சிவன்கோயில் திருப்பணிகள் இறுதி கட்டம்

கண்டேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகள் பெரும்பான்மை முடிவுக்கு வந்துள்ளன.

தாமரன்கோட்டை அருள்மிகு கண்டேசுவரர் ஆலய திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்தது.  சற்றேறக்குறைய 80 விழுக்காட்டுப் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் 20 விழுக்காட்டுப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன என்றும் திருப்பணிக் குழுத் தலைவர் திரு சி. முருகப்பன் அவர்கள் கூறினார்.

வரும் வைகாசித் திங்கள் ஆலயத்திற்கு குடமுழக்கு நடைபெரும் என்றும், குட முழக்கு விழாவின் பொழுது ஒரு கால யாக சாலை பூஜைக்கு சுமார் 50 ஆயிரம் செலவு வீதத்தில் சுமார் ஆறு காலம் சிறப்பாக யாக சாலை பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஊருக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் கோயில் மறுசீரமைக்கப் பட்டு செய்யப்படும் இந்த குடமுழக்கு விழாவிற்கு மேலும் நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன என்று கூறிய அவர் நன்கொடைகள் அனுப்ப கீழ்கண்ட முகவரியைத் தொடர்புகொள்ள வேண்டிக்கொண்டார்.

C. முருகப்பன்
தாமரன்கோட்டை
தலைவர், திருப்பணிக்குழு,
போன்: 04373 – 283141
செல்: 99429 25933

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *