தாமரங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் 2011

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி. சுபத்ரா ராஜேந்திரன் அவர்களும், ஒன்றிய குழு உறுப்பினராக திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்கண்டவர்கள் அதிகாரபூர்வ மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் வழக்கம்போல் திருமதி.சுபத்ரா ராஜேந்திரன் அவர்களின் கணவர் திரு G.R அவர்களும், திருமதி.ஆச்சிக்கண்ணு நடராசன் அவர்களின் கணவர் திரு .நடனம் எ நடராசன் அவர்களும் கிராம செயல்பாட்டில் ஈடுபடுவார்கள். கடந்த 15 வருடங்களில் நமக்கு கிடைத்துள்ள மூன்றாவது தலைவர் திரு G.R அவர்கள். இதற்கு முன் இந்த பதவியில் இருந்த இரண்டு தலைவர்களில் இருந்து சற்றே மாறுபட்டவர். அவர்கள் இருவரும் தாங்கள் எடுத்த முடிவிலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின் வாங்க மாட்டார்கள். சரியோ தவறோ அதையே செயல்படுத்த முனைவார்கள். அதுவே அவர்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது. திரு G.R அவர்கள் நெளிவு சுளிவு நன்றாக தெரிந்தவர். மிக எளிதாக எவரிடமும் நட்பாகிவிடும் குணம் இவருடைய பலம். எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பது பலவீனம் . எந்த அளவிற்கு அரசின் திட்டங்களை கிராமத்தில் செயல் படுத்த முடியும் என்பது கேள்விகுறிதான். ஏனென்றால் பழிவாங்குவதில் பட்டம் வாங்கியவர்கள் நமது அரசியல்வாதிகள். பொறுத்திருந்து பார்ப்போம்.

திரு. நடனம் அவர்கள் ஆளுங்கட்சியில் இருப்பது நமக்கு பலம். கட்சி பேதங்களை மறந்து திரு G.R அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம். பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததும், ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருப்பதும் மிக எளிதாக இவருக்கு வெற்றியை தேடித் தந்தது.

ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரு.B.T. பாணி அவர்கள் தோல்வியை தேடி அவரே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததும், தவறான கணிப்பும் எளிதான வெற்றியை கோட்டை விட வைத்தது.

கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. சரியான, அர்த்தமுள்ள திட்டங்களும் கருத்துகளும் ஊராட்சி மன்ற தலைவரிடம் அதற்கான வழி காட்டுதலோடு கொண்டு சேர்க்கப்படும்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திரு A. பாலசுப்ரமணியம் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார்.

*ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு வார்டு உறுப்பினர் வாக்களிக்க செல்லவில்லை.

சரி விடுங்க…. கடுமையான மக்கள் பணியில் மறந்தாலும் மறந்திருப்பார்!!!!!!!!!!

Like and Share

2 thoughts on “தாமரங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் 2011

 1. ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரு.B.T. பாணி அவர்கள் தோல்வியை தேடி அவரே சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாததும், தவறான கணிப்பும் எளிதான வெற்றியை கோட்டை விட வைத்தது.
  ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் பெரிதும் .B.T. பாணியை பெரும்பாலானோர் எதிர் பார்கவில்லை

  1. V.B

   யாரும் எதிர்பார்க்காமல் இரண்டாவது இடத்திற்கு வர முடியாது. அவர் பெற்ற வாக்குகளே அதற்கு சாட்சி. ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம் . உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு . தயவு செய்து அதை ஊரின் மீது திணிக்காதீர்கள் . கடைசி இடம் பெற்றவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார் என்று நான் எழுதி இருந்தால் அதில் தவறு இருக்கிறது. இவர் பெற்றது இரண்டாமிடம். இதில் ஏதும் தவறு இருப்பதை எனக்கு தெரியவில்லை. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
   மு.வினோத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *