பறவைகளின் சங்கமம் வடுவூர் சரணாலயம்

ன்னார்குடி- தஞ்சாவூர் சாலையில் 14 கீமீ தொலைவில் உள்ளது வடுவூர் பறவைகள் சரணாலயம், புகழ்மிக்க வைணவத் தலமான கோதண்ட ராமர் கோயிலின் பின்புறம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்த வடுவூர் ஏரியில் இந்தச் சரணாலயம் அமைந்துள்ளது.

கூட்ஸ், யூக்ரெட், பெலிகான் போன்ற வெளிநாட்டு அரிய பறவையினங்கள் இங்கு வந்து செல்வதாகக் குறிப்பிடுகின்றனர் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள். 1991-ம் ஆண்டு முதல் வடுவூர் ஏரி சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

சின்ன வெள்ளைக் கொக்கு, உன்னி கொக்கு, மடையான், வாக்கா, பாம்புதாரா, நீர்காகம், ராமச்சிறவி, முக்குளிப்பான், சைபீரியாவைச் சேர்ந்த சிறவி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாமக்கோழி, மாலத்தீவைச் சேர்ந்த பெரிய வெள்ளைக் கொக்கு மற்றும் கூழக்கொடா, கரண்டி மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கொசு உள்ளான் போன்றவை இங்குள்ளன. இலங்கை, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் இங்கு வந்த தங்கிச் செல்கின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் அதிக எண்ணிக்கையில் இங்கு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

இயற்கை அழகை இனிதே ரசிப்பதுடன், பறவைகளின் சந்தோஷமான ஆர்ப்பரிக்கும் ஒசைகளுடன் இங்கு பொழுதைக் கழிப்பது தனி சுகம் என்கிறார் இதுகுறித்து ஆய்வுக்காட்டுரை தயாரித்து வரும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் என். ராஜப்பா. இந்தச் சரணாலயத்துக்கு மேலும் பல வசதிகள் செய்து கொடுத்தால், ஆண்டு முழுவதுமே எராளமான பறவைகள் வந்து செல்வதற்கும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறுப்பிடுகிறார். கோடைக்காலத்தில் வறண்ட திடலாகக் காட்சி தரும் இந்த ஏரியை- ஆண்டு முழுவதும் தண்ணிர் நிரம்பியிருக்கும் வகையில் மாற்றியமைத்து, படகு குழாம் அமைக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

பின் குறிப்பு: தினமணி புத்தாண்டு மலர் திருச்சி பதிப்பில் வந்த இந்த கட்டுரை இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை. இதன் பயன் கருதி இங்கு மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி தினமணி.
வலையேற்றியது – ஜெயபாலன்

பிகு:

வடுவூர் பறவைகள் சரணாலயம் பற்றிய ஒரு வலைப்பதிவு

வடூவூர் பறவைகள் சரணாலயம் பற்றிய தமிழ்நாடு வனத்துறையின் வலைப்பக்கம்

Like and Share