ச.வீரமணி முதலாமாண்டு நினைவேந்தல்

சில மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய பதிவு இது .தனியொருவரை பற்றிய விடயங்களை பதிவேற்றுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்ததால் முடியவில்லை. ஆசிரியரின் அனுமதியோடு தற்பொழுது பதிவேற்றுகிறேன்.

 அந்த நாள் ….. அந்த நிமிடம் …..
அந்த செய்தியை கேட்டவுடன்
என் கணினியை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை ..
கைபேசி கல்லாக தெரிந்தது….
காலை பொழுது சில நேரம் இரவாகி மீண்டது
வணங்கிய கடவுள் எல்லாம கல்லோ என தோன்றியது
கடல்கண்ட சுனாமி என் கண்கண்டது
காற்றலையாய் வந்த அந்த செய்தி…
அண்ணன் இறந்து விட்டான்!!!
வீரமணி இறந்து விட்டான்!!!

காற்றலையா அது!!! இல்லவே இல்லை !!!
கம்பியில்லா மின்சாரம் காது வழி புகுந்து
உச்சந்தலையில் பாய்ந்து
உடம்பை உலுக்கி எடுத்தது….
அண்ணன் இறந்து விட்டான்!!!
வீரமணி இறந்து விட்டான்!!!

யாருக்கு என்ன பாவம் செய்தாய் நீ?
கயவர்கள் எல்லாம் கண் முன்னே
கவலையின்றி திரியும் பொழுது
கருங்காலி காலன் பின்னால்
நீ கலங்காமல் சென்றது ஏன் ?
நீ வணங்கிய கண்டேசுவரன்
கண்டவர் ஏசும்படி ஆனதே!!!
நீ இறந்து விட்டாய் என்கிறார்கள்.
யார் சொன்னது நீ இறந்தாய் என்று?
இறந்தது உன் உயிர் சுமந்த உடல் மட்டுமே!
உன் உயிர் இன்னும் எங்களிடம் தான் உள்ளது.
நீ எங்களை விட்டு பிரிந்து விட்டதாய் சொல்கிறார்கள்!!
இல்லை இல்லை …
எங்களை வரவேற்கவே நீ முந்தி கொண்டாய்!!!
தெருவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும்
உன் இழப்பை நினைவுபடுத்துகிறது …
ஈடு செய்ய முடியவில்லை…….
ஒரு வருடம் கழித்து உன் முகம் பார்த்தாலும்
அனிச்சையாய் அணிவகுக்கின்றன கண்ணீர் துளிகள் !!!
கண்ணீர் விழுந்து காகிதம் கதறுவதாய்
கடிந்து கொள்கிறது என் பேனா !!!
இதற்கு மேல் முடியவில்லை!!!
எப்படியோ… முந்திக்கொண்டாய் …
எங்களுக்கான முன்பதிவை உறுதி செய்து வை!!
பேச வேண்டிய கதைகள் ஏராளம்!!!
அது சில வருடங்களாகலாம் ..
சில மாதங்களாகலாம் …
சில நாட்களில் கூட நடக்கலாம்…..
விரைவில் சந்திப்போம் …..
முறை செய்ய என் மாமன் ராஜாவையும் தயார் செய்து வை !!!
ஆவலுடன்….

அன்புத்தம்பி வினோத் .

Like and Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *