அரசினர் மேல்நிலை பள்ளி – மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம்

தாமரன்கோட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் இக்கல்வியாண்டின் (2016-2017) பத்தாம் வகுப்பு சேர்க்கைக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரும் (29-05-2016) தேதி முதல் இன்று வரை பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திங்கள் வா , புதன் வா என்று மாற்றி மாற்றி கூறி மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம் காட்டுகிறார்.மேலும் பள்ளியில் சேர்பதற்கு நாற்காலி,மேசை,மின்விசிறி போன்ற பொருட்கள் வாங்கி கேட்பதாக கூறப்படுகிறது. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இவரின் அலட்சிய போக்கால் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சேர்க்கைக்கா இன்று வரை காத்திருக்கிறார்கள் .
பள்ளி தொடங்கி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் , இந்த மாணவர்கள் 10 நாள் பாடங்களை இழக்கிறார்கள் . 10 ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் வாழ்கையில் மிக முக்கியமான கால கட்டமாகும் . இது போன்ற செயல்களால் அரசு அதிகாரிகளின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது . இந்த செயல் மிகவும் கண்டிக்கதக்க மற்றும் வருத்ததிற்க்கு உரிய செயலாகும்.

அரசு, மாணவர்களின் கல்விக்கு பல உதவிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும் இது போன்ற அதிகாரிகளால் அந்த திட்டங்கள் செயல் படமால் போகிறது. வண்டிக்கு அச்சாணி சரியாக இருந்தால் தான் அது சரியான பாதையில் செல்லும் .அதுபோல் தலைமை ஆசிரியர் என்னும் அச்சாணி சரியாக அமைந்தால் தான் மாணவர்கள் என்னும் வண்டியால் சரியான பாதையில் செல்ல முடியும்.

Like and Share

Editor

தாமரன்கோட்டை இணைய தள மேலாளர்.

One thought on “அரசினர் மேல்நிலை பள்ளி – மாணவர்கள் சேர்க்கையில் மெத்தனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *