இயந்திரமயமாகிய விவசாயம்

ழைமையிலிருந்து புதுமைக்கு மாறும்போது பிரச்னைகள் எழுவது வழக்கமான விஷயம்தான். இந்த பிரச்ன்னை வேளாண்மைத் துறையில் மாற்றம் ஏற்படும்போது எழுவதுண்டு. ஏர்-கலப்பை, உழவு மாடு போன்ற இயற்கையோடு தொடர்புடையதாக இருந்த வேளாண்மைத் தொழில் தற்போது கொஞ்சமாக இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த  1960-களில் நிலத்தை உழுவதற்கு டிராக்டர் பயன்பாடு பரவலாகப் பிரபலமடைந்தது.
இதனால்,மனித ஆற்றலின் தேவை குறைந்தது.இதன் விளைவாக வேலையிழப்பும் ஏற்பட்டது.இதேபோல,காளைகளின் தேவை குறையத் தொடங்கியது. எனவே, டிராக்டர்களின் அறிமுகம் காளைகளின் அழிவு என்றெல்லாம் கூறப்பட்டது
தொழிலாளர்கள் மத்தியிலும் டிராக்டர் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்தது. கிராமத்துக்குள் டிராக்டர் வரக் கூடாது என்றெல்லாம் அக்காலத்தில் தொழிலாளர்கள் தடை விதித்து. போராட்டங்களும் நடத்தினர். மீறி வந்த டிராக்டர்கள் சில கொளுத்தப்பட்டன. டயர்கள் கழற்றி எறியப்பட்டன. டிராக்டருக்கு பாதுகாப்பு போடும் நிலைமைகூட அப்போது இருந்தது. இப்படியெல்லாம், கடும் எதிர்ப்பு நிலவி வந்தாலும், காலப்போக்கில் அதன் வீரியம் குறைந்து விட்டது. கிராமங்களில் டிராக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 1980-களில் நம் நாட்டில் டிராக்டர்களின் எண்ணிக்கை 6.60 லட்சம் இருந்ததாகப்புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இன்று, கிராமத்துக்கு குறைந்தது 15 டிராக்டர்களாவது இருக்கன்றன.
பவர் டில்லர்
ஆனால், சிறு பரப்பளவு கொண்ட விளைநிலத்தில் டிராக்டரை பயன்படுத்துவது பிரச்னையாக இருந்து வந்தது இந்நிலையில், 1990-களில் சிறு பரப்பளவு கொண்ட விளைநிலத்தையும் உழுவதற்கேற்ற’பவர் டில்லர்’ இயந்திரமும் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கதிரடிக்கும் இயந்திரமும் விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது, பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது
அறுவடை இயந்திரம்
இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு வறட்சி, வெள்ளம் காரணமாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
குறிப்பாக தமிழகத்தின் நெல்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்த பிரச்னை மேலோங்கிக் காணப்பட்டது.
இதனால், தொழிலாளர்கள் பலர் கிராமங்களிலிருந்து பிழைப்புத் தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களூக்கும் இடம் பெயர்ந்தனர். எனவே, கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாகிவிட்டது.
நடவு, அறுவடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால், உற்பத்தி இழப்பும் ஏற்பட்டது. எனவே, நடவுப் பணி, அறுவடை போன்றவற்றுக்கும் இயந்திரம் அவசியமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு, அறுவடை இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் ஆள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாகிவிட்டது, கடந்த சில ஆண்டுகளாக இந்த இயந்திரத்தின் பயன்பாடு பரவலாகிவிட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஹெக்டேரில் அறுவடை செய்துவிடும் இந்த இயந்திரத்தில் கதிரும் அடிக்கப்பட்டு விடுவதால், நேரடியாக லாரியில் ஏற்றும் அளவுக்கு வேலைகள் மிச்சப்படுகின்றன.
நாற்று நடவு இயந்திரம்
தற்போது நாற்று நடவுக்கும் ‘பவர் டில்ல்ர்’ வடிவிலான இயந்திரமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 2 ஹெக்டேரில் நடவு செய்யும் இந்த இயந்திரம் இன்னும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை.  இதேபொல், கரும்பு வெட்டுவதற்கும், தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்னும்  விவசாயிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இயந்திரங்கள் பரவலாக வந்துவிட்டாலும், அதிலும் பல பிரச்னைகள்   உள்ளன. நிலத்தில் ஆள் நடந்தாலே அந்த இடத்தில் புல் செடிகள்கூட முளைக்காது. இந்நிலையில், டிராக்டரை இயக்குவதால், நிலம் கெட்டியாவது, மழை பெய்தால் மேல்மண் தண்ணிரில் அடித்துச் செல்வது, மண் புழுக்கள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் மடிவது போன்ற பிரச்னைகளும் உள்ளன.
இதேபோல,அறுவடை இயந்திரத்திலும் உள்ளது. இதில் வைக்கொல் சுக்குநூறாக துண்டாகிவிடுவதால், மாட்டுத் தீவனத்துக்குப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. நம் நாட்டில் அரை ஏக்கர், கால் ஏக்கர் மற்றும் அதற்குக் குறைவான பரப்பளவு கொண்ட நிலங்களை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் ஏராளம். எனவே, மிகப் பெரிய வடிவம் கொண்ட அறுவடை இயந்திரம் குரைந்தபட்சம் 10,20 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கிறது. உள்ளடங்கிய பகுதியில் உள்ள நிலங்களுக்கு இந்த இயந்திரம் கொண்டு செல்வதற்கான பாதையும் பெரும்பாலான இடங்களில் கிடையாது. எனவே, இது போன்ற் இடங்களில் இந்த இயந்திரத்தைக் கொண்டு செல்வதில் சிரமம் நிலவுகிறது.
நாற்று நடவு செய்யும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுருந்தாலும், இன்னும் விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தும் அளவுக்கு வரவில்லை. மேலும், இதன் விலையும் அதிகமாக இருப்பதால், சிறு,குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எனவெ, தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைந்திருத்தாலும், ஏர் கலப்பையும், உழவு மாடும் போல வருமா? என்ற ஏக்கம் இன்னும்கூட விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.


பின் குறிப்பு: தினமணி புத்தாண்டு மலர் திருச்சி பதிப்பில் வந்த இந்த கட்டுரை இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை. இதன் பயன் கருதி இங்கு மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி தினமணி.

வலையேற்றியது – ஜெயபாலன்

Like and Share

3 thoughts on “இயந்திரமயமாகிய விவசாயம்

 1. வாஸ்தவம்தான் !உண்மை தான்!

  நமது தாத்தா காலத்தில் இருக்க நினத்தால் முடியாது!

  நமது தலை முறையை விட வேகமாக வளரும் நமது இளைய தலைமுறை !

  என்ன தான் வசதிகள் வந்தாலும் “வரவுக்கு மீறிய செலவு தான்” விவசாய துறைeல்”

  தற்பொழுது வேலைக்கு ஆள் கிடைப்பது பெரும் பாடக உள்ளது.

  வரும் தலை முறைகள் விவசாயம் இருக்குமா என்பது கேள்வி குறிதான் இல்லயா!

  நவீனம் வளர வளர! மனிதன் வாழ்வு காலமும் குறைகிறது!

  நமது ஊரில்! அப்பா காலத்தில் பெண்கள் 10 வகுப்பு வரைதான் படித்தார்கள்!

  தற்பொழுது பெண்கள் பட்டதாரிகள்!

  பாருங்க நாம கூட கணிபொறி முன் உட்கார்ந்து விவாதிக்கிறோம்! 🙂

  Good Luck,
  Keep Up!

 2. ஜெயபாலன்,

  நமது ஊர்ப்பகுதிகளில் தற்போது ஏற்பட்டுவரும் முக்கியமான இந்த மாற்றங்களைப் பற்றிய இக்கட்டுரையை வலையேற்றியமைக்கு மிக்க நன்றி.

 3. Hi Jayabalan,

  Much appreciated your articulate information on current trend in the agriculture. Your Tamil language proficiency in this article is very clean and tidy. I don’t know how many of them in our native can write clearly and precisely to communicate to others.

  In comes to you article, it is true; we need to shift our mindset to leveraging the new technologies in agriculture. It certainly increases our productive in the farmyards. A farmer using his equipment to harvesting 1 hectare of lad in one hour is amazing. We no need to depend on manual labor, however, we had no choice to move forward. It may be a great impact on our day-to-day workers earnings and their future. However, current trend in Tamilnadu, 1 Kg of rice cost is 1 rupee and has no direct impact on them.

  Statistical information thoroughly covered.

  Thanks
  Palanivelu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *