கண்களைக் கொள்ளை கொள்ளும் அலையாத்திக் காடுகள்

திருவாரூர் மாவட்டம் , முத்துப்பேட்டை சதுப்பு நிலப் பகுதியில் (லகூன்) அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களைக் கவரும் வகையில் சிறப்புற அமைந்துள்ளது.

இந்தக் காடுகள் சுமார் 120 சதுர கிலோ மீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன.  எங்கு பார்த்தாலும் தண்ணிரும், திட்டு திட்டாக காடுகளும் அமைந்துள்ளது காண்பவரின் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

இந்தச் சதுப்பு நிலக் காடுகளில் அலையாத்தி எனப்படும் மரம் 95சதவீதம் உள்ளது.மேலும் தண்டல், தில்லை, நரிக்கந்தல், நீர்முள்ளி உள்ளிட்ட பலவகை மரங்களும் உள்ளன.

இந்தப் பகுதியில் 73 வகையான மீன்களும்,6 வகையான இறால்களும் வாழ்கின்றனவாம்.இந்தச் சதுப்பு நிலக் காடுகளைச் சார்ந்து சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கடலில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் மீன்கள் இனப்பெருக்கக் காலத்திலிந்த அலையாத்திக் காடுகளுக்கு வந்து தங்கி இங்கு மரங்களிலிருந்து விழும் இலைகள் உள்ளிட்டவற்றை உண்டு நன்கு வளர்ந்து மிண்டும் கடலுக்குச் செல்கின்றன.
நசுவினி ஆறு, பட்டுவான்ஜி  ஆறு, பாமணி ஆறு, கோரையாறு, கண்டன்குறிச்சி ஆறு, மரைக்கா கோரையாறு, கீழத்தஞ்சை ஆறு உள்ளிட்ட ஆறுகள் இந்தச் சதுப்புனிலப் பகுதியில்(லகூன்) கலந்து அதன் பின்னர்தான் கடலில் கலக்கின்றன.
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியிலிறுந்து மோட்டார் படகில் சென்றால் சுமார் ஒரு மணி நேரத்தில் ’ தலைமை முனை’ என்னும் இடத்தை அடையலாம்.
இங்கு அலையாத்திக் காடுகளின் உள்ளே சென்று சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் 162 மீட்டர் நீளத்துக்கு மரத்தாலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று இந்தியாவில் வேறு எங்கும் அமைக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியா, மலேசியா,பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில்தான் இது போன்ற நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாம். இங்கு சுற்றுலாப் பயணிகள் ஒய்வெடுக்கும் வகையில் ஒய்விடமும் அமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சைபீரியா, ரஷியா, ஈரான், ஐரோப்பி நாடுகளிலிருந்து சுமார் 80 வகையான பறவைகள் இங்கு வருகின்றன. இவற்றில் பூநாரை, சாம்பல்நாரை, வண்ணநாரை, பாம்புத்தாரா, கரண்டிமூக்கன் உள்ளீட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும் அடங்கும்.
தற்போது அலையாத்திக் காடுகளைப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் முத்துப்பேட்டை வந்து, அங்குள்ள வனத் துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு, மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் மோட்டார் படகுகளில் சென்று அழகு கொஞ்சும் அலையாத்திக் காடுகளை சுற்றிப் பார்க்கலாம். கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடுகளைவிட சுமார் 4 மடங்கு அளவில் பெரிதாக இந்த முத்துப்பேட்டை காடுகள் பரந்து விரிந்துள்ளன.

இயற்கை நமக்குத் தந்த பாதுகாப்பு  அரணை, இயற்கை எழில் கொஞ்சும் அந்தப் பசுமையைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

பின் குறிப்பு: தினமணி புத்தாண்டு மலர் திருச்சி பதிப்பில் வந்த இந்த கட்டுரை இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை. இதன் பயன் கருதி இங்கு மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி தினமணி.

Like and Share

8 thoughts on “கண்களைக் கொள்ளை கொள்ளும் அலையாத்திக் காடுகள்

 1. ஜெயபாலன்,

  இந்த முக்கியமான மற்றும் பயனுள்ள கட்டுரையை தளத்தில் வலையேற்றியமைக்கு மிக்க நன்றி.

  அலையாத்திக் காடுகளுக்கு இடர்பாடு ஏற்படாத வகையில் சுற்றுலா அதிகரித்து இந்த பகுதி மக்களுக்கும் பயன்பட்டால் நன்றாக இருக்கும். நமது ஊருக்கு மிக அருகில் இருந்தும் அங்கு இதுவரை நான் சென்றதில்லை. விரைவில் செல்ல வேண்டும்.

 2. அலையாத்திக் காடு – சுற்றுலா பகுதியா?

  இது நாள் வரை அங்கு நன்டு பிடிபார்கள் என்று நினைத்து கொண்டிருந்தேன். 🙂

  தங்களின் தொகுப்பில் அப்பகுதி வேடன்தாங்கல் போல உள்ளது என்பதை அறிந்தேன்!

  நன்றி.

 3. Hello Administtrator.

  Nice piece of useful information of the nearby forest, which is well known to every one. After reading the information provided here, Alayathi forest is not only a place for catching crabs and also a place for migratory birds elsewhere. Thamarankottai.com is not only telling unique features of our native, indeed, it also covering our neighborhood information in an useful way.

  very good information.

  Palanivelu

 4. The boat jetty is in Jambuvanodai. It is approximately 1.5 KM from Muthupettai bus stand. If you ask for directions to lagoon, people can guide you. Once in the jetty you can ask the boat owners or drivers to take you into the lagoon. Normally 10 to 15 people can go in a boat and the boat owners may charge 1000-1200 Rs for a ride into the lagoon. If you also want to go into the sea, they may ask for little bit more.

  You will have to take permission from the Forest officers to go into the lagoon. The office is nearby the bus stand itself(ask for directions at the bus stand). Some times the boat owners/drivers themselves would arrange the permission. There is a small fee for getting this permission.

  If you are planning to go in a group, it may be a good idea for one of you to go in advance and make all the arrangements before taking the entire group.

  If you do visit the place, have a lot of fun and share your experiences and photos with us.

 5. The last pongal we also been visited the place it was an amazing trip which I ever went.

  That too its near tomy native I should proud of it.and I’m suggesting everyone and look the place.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *