கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகள்

என் பெயர் செந்தில் குமார், நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தாமரன்கோட்டை இணையதளத்திற்கு மிகுந்த நன்றி.

தாமரன்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கடன் கிடைப்பது சிரமமாக உள்ளது. தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கல்விக் கடன் வழங்க பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்படியே தரும் பட்சத்தில் முழுமையான கட்டணத்திற்கு கடன் தருவதில்லை. சிலருக்கு 50% கட்டணமே கடனாகத்தரப்படுகிறது. மேலும் வட்டி விகிதமும் மிக அதிகமாக இருக்கிறது. பட்டுகோட்டையில் உள்ள அரசு வங்கிகளில் கடனுதவி கோரினால், தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியை அணுகும்படிக் கூறி கை விரித்து விடுகிறார்கள்.

கல்விக்கட்டணம் பல ஆயிரங்களாக இருக்கும் நிலையில் முழுமையான கடனுதவி இல்லாமல் மாணவர்கள் மேற்கல்வி பயில்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பலர் கந்து வட்டிக்கு பணம் வாங்கி படிக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் அவர்களின் உயர் கல்வி தடைபட்டும் போகிறது. இந்நிலை மாற வேண்டும். தாமரன்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு, பட்டுக்கோட்டை அரசு வங்கிகளில் கல்விக் கடன் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒரு அரசு வங்கியாவது தாமரன்கோட்டையில் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற மாற்றங்கள் தாமாக நிகழப்போவது இல்லை. மக்கள் ஒன்றிணைந்து ஒரு குரலில் கோரிக்கை வைத்து, எல்லா வழிகளிலும் முயன்றால்தான் நிகழும்.

பெற்றோர்களும், மாணவர்களும், வெளிநாடுகளில் வசிப்போரும், அரசியலில் செல்வாக்குள்ளவர்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும் இந்த விசயத்தில் ஒத்துழைத்து என் போன்ற மாணவர்களுக்கு அரசு வங்கிகளில் குறைந்த வட்டியில் கல்விக்கடன் கிடைக்க வழி செய்தால் பேருதவியாக இருக்கும். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Like and Share

senthilrajan

I am senthil stdying B.E(cse)

3 thoughts on “கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகள்

 1. செந்தில் ,

  முதலில் இவ்விடயத்தை நமது ஊரின் மக்கள் பிரதிநிதிகளிடம் எடுத்து செல்லுங்கள் . வங்கிகள் மூலமாக மட்டுமே இந்த விடயத்திற்கு தீர்வு காண முடியும் . நமது ஊரை பொறுத்தவரை பெரிய அளவிலான தனி நபர் உதவி என்பது சற்றே இயலாத விடயம் . இல்லாத ஒன்றுக்காக சில பல லட்சங்களை நாம் செலவு செய்வோம் என்பது நமது ஊரின் கொள்கை முடிவு . ஆனால் தேவைகளை விட்டு விடுகிறோம். முற்போக்கு சிந்தனை இல்லாததே இதற்கு காரணம். அதை முதலில் மாற்ற வேண்டும் . இருந்தாலும் மேற்கண்ட விடயத்திற்கு என்ன செய்யலாம் என்பதை சிந்திப்போம் .

  நன்றி ,

  மு.வினோத் .

 2. Dear Senthil,

  Mahendiran has asked for more detail in another comment. Please contact him and explain the issue and what can be done.

  Dear Mahendiran, Thanks a lot for offering to help.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *