உள்ளுரில் வேலை-வாய்ப்புகள் -விவாதக்கட்டுரை

தாமரன்கோட்டைஇணைய நண்பர்களுக்கு வணக்கம்!

உள்ளூரில் வேலை வாய்ப்புகள் இல்லாது இருப்பதையும் ,அதை உருவாக்குவது பற்றியும் ஒரு விவாத கட்டுரை தொடங்க வேண்டுமென்ற தனது  எண்ணத்தை நமது  இணைய  ஆசிரியர் வெளிப்படுத்தி இருந்தார் .அந்த வகையில் இந்த கட்டுரையில் சில எண்ணங்களையும், கேள்விகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரை வெளியிடபடுகின்றது .

முதலில் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமங்களில் எந்தமாதிரியான தொழில் தொடங்குவது அல்லது வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது  என்று விவாதம் செய்வது சற்று கடினமான விடயம். பட்டுக்கோட்டை  போன்ற சிறு நகரங்களில்  கூட நாம் பெரிய அளவிலான வேலை வாய்ப்புக்களை எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. மாறாக நமது ஊர் இளைஞர்கள் ஏன் அதிக அளவில் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் ஒரு முக்கிய காரணி என்று சொல்லலாம்.

படிக்காமல் வெளிநாடுகளுக்குசெல்பவர்களைவிட படித்தவர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதால் அவர்களுடைய திறமை எதோ ஒரு வகையில் நமது நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது .அதே சமயம் நாம்மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .அவர்களுடைய திறமையை நமது நாடு பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளதா என்பதுதான்  அது? என்னை கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். அரசியல் என்பது ஒரு கல்லை சிலையாக செதுக்ககூடிய உளி போன்றது. அது எந்நேரமும் கூர்மையாகவும்,அதை செதுக்குபவனுக்கு கல்லில் தேவைஇல்லாத பகுதி எது என்று தெரிந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் சிலை அவன் நினைத்தபடி வரும். ஆனால் நமது நாட்டில் அது முனை மழுங்கி,குரங்குகள் கையில் கிடைத்த பூமாலை ஆகிவிட்டது என்பது தான் உண்மை. எதை தொட்டாலும் லஞ்சம், அரசியல்வாதிகளின் குறிக்கீடு என எதையுமே சரியாக செய்ய முடியாத நிலைமைதான்.

இவற்றை எல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக நமதுஊரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம்.

முதலில் நமது ஊரின் பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும். பள்ளிகளின் செயல்பாடுகளையும், அங்கு படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்தையும்  யார் கண்காணிக்கிறார்கள்? அதற்கென்று தனியாக ஏதும் குழு  அல்லது அமைப்பு இருக்கிறதா ?

பெற்றோர் -ஆசிரியர் கழகம் என்று ஒன்று இருக்கிறது, அதன் செயல்பாடுகள் என்ன? மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு  அந்த கழகம் எந்த வகையில் உதவுகிறது? இதெற்கெல்லாம் விடை தெரிய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். தெரிந்தவர்கள் பகிர்ந்து  கொள்ளலாம்,அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில்! பள்ளிகள்தான் மாணவர்களுக்கு அடையாளத்தை தரவேண்டுமே ஒழிய, மாணவர்கள் பள்ளிகளுக்கு தரக்கூடாது. அப்பொழுதான் பள்ளியின் தரம் நிர்ணயிக்கபடுகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகள் எந்த வகையில் கல்வியின் முன்னேற்றத்திற்கு தங்கள் பங்கை செலுத்துகிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சாலைகள் போடுவதும், குளங்கள் தூர் வாருவது மட்டும் ஒரு ஊரின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துவிடாது. அதுவும் ஒரு வழி அவ்வளவுதான். அரசியல்வாதிகள் ஒரு எதிர் கால திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அப்பொழுதுதான் உலகத்தின் வளர்ச்சி வேகத்தோடு நாம் போட்டி போட முடியும்.

தனி நபர் ஊக்குவிப்பு என்பது நமது ஊரில் எந்த அளவில் இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை நமது ஊரை சேர்ந்த அ.மணிகண்டன் சில பாடங்களில் முதல் மதிப்பெண்  எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வந்தார். அதை பற்றியமுழு விபரம் எமக்கு தெரியவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். தேவை பட்டால்  முழு விபரம் கிடைக்க முயற்சி எடுப்போம்.

மாணவர்களும் ஆசிரியர்களின் திறமைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது ஊர் தலைமை ஆசிரியர் வேதியலில் சிறந்தவர். ஆனால் எத்துனைபேர் அந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியவில்லை. நமது தேவையை நிறைவு செய்ய நாம் தான் அதற்கான வழியை தேடி ஓட வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களை தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். எனக்கு தெரிந்து நமது கீழக்காடு தொடக்க பள்ளியில் ஆசிரியர்களுக்கு பூ, சீப்பு போன்ற பொருள் வாங்குவதெற்கு மாணவர்கள் வருவார்கள். பார்ப்பதற்கு இது சிறு விடயமாக தெரியலாம்  ஆனால் இது ஒரு தவறான உதாரணமாகிவிடும் .தற்போதைய நிலை தெரியவில்லை. இதை ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், அப்துல் கலாம் எதற்காக குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று பார்த்தால் அது ஒரு நெடுங்கால் திட்டம். எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று அவருக்கு தெரியும். வளர்ச்சியை சிறுவர்களிடம் தொடங்கினால்தான் எதிர்காலத்தில் அதில் நாட்டில் பிரதிபலிக்கும் என்ற அவரின் எண்ண ஓட்டம் தான் அது.

மேலும், தொழில் தொடங்குவது என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பம். ஆர்வலர்களை ஊக்குவிக்கலாம். ஆர்வத்தை உருவாக்குவது சற்றே கடினம்.நமது ஊரில் சிறந்த உதாரணம் “மாருதி எலக்ட்ரிகல்ஸ்”. யார் சென்று கேட்டாலும் வேலை உண்டு. அருமையாக நிர்வாகம் செய்துவருகிறார் திரு.பாலசுபிரமணியம் அவர்கள். நமது ஊர் விழாக்களில் தொழில் முனைவோர் பரிசு என்ற ஒன்றை உருவாக்கி அதை அவருக்கு வழங்கலாம். அதுபோல ஆர்வமுள்ளவர்கள் தொடங்கலாம். மருந்தியல் படித்துவிட்டு சில பேர் நமதுஊரில் இருக்கிறார்கள், அவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் நமது ஊரில் மருந்தகம் வைத்திருப்பது, பக்கத்துக்கு ஊரை சேர்ந்தவர் .

நிலைமை இப்படி போய்கொண்டு இருக்கிறது.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தேவைதான். நண்பர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால் அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

நன்றி!

Like and Share

22 thoughts on “உள்ளுரில் வேலை-வாய்ப்புகள் -விவாதக்கட்டுரை

 1. வினோத்,

  மிகத் தேவையான இது போன்ற ஒரு விவாதக்கட்டுரையை எழுதியமைக்கு மிக்க நன்றி. பொதுவாக நாம் எல்லோரும் ”யாராவது ஏதாவது செய்ய வேண்டும்” என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஒன்றும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அது எல்லோருக்கும் நல்லதாக நடப்பதில்லை.

  வேகமாக மாறி வரும் உலகச் சூழ்நிலை தாமரன்கோட்டை போன்ற சிற்றூர்களைத்தான் அதிகம் பாதிக்கப் போகிறது. ஆனால் அதற்கு சற்றும் தயார் ஆகாத நிலையில்தான் நமது கிராமங்கள் உள்ளன.

  பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை நம்பி நமது ஊர் இனி பிழைக்க முடியாது. ஆனால் அதில் இருந்து வெளிவருவதற்கு நமக்கு எளிதாக வழி தெரியவில்லை. தெரிந்த ஒரே வழி வெளி நாடு போவதுதான்.

  அடிப்படையில் இந்த பிரச்சனைக்கான தீர்வு நல்ல கல்வியில் ஆரம்பித்திருக்க வேண்டும். முன்பிருந்ததைவிட கல்வி நிலை நம்மூரில் முன்னேறியிருந்தாலும், இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப் படிப்பு வரை எல்லாவற்றிலும் 10/20 ஆண்டுகள் நாம் பின் தங்கியிருக்கிறோம். அதனால் மற்றவர்களுடன் வேலைவாய்ப்புகளில் போட்டி போடுவது சிரமமாக இருக்கிறது. இன்னும் நமது ஊரிலோ, அல்லது ஊருக்கருகிலோ சொல்லிக்கொள்ளும் படியான பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லை என்பதை எண்ணிப்பாருங்கள். கல்வி முறையை நாம் மறு பரிசீலனை செய்யவேண்டும்.

  அடுத்ததாக வேலைவாய்ப்பு. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலெல்லாம் தொழிலகங்கள் பெருகும்போது காவிரி டெல்டா பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. காவிரி டெல்டா என்று பெயர் பெற்றாலும், இப்போது காவிரியில் பெரும்பாலும் தண்ணீர் வருவதில்லை என்பதை அவர்கள் கணக்கிலெடுக்க மாட்டார்கள். மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் அதைப்பற்றி அதிகம் கேள்விகள் எழுப்புவதில்லை. வேலைவாய்ப்புகள் அரசாங்கத்தின் திட்டங்களால்தான் அதிகரிக்கும்(சிறப்பு பொருளாதார மண்டலம் போன்று…). ஆனால் நமது பகுதிகளை அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், மக்களும் தனி மனிதர்களும் முன்வந்து தொழில் தொடங்க முனையவேண்டும், தொழிலகங்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் உள்ள எல்லோரும் வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் சென்று ஊரை மொத்தமாக காலி செய்ய வேண்டியதுதான்.

 2. தங்களின் விவாதம் சரி தான் நன்பரே.,
  வளரும் தலைமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் கருத்து சரி
  சுய தொழில் புரிய யார் அதற்க்கு பொறுப்பு? எப்படி ஆரம்பிப்பது?
  நமது ஊரில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் 3/10
  அவர்கள் எங்கு? 8 மாதம் முன்பு கட்டுரை ஒன்று படித்தேன் கிருஷ்ணகிரி மாவட்டம் சுய தொழில் பற்றி(BPO Job)
  யோசித்தேன், நமது ஊருக்கு இப்படி ஒரு முன்னேற்ற கழகம் அமைத்தால் என்ன என்று?

  “பள்ளியில் ஆசிரியர்களுக்கு பூ, சீப்பு போன்ற பொருள் வாங்குவதெற்கு மாணவர்கள் வருவார்கள்” – முடியாது என்றால் அடி விழும் இல்லை மார்க் குறையும்! உண்மைதானே ? 🙂

  “நமது பகுதிகளை அரசு முற்றிலும் புறக்கணிப்பதால்” – did you poll?
  it’s not government is separating US.! The one who we selected for a head they are not taking responibility, if they cannot do the job? why they are competiting for election? we poor people trusted them polled. 0% utilization. do you think they are not getting money from governmet? the way they are utilizing the thing’s is not proper. if we think the govt is not considering us. we should stop them to process. “Every body i mean we all stand together” What they can do?

  hope so may of them have seen this website, they are not even palying a role ? any how it’s a good thing to discuss about? Youth we can take FLAG! TO WIN.

  Good contest.
  Keep up guy’s.,

  With Full Support
  Youth.

 3. @Jayakumar
  அண்ணா ,
  மறுமொழிக்கு நன்றி.விவசாயத்தை நம்பி பிழைக்க முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதுவும் ஒரு தொழில் தான் .அதை நமக்கு சரியாக கையாள தெரியவில்லை .விவசாயத்துறையிலும் நவீன விடயங்கள் எவ்வளவோ உள்ளன . அதை நாம் யாரும் தெரிந்து கொள்ள முயல்வதில்லை.தெரிந்துகொண்டால் விவசாயத்துறையிலும் முன்னேறலாம் .புதிய ரக விதைகள் ,பயிரிடுவதில் புதிய முறைகள் என வேளாண் துறையும் முன்னேறி வருகிறது.அவற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை அல்லது சோதனை முயற்சிகளில் இறங்க யாரும் முன் வருவதில்லை .இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன .ஒன்று சோதனை செய்ய விருப்பமில்லாதது அடுத்தது அதற்கு போதுமான நிலமும் பொருளும் இல்லாதது.
  மற்றபடி கல்வி முன்னேற்றத்திற்கு நம்மாலான சிறு முயற்சிகளில் ஈடுபடலாம். அதை பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.

  நன்றி
  மு.வினோத் .

 4. @Star
  Star,
  வருகைக்கும் , மறுமொழிக்கு நன்றி.சுயதொழில் தொடங்க அவரவர்தான் முன்வர வேண்டும்.அதற்கான வழிவகைகளை நாம் தெரியபடுத்தலாம். அதை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி யோசிப்போம் .தங்களது சிந்தனையையும் தெரியபடுத்துங்கள்.
  JK அண்ணனின் அரசாங்கம் புறக்கணித்துவிட்டது என்ற கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளீர்கள் .மன்னிக்கவும் ,உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.அரசாங்கம் கைவிடவில்லை ,மக்கள் பிரதிநிதிகள்தான் கைவிட்டுவிட்டார்கள் என்று தாங்கள் கூறியதாக அறிகிறேன்.எனக்கு தெரிந்தவரை மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைபைதான் அரசாங்கம் என்று கூறி வருகிறோம்.அரசாங்கம் என்று தனியாக எதுவும் இல்லை.மேலும் அரசியல்வாதிகளை எதிர்ப்பது அல்லது பதவிக்கு வரவிடாமல் செய்வது போன்ற விடயங்களில் கவனத்தை செலுத்தாமல் அதை விடுத்த மற்ற விடயங்களில் கவனத்தை செலுத்தலாம் என்பது என் எண்ணம்.
  அரசாங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ற விடயத்தில் எனது புரிதல் தவறாக இருந்தால் என்னை திருத்தவும் .

  நன்றி
  மு.வினோத் .

 5. ஏன் விவசாயத்தை நம்பி பிழைக்க முடியாது?

  பாசனம்: முன்னர் ஆற்று நீர் ஓரளவு வந்தது. பருவ மழை மற்றும் நிலத்தடி நீர் சேர்ந்து பாசனம் பெரிய பிரச்சனை இல்லை. இப்போது ஆற்று நீர் சுத்தமாக வருவதில்லை. பருவ மழை நிறைய முறை பொய்த்து விடுகிறது. நிலத்தடி நீரை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வேகமாய் உறிஞ்சி எடுப்பதால் மட்டுமே பெரும்பாலும் ஊரில் விவசாயம் நடக்கிறது. இதில் இரண்டு பிரச்சனைகள். கலைஞர் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் எல்லோரும் தலையில் துண்டை போட வேண்டியதுதான்(இன்றில்லா விட்டாலும் என்றாவது இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்). மற்றொன்று நிலத்தடி நீர் மட்டும் என்ன அமுத சுரபியா. நமது நிலத்தடி நீர் பயன்பாடு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால், சீக்கிரம் 50-60 அடியில் கிடைக்கும் நீர் 100-200 அடிக்குப்போய் மொத்தமாக வற்றிவிடும். நிலத்தடி நீர் மட்டும் வற்றிப்போனால் தஞ்சாவூர் பாலைவனம்தான். இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இதைப் பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை.

  நிலப்பரப்பு: தற்போதுள்ள அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலும் மாதம் 10000ரூபாய் வருமானம் வருமளவிற்கு விவசாயம் செய்ய 20 மா நிலமாவது வேண்டும். அந்த அளவிற்கு நிலப்பரப்பு நம்மூரில் இருக்கிறதா?

  வேலையாள் பற்றாக்குறை: ஊரில் விவசாய வேலை செய்வதற்கு ஆள் சுத்தமாக இல்லை. ஆள்ச்சம்பளமும் அதிகரித்துவிட்டது(என்னைப் பொருத்தவரை இப்போது தரப்படும் ~150-200ரூ நாள் சம்பளம் கூட குறைவுதான்) அதிக சம்பளம் கொடுத்து விவசாயம் செய்வது பெரும்பாலும் நட்டத்தில்தான் முடிகிறது.

  சந்தை விலை: இது காலம் காலமான பிரச்சனை. விவசாய விளை பொருள் விலை சூதாட்டம் போல ஏறி இறங்குகிறது. தேங்காய் விலை 4ரூபாயிலிருந்து 2ரூபாயாகிவிட்டது. தோப்பை நம்பியிருப்பவர்கள் பாடு இப்போது கடும் திண்டாட்டம்.

  முன்னேறிய நாடுகளில் விவசாயத்தை நம்பியிருப்பவர்கள் 2 அல்லது 3% தான். நமது ஊரில் 70-80% இருப்பார்கள். இந்நிலை நிச்சயம் மாறவேண்டும். இல்லையெனில் வருமையிலிருந்து வெளிவருவது மிகச்சிரமம். குறைவான பேர் நிறைய இடத்தை பயிர் செய்யும்போது நவீன முறைகளையும், இயந்திரங்களையும் பயன்படுத்தி இலாபகரமாக விவசாயம் செய்யலாம். தற்போது உள்ள முறை யருக்குமே நல்லதில்லை. இதில் அதிகம் பாதிப்படைவது விவசாயி தான்.

  இந்நிலையில், யாரும் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிருக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிச்சயமாக எல்லோரும் வேறு ஏதாவது முதன்மைத் தொழிலை நாடிச் செல்ல முயல்கிறார்கள். ஆனால் சரியான வழி தெரியவில்லை.

 6. //it’s not government is separating US.! The one who we selected//

  அரசாங்கம், அரசியல்வாதிகள், மக்கள் எல்லோர் மீதும் தவறு உள்ளது. எத்தனை பேர் தஞ்சை மாவட்டம் தொழில்துறையில் புறக்கணிக்கப் படுகிறது. வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என குரல் எழுப்புகிறார்கள். பெரும்பாலானோர்க்கு அது ஒரு பிரச்சனையாகவே இன்னும் தெரியவில்லை. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். நாம் கேட்கவில்லை எனவே மக்கள் பிரதிநிதிகளும், அரசும் ஏதும் செய்யவில்லை. தமிழகத்தில் 100-200 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. தஞ்சைக்கு முட்டை(எனக்குத் தெரிந்தவரை). சிப்காட், எல்காட், சிட்கோ என பல்வேறு தொழில் முன்னேற்றத்திற்கான அரசு நிறுவனங்கள் திரும்பிய இடமெல்லாம் நிலத்தை வளைத்துப்போட்டு பூங்காக்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தஞ்சையில் இந்த வகையிலும் முட்டைதான்(எனக்குத் தெரிந்தவரை.)

 7. Hi JK & Vinoth…! how r u…? going good…? how many years expereiance in our viilage…?
  did you understand our policies…? nobody will not be good… that is our policies….!!!!! But anyway youngers not go to that way… so, I say thanks to god! and its very nice topic…. not only in web it will be in action…!!
  We try to the best…!!!
  thanks
  T.R.S. Selvaganesh
  Planning Engineer, Dubai Gulf Contracting LLC.
  Dubai. Cell : +9715439848.

 8. //ஏன் விவசாயத்தை நம்பி பிழைக்க முடியாது?//
  Sure we have to improve the agriculture relative activity… I believe we can

 9. Hi Boys,
  I also hail from Thamarankottai. I do not know how to type in Tamil here. I understand the interest among you in our village. It is really enormous and this has to set in motion a holistic developmental activity with in the boundary of our village where I spent my young days and most of you are like me with a kind of attachment with your birth place. Lack of development in any village can not be attributed to failure of Government or a public representative in India. The logic is simple. Ours is a country which is populous and the resource is limited. In competition to share the resources we fail because we are not organized and do not cry just like a child for mother’s milk. Even the mother will feed the child only when it cries. It is therefore that lack of collective effort and competence to share the resource is the major problem. To divert our people to this kind of practical mode is bit difficult but humane energy is not limited to solve any problem related to a small group which is life style wise and (I may be excused)caste wise similar. In social science perspective always group effort prevail(successful)over any other effort of interest to any sect of a population.
  I want to know that can we not get organized as a group who can trigger the change and development? It is this assurance that can develop a village rather that any monetary contribution or mere discussion. After all the Government of India pumps quite a lot of money, to which any village group can have an access, provided the village group is organized on a platform with a major objectivity of village development on all spheres with out sacrificing any of their own unitary development.
  If this happens Thamarankottai will be a miniature of Tiruppur in Tamil Nadu.
  Let us , whoever is subscribing to this concept, get organized and do it jointly to develop Thamarankottai.
  (Is there any one who can translate this into Tamil? Please do it)

  மேற்கண்ட பின்னூட்டத்தின் சுருக்கமான தமிழாக்கம்

  நான் பிறந்து வளார்ந்ததும் தாமரன்கோட்டைதான். நமது ஊரின்மீதான உங்களது ஆர்வம் எனக்கு புரிகிறது. நாம் வளர்ந்த ஊரின் பன்முக வளர்சிக்கான தொடக்கத்தை உங்களது அளப்பரிய ஆர்வம் ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஊரின் முன்னேற்றம் தடைப்படுவதற்கு அரசாங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தோல்வி மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இதன் பின்னுள்ள தர்க்கம் மிக எளிதானது. நமது நாட்டின் மக்கள் தொகை மிகப்பெரியது ஆனால் வளங்கள் குறைவு.இருக்கின்ற வளங்களை பகிர்ந்து கொள்வதற்கான போட்டியில் தோல்வியடைகிறோம். காரணம் நாம் ஒருங்கிணைக்கப் படவில்லை; தாய்ப்பால் கேட்டு அழும் குழந்தை போல நாம் அழுவதில்லை. ஒரு தாய் கூட அழுகின்ற குழுந்தைக்குத்தான் முன்னுரிமை அளிப்பாள். நமக்கான வளங்களை/வசதிகளை கேட்டுப் பெருவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியும் செயல் திறனும் இல்லாமையே முக்கியமான பிரச்சனை. இதுபோன்ற நடைமுறை சார்ந்த செயல் முறைக்கு நம் மக்களை திருப்புவது சற்று சிரமம், எனினும் விடா முயற்சியால் இதைச் செய்ய இயலும். சமூக அறிவியலின் பார்வையில் குறுங்குழு நலம் சார்ந்த முன்னெடுப்புகளை விட பரவலான மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே வெற்றியடைந்திருக்கின்றன.

  முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்குமான தொடக்கத்தை கொணர்வதற்கான குழுவாக நாம் ஒருங்கிணைய முடியுமா என அறிய விரும்புகிறேன். இது போன்ற கூட்டு முயற்சிக்கான பங்களிப்புதான் நிதிப்பங்களிப்பு மற்றும் வெற்று விவாதங்களை விட முக்கியமானது. பொதுவாக முன்னேற்றத்திற்கென்று இந்திய அரசு நிறைய நிதியை ஒதுக்குகிறது. முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படும் எந்த கிராமமும் அந்த நிதியை பெற்றுக்கொள்ளலாம்.
  இது நடந்தால் தாமரன்கோட்டை ஒரு சிறு திருப்பூராக மாறலாம். இந்த கருத்துடன் உடன்படும் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.

 10. Hi Friends

  Let me post my view in this ongoing hot topic. I went through the main article and its reflections. It certainly very impressive to me and everyone strongly applauded the main content and its intend of the debate.

  Let us see the first segment of the debate Farming: We are living in a materialistic world, every activities or process, we are doing is involved with cost and at end of the day; we need to calculate the balance sheet for financial status. Most of our colleagues were end up negative balance sheet. It is due to many reasons, not enough volume of land, work force, fertilizers, irrigation and other problem- especially the monsoon. Only big landlords may post a profit through farming. Bottom line, big fish eat small fish. In my view, small players (I mean small farmers with little land) may form a group and take rotation to help each other in terms of stubborn work force. In this way, everyone get involved and occupy themselves.

  Move on to the second topic, setting up a business: There were millions business opportunities in the world. In the village perspective, what we need is a small capital and a dedicated commitment. I had seen in my early stages of my life, engineers, shop owners, doctors and other professionals. All of them were shown great interest at beginning and they are not sustaining with years goes on. Continue to upgrading skill is the only way keep themselves stay alive in this competitive world. People can say, telling easy than done.

  The next interesting topic is the semi qualified work force (not much educated) looking for overseas to work: This is very convoluted topic for a discussion; I totally agree with writer view, yes, our nation not adequately equipped to tap this group of talent. This is mainly because of lacking leadership in our nation and our too democratic approach after independence. Every five years, we are facing new party to rule the country with different set of principle and they did not roll over the economy, instead, they siphoned the economy in their pocket.

  Education: This is the key topic and I would say, education is the key driving force for future economy of our nation. However, lack of administration and funding resources, our local talents were migrating to elsewhere for doing research or getting employment. I am one of the victims too. We have millions of talented pupil and are they get enough education? Certainly not, let me share one point here, that is, to develop a meritocratic system and mitigate recommendation based education. Writer clearly enunciated his view of former president Dr Abdul Khalam spent quality time with children. Yes, he is genius, how many of our parents spent their quality time and motivates their offspring’s? Parents are best motivator and architect of the young generation. I hope, here after, just married couple and young parents may consider in spending good time with your young and inculcating your knowledge for bright future.

  So what we need, as Dr Murugappan stated in his post, JOINTLY, nice word to read, to rephrase it in another way, let us “work together” to succeed, enterprise in all aspect our life. Begins with family, farming, business, education, culture, financial (rich share your wealth to poor and let them grow, once they grown they will pay back to you) and very importantly “our behavior and attitudes” towards others.

  “Working together” example: our temple project, we are not depend on Govt fund, what we did, every one played a part to generate the mega fund. This is the one GOOD example, when we do TOGETHER, then everything will be fine.

  OOPS; I do not know how to stop my view, but I have to stop. It gets longer and longer.

  Thanks

  Palanivelu

 11. Hi Folks;

  How to write in Tamil our TMK web site. Help me to find the solution to post all our views in Tamil.

 12. அன்புள்ள பழனிவேல் மாமா அவர்களுக்கு வணக்கம்
  நமது இணைய தளத்தில் தமிழில் எழுதுவதற்கு சகோதரர் ஜெயகுமார் குறிப்பிட்ட வழியையும் பின்பற்றலாம். அல்லது http://www.google transliteration என்ற இணைய தளத்தில் பயன் படுத்தி கொள்ளலாம் .

  அன்புடன்
  அப்பாதுரை .
  hp 81533996 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *