் தாமரன்கோட்டை இணையதளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

தகவல் உதவி : பாலச்சந்தர், தாமரன்கோட்டை

Like and Share

மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்

தாமரன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ84,00,000 செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி சில காலத்திற்கு முன் தொடங்கப்பட்டது. அது இப்பொழுது நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் திறப்பு விழா நடைபெறும் என்று அதிகாரப் பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன.

பின் தங்கிய கிராமப் புறத்தில் உள்ள நமது அரசு மேல்நிலைப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியமை இங்கு கல்வி பயிலும் ஏழை, நடுத்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த நிதி உதவியை தாமரன்கோட்டை பள்ளிக்கு கொடுத்த அரசிற்கும், அதை பெற முயற்சி செய்த உள்ளாட்சித் துறை மற்றும் ஊர்த் தலைவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பள்ளியில் பயின்ற செல்வி ரபியா பேகம் கடந்த வருட பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றார் என்பது இவ்விடத்தில்குறிப்பிடத்தக்கது.

Like and Share

தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை(எங்க ஊருதாங்க) கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ரபிகா பேகம், 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தன்னிகரற்ற சாதனை படைத்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத் தொழில் செய்வதற்காக தாமரன்கோட்டையில் குடியேறினர். இவரது தகப்பனார் முதலில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறான ஒரு சாதரண பின்னனியைக் கொண்ட செல்வி ரபிகா பேகம், ஒரு சாதரண அரசு பள்ளியில் படித்து மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்வாசிகளுக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

அரசு பள்ளிகளும், சரியாக நிர்வாகம் செய்தால், நல்ல கல்வியைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். செல்வி ரபிகா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7550

ஜேகேவின் சில குறிப்புகள்: தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

Like and Share