நெருஞ்சிற்காடு-கதைக்களம்

ஆசிரியரின் உரை:

உலகின் முதலனு தமிழன்,முதுமொழி தமிழ் என்னும் பெரும் பேற்றினை ஏற்று அறம் ,பொருள் இன்பம் என்னும் சீரிய பண்பாட்டினை கருவாக கொண்டு திராவிட பாரம்பரியத்தை உருவாக்கி ,நிறைவு பெற்று நிலைத்து நின்ற நாடு நம்நாடு ! இன்றோ அது காலவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு நெருஞ்சிற்காடு போன்று காட்சியளிக்கிறது .பட்ட இடமெல்லாம் குத்துகிறது .

இதனுள் சாதி ,சமயம்,கொள்கை,குழுமம் எனும் கொழுகொம்பு கொண்டு ,பருவ இயல்புக் கேற்ப உள்ளத்தினை உந்தவிடுத்து வாழும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது .ஆங்கே ;இதற்கிடையில் தானே நாமும் வாழ்கிறோம் என்றெண்ணி அழுங்கி அழுங்கிச் சாகும் நல்லுள்ளங்களும் காண்கிறோம் ! நாடு திருந்தும் எனதற்கோ வழிஇல்லை .

எனினும் காட்டாற்று வெள்ளத்தினை அங்கையால் தடுக்க முயல்வது போன்று தன்னால் முடிந்தவரை செய்வோமே என்று முயலும் அறிவுசால் நல் உள்ளங்களையும் ஆங்காங்கு காண்கின்றோம் .அவ்வுள்ளங்களின் பின்னே அடியெடுத்துவைத்து பீடுநடைபோட எண்ணியே இந்த நூலை வடித்து தங்கள் முன் வைக்கிறேன் .

இந்த நூலானது முழுதும் கற்பனை வடிவம் கொண்டது ! கருத்துகளே என் உள்ளபாங்கு ! அறிவுலகம் இதை ஏற்கும் என்ற உணர்வோடு எழுதிஉள்ளேன் .

கதைக்களம்:

இந்த நூலை பொருத்தவரை பொருந்தா திருமணத்தால் எழும் இன்னல்களை அழகாக படம் போட்டு காட்டுகிறார் .கதையில் முக்கிய கதாபத்திரம்மருதைதனது முதல் மகள்பூங்கொடிக்குநாகசுந்தரம்என்பவனை திருமணம் செய்து வைக்கிறார் .அவனது குடும்பமோ பண்பாடில்லாத குடும்பமாக இருக்கிறது .இதனால் எழும் இன்னல்களையும் ,நிம்மதி அற்ற சூழ்நிலைகளையும் தனக்கே உரிய பாணியில் கவிதையோடு கலந்து இயற்றி உள்ளார் .

ஒருகட்டத்தில் அதே குடும்பத்தில் இருந்து தனது மகனுக்கு பெண் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் .மருமகளும் பண்பாடில்லாத பெண்ணாக இருப்பதால் மருதை அவல நிலைக்கு ஆளாகிறார் .மகனும் முழுநேர குடிகாரனாக மாறிவிடுகிறான் .இந்நிலையில் தனது இரண்டாவது மகனுக்குஅவன் விரும்பிய இடத்தில் மணமுடிக்கிறார் .அதுவும் சரிஇல்லாமல்போகவே மிகவும் மனமுடைகிறார் .

தனது மற்றுமொரு மகள் திருமணம் ஆகாமல் இருபது வேறு அவரை வாட்டுகிறது .இந்நிலையில்தென்னன்என்பவனை எதார்த்தமாக சந்திக்கிறார் .ஒருமுறை அவர் வழுக்கி விழும்போது அவன் இவரை காப்பாற்றுகிறான்.அதன் நட்பாகி கதையின் இறுதியில் அவனையே தனது மகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார் .

இதற்கிடையில் முதல் மகள் வரதட்சனை கொடுமையால் பிறந்த வீடு திரும்புகிறாள் . அவளது கணவன்(நாகசுந்தரம்) பொறுப்பில்லாமல் சுற்றி திரிந்து விட்டு இறுதியில் மனைவியை கொலை செய்ய நண்பனுடன் திட்டம் தீட்டுகிறான்.ஆனால் வந்த இடத்தில் பாம்பு கடித்து இறக்கிறான் .ஆனால் அவனுடைய நண்பன் பூங்கொடியை கொலை செய்து விட்டு சென்று விடுகிறான் .மகளை இழந்த மருதை அழுது புலம்புகிறார் .இப்படி செல்கிறது கதை .கதையில் ஆங்காங்கே திராவிட கொள்கைகளின் தாக்கம் தென்படுகிறது.

சுவாமி ஐயப்பனையும்,அய்யனாரையும் ஒன்று என்று கூற விழைகிறார் .சில மூட நம்பிக்கைகளாலும் ,பழக்க வழக்கமும் மனிதனை எந்த அளவுக்கு வேதனையடைய செய்கின்றன என்பதை கதையில் வரும் சில கதாபத்திரங்களின் மூலம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் ,உழவர்கள் படும் துன்பத்தை மருதை மூலம் கூறி இருக்கிறார் .பல நாள் போராடி உழைத்து பயிர் செய்யும் ஒருவனை விட அதை வாங்கி விற்கும் ஒருவன் அதிகமாக சம்பாதிக்கிறான் ,உழைப்பவன் பெறுவது சொற்பமே என்பதை தனது கவிதை மூலம் தெரிய படுத்துகிறார் .இது என்னவோ தற்போதும் நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே .

பண்பாடில்லாத குடும்பத்தை நெருஞ்சிர்காடு என்று கூறுகிறார் .நெருஞ்சில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் ,ஆனால்,அதன் மீது அடி வைத்தால் குத்தி குருதி பார்த்து விடும் ,அதுபோல பணத்தை கண்டு பண்பாட்டை மறந்து பெண் எடுத்தாலும் ,கொடுத்தாலும் வாழ்கையில் நிம்மதி போய்விடும் என்பதை கதையின் கருவாக கொண்டுள்ளார்.நமது புலவரின் இந்த நூலானது ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கான முதல் படி என்று கூட சொல்லலாம் .ஒரு குடும்பம் எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாரணம் இவரது மருதையின் குடும்பம் என்று கூட சொல்லலாம் .கவிஞர் பாரதிதாசனும் தன்னுடையஇருண்ட வீடுஎனும் நூலில் இதே கருத்தை கூறி உள்ளார் என்பது சிறப்பு .

மீண்டும் புலவரின் மற்றுமொரு நூலானமுதுமொழிப்பாவைஎனும் நூல் பற்றிய சிறு குறிப்போடு சந்திப்போம் …….

Like and Share

4 thoughts on “நெருஞ்சிற்காடு-கதைக்களம்

 1. வினோத், நூலைப்பற்றி மேலதிகத் தகவல்களுடன் கதைக்களத்தை எழுதியமைக்கு நன்றி. இந்த புத்தகத்தை படிக்க முடியாதவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

  //சுவாமி ஐயப்பனையும்,அய்யனாரையும் ஒன்று என்று கூற விழைகிறார்..//

  அய்யனார் கோவிலின் அருகாமையில் இருப்பதால் கதையில் அதன் தாக்கமும் வருகிறதோ… அது ஒரு புறம் இருக்க, அய்யனாரை சிவன் என்றும் சிலர் கூறுவர். இவை எல்லாம் சிறு தெய்வ வழிபாடுகளை பெரு மத மயமாக்கல் முயற்சிகள்தான்.

  1. நன்றி அண்ணா !அதுவும் கூட உண்மைதான்.”பயம்” என்ற ஒரே ஒரு விடயத்தை கொண்டு பல தேவைஇல்லாத பழக்க வழக்கங்களை சமுதாயம் பின்பற்றி வருகிறது.

 2. Hi.,
  It’s a Good shot.
  Suggestions Please.*
  Instead of releasing all the part as a HTML page. Why don’t you make it as a Pdf/ any other user-friendly file? Where we can download it and Read as well. :).
  Continuity will be there how do U feel?
  Think of and go ahead with your upcoming shot’s.
  Cool. Good Effort.
  Thanks
  Star

  1. Star,

   It is a little bit work to have PDF version of the posts. I will try to do. If any body knows a quick fix solution…let me know…I will try to incorporate that into the site…

   Thanks for the feed back!

   Cheers
   JK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *