காணொளி : தாமரையைச் சேர்ந்த நானிலவேந்தன் அப்துல் கலாமை சந்திப்பு

தாமரன்கோட்டையைச் சேர்ந்த நானிலவேந்தன் சாக்கட்டியில் தான் செதுக்கிய உருவத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் நேரில் சந்தித்து அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளியை இங்கே பார்க்கலாம்.

நானிலவேந்தன் திருப்பூரில் உள்ள தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்பக் கல்லூரியில்(NIFT-TEA) படித்து பட்டம் பெற்றிருக்கிறார். வகுப்பில் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பாட்டிருந்த அவர், கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த டாக்டர் அப்துல் கலாமை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அப்துல் கலாமை சந்தித்த பொழுது தான் சாக்கட்டியில் அப்துல்கலாமின் முகத்தை செதுக்கிய சிற்பத்தை அன்பளிப்பாக கொடுத்தார். அன்பளிப்பை பெற்றுக்கொண்ட அப்துல் கலாம், “உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்றும் ”அன்பளிப்பிற்கு நன்றி” என்றும் நானில வேந்தனிடம் கூறினார்.

மாணவர்களும் இளைஞர்களும் போற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்து, அன்பளிப்பு கொடுத்து, அவரிடம் பாராட்டு பெற்றது தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம் என நானிலவேந்தன் தெரிவிக்கிறார்.

நானில வேந்தனின் திறமைக்கும் முயற்சிக்கும் எமது பாராட்டுக்கள்.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

6 thoughts on “காணொளி : தாமரையைச் சேர்ந்த நானிலவேந்தன் அப்துல் கலாமை சந்திப்பு

  1. மகிழ்ச்சியாக உள்ளது.நானிலின் கலை ஆர்வமும் படைப்புகளும் சற்றே பிரமிக்க வைக்கிறது.மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *