மகேந்திரனின் செயல் திட்ட அறிக்கை

காங்கிரஸ் சார்பில் பேராவூரணியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் தாம் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை செயல் திட்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்

திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதை குறுகிய ரயில் பாதையாக இருப்பதை அகல ரயில் பாதையாக மாற்றி இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடன் நிறைவேற்றிட பாடுபடுவேன்
பேராவூரணி தொகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் கூடுதலாக திறந்திட பாடுபடுவேன்
படித்த ஆண், பெண் இருபாலருக்கும் வெளிநாடுகளுக்கு இணையாக நல்ல சம்பளம் பெறும் வகையில் பெரிய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பேராவூரணி தொகுதிக்கு கொண்டுவருவேன்.
சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களில் தகுந்த 1000ம் நபர்களுக்கு, பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் கடன் உதவிகளை பெற்றுத்தர பாடுபடுவேன்.
நவீன ஜி.பி.எஸ் (GPS) எனும் கடலில் இடம் காட்டும் கருவிகள் மற்றும் மீன்வளம் காட்டும் கருவிகள் போன்றவை மீனவர்களுக்கு கிடைத்திட பாடுபடுவேன்
ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டம் மற்றும் பிற மத்திய மாநில அரசுகளின் மரபு சாரா எரிசக்தி உற்பத்தி திட்டங்களின் மூலம் தடையற்ற மின்சாரம் இத்தொகுதிக்கு கிடைத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன்

இளைஞர் காங்கிரசின் தேசிய கமிட்டி செயலாளராக இருக்கும் மகேந்திரன், ராகுல் காந்தியிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பேராவூரணி தொகுதியை அவரது தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதன் முயல்வார் என்றும், இத் தொகுதியை சிறந்த தொகுதியக மற்றிடுவார் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மாநில அமைச்சகங்களில் உள்ள தொடர்புகளின் மூலம், செயல் திட்டங்களில் உள்ள அம்சங்களை தன்னால் எளிதில் நிறைவேற்றிட இயலும் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்

அரசியில் கட்சிகள் மட்டுமே இதுபோல தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டு வரும்பொழுது, ஒரு வேட்பாளர் இது போல செயல்திட்ட அறிக்கை வெளியிடுவது புதுமுறையாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *