தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை(எங்க ஊருதாங்க) கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ரபிகா பேகம், 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தன்னிகரற்ற சாதனை படைத்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத் தொழில் செய்வதற்காக தாமரன்கோட்டையில் குடியேறினர். இவரது தகப்பனார் முதலில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறான ஒரு சாதரண பின்னனியைக் கொண்ட செல்வி ரபிகா பேகம், ஒரு சாதரண அரசு பள்ளியில் படித்து மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்வாசிகளுக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

அரசு பள்ளிகளும், சரியாக நிர்வாகம் செய்தால், நல்ல கல்வியைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். செல்வி ரபிகா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7550

ஜேகேவின் சில குறிப்புகள்: தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

8 thoughts on “தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

 1. Swamy,

  தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி. தாமரன்கோட்டை.காம் இப்பொழுது சற்று மேம்படுத்தப் பட்டிருக்கிறது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

  அன்புடன்
  ஜேகே

 2. kutti,

  உங்களது ஊக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து தளத்திற்கு வந்து பங்களிக்க வேண்டுகிறோம். முடிந்தால் குழுமத்திலும் இணைந்து கொள்ளுங்கள்.

 3. JK

  My comments definitely late and I have no choice to post this. I was informed and introduced by the site very recently. Comeback the actual topic, 493/500 was the best total and amazing. My best wishes to the Student. On those days, passing all the subjects were like climbing Mount Everest. In contrast, present generation is much superior in understanding subjects and scoring marks. Nonetheless, the hard work done by the teachers are also the major contributor of this great success. The present Head Master Mr Rathinakumar is one of the best teacher I seen in my life. He was my chemistry teacher in 1980’s. With his vision and mission, our school continues to produce more scholars and prosper.

  Very good information JK

  P.Palanivel
  Singapore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *