சிவன் கோயில் பிரச்சனை – வாசகர் கருத்து

சிவன் கோயில் திருவிழாவின் பொழுது என்ன பிரச்சனை என்று முழுவதுமாக எமக்கு தெரியாது. ஆனால் இது தொடர்பாக வாசகர் ஒருவர் அனுப்பிய பொதுவான கருத்தை அவரது பெயர் நீக்கப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

[தாமரன்கோட்டையில்] ஏன் இப்படி செய்கிறார்கள், உள்ளூர் லோக்கல் பொலிடிக்ஸ் அரசியல் செய்ய சிவன் கோவிலா கிடைத்தது. அநியாயங்களை தட்டி கேட்க கடவுள் வருவார். ஆனால் இப்படி செய்யும் இவர்களை யார் கேட்பார் என்று தெரியவில்லை. தாமரன்கோட்டை இனைய தளம் நீங்கள்தான் பராமரித்து கொண்டுள்ளிர்கள் எனவே தவறுகளையும் சுட்டி காட்டுங்கள். [மக்கள்] முன்னேற நாமும் படிக்கட்டாக இருப்பதில் தவறில்லை. அரசியல் வருடம்தான், ஆனால் ஆயுள் அப்படி இல்லை இறைவனின் சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி அவஸ்தை பட வேண்டாம்.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

3 thoughts on “சிவன் கோயில் பிரச்சனை – வாசகர் கருத்து

  1. அன்புள்ள தாமரன்கோட்டை இணையதள உறவுகளுக்கு வணக்கம். இந்த பிரச்னை தோன்றிய பொழுதே என் மனதினில் இனம்புரியா வேதனை. ஒரு கோவிலின் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. அதனை விடுத்தது ஒரு தனிப்பட்ட காரணத்துக்காக தேரை நிறுத்துவது மிகவும் முட்டாள் தனமான செயல். இந்த விடயதில் யார் பின்புலமாக இருந்து செயல்படுவது என்று அந்த கண்டேசரவர்க்கும் தெரியும். நமது தாமரை வாழ் மட்களுகும் தெரியும். ஒரு முகம் தெரியாத மூன்றாவது மனிதனுக்கு கொடுக்க வேண்டும் என்ற அந்த மரியாதையை நம் உறவுக்கு கொடுத்தல்தான் என்ன தவறு. இந்த பிரச்னை பேசி தீர்த்துகொள்ளலாம். அதனை விடுத்து தேரை நிப்பட்டுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. திருவிழா என்பது அனைவரும் விருப்பு வெறுப்பு பகமை களைந்து ஒன்று கூடி கொண்டாடுவது, ஆனால் நமது ஊரில் நிலைமை தலைகீழ் என்ன செய்வது நமது குடுப்பினை அவ்வளவுதான்.

    அன்புடன்
    அப்பாதுரை

  2. There was a controversial comment from sen@yahoo.com. It has been blocked because, the author has not given their real name and the comment is purely accusatory and inflammatory in nature with out giving any substantial reasons.
    We welcome criticisms based on fact. All commenter are requested to use real names especially when you want to criticize.

    Thanks for your understanding

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *