தாமரன்கோட்டையில் வெள்ளம் : புகைப்படங்கள்

சமீபத்தில் நிஷா எனும் புயலால் தமிழகத்தில் கடும் மழை பெய்தது. அச்சமயத்தில் தாமரன்கோட்டை தீவிர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. வடக்கே பாட்டுவனாச்சி, மேற்கே நசுவினி மற்றும் கிழக்கே பாட்டுவனாச்சி, பாமிணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாலங்களின் மேல் சென்றதால் தாமரன்கோட்டை போக்குவரத்து தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அச்சமயதில் ஊரார் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.

கீழ் உள்ள புகைப்படங்கள் பாட்டுவனாச்சி ஆற்றினருகில் ஏற்பட்ட வெள்ளத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றன.

புகைப்பட உதவி கு ரமேஷ்.

நிலமற்றவர்களுக்கு நிலம் திட்டத்தின் பயனர்கள்

தமிழக அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் வரை நிலம் வழங்கும் திட்டத்தை அமல் செய்துவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெருபவர்கள் விவரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் கீழ்காணும் பயனர்கள் தாமரன்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.

தாமரன்கோட்டை வடக்கு

1) அருள்மொழி க/பெ முருகேசன்
2) ராஜாத்தி க/பெ நடராஜன்
3) செந்தமிழ்ச்செல்வி க/பெ வடமலை

தாமரன்கோட்டை தெற்கு
1) ராஜேஸ்வரி க/பெ சுப்ரமணியன்
2) கலைமணி க/பெ சுந்தரம்
3) திலகவதி க/பெ அழகேசன்
4) கமலாம்பாள் க/பெ சுப்ரமணியன்
5) சகுந்தலா க/பெ வேலாயுதம்
5) தேவி க/பெ ஜெயக்குமார்
6) மயில்வாணி க/பெ சண்முகம்
7) பானுமதி க/பெ கணேசன்
8) சித்ரா க/பெ செந்தில்குமார்
9) ஜெயம் க/பெ கதிர்வேல்
10) இந்திராணி க/பெ ராஜகோபால்
11) வேதாம்பாள் க/பெ சிதம்பரம்
12) லெட்சுமி க/பெ ராஜேந்திரன்
13) சிவபாக்கியம் க/பெ காளிமுத்து
14) சாரதாம்பாள் க/பெ சுப்ரமணியன்
15) சாந்தி க/பெ ராஜேந்திரன்
16) இளைசித்ரா க/பெ வீரையன்
17) ஜெயலெட்சுமி க/பெ சுந்தர்ராஜ்
18) லலிதா க/பெ பழனி
19) தவமணி க/பெ ராமசாமி

தாமரன்கோட்டை கூகிள் குழுமம்

தாமரன்கோட்டை கூகிள் குழுமம் தொடங்கப் பட்டுள்ளது. தாமரன்கோட்டையைச் சேர்ந்த அனைவரையும் இதில் பங்கேற்க அழைக்கிறேன்.

நமது ஊர் தொடர்பான எல்லா விடயங்களையும் இந்த குழுமத்தில் பகிர்ந்துகொள்ளலாம், விவாதிக்கலாம். தற்சமயம் தாமரன்கோட்டை.காம் தளம் மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த குழுமத்தை பயன்படுத்தலாம்.

ஆர்வமுள்ளவர்கள் http://groups.google.com/group/thamarankottai முகவரிக்குச் சென்று உங்களையும் குழுமத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தாமரன்கோட்டை.காம் புதிய வலைத்தளம்

வெகு நாட்களாக உருவாக்கத்திலிருந்த தாமரன்கோட்டை.காம் வலைத்தளத்தை இன்று சற்று மேம்படுத்தி வெள்ளோட்டம் இட்டிருக்கிறோம். இப்பொழுதும் அதிக தகவல்கள் இல்லாது தொடக்க நிலையிலேயே உள்ளது. வருங்காலங்களில் சில நண்பர்களின் உதவியுடன் இத்தளம் மேம்படுத்தப்படும்.

முதலில் ஊரைப்பற்றிய அறிமுகம், செய்திகள்(இந்த வலைப்பதிவின் மூலம் வெளியிடப்படும்), சில புகைப்படங்களைத் தாங்கி இந்த தளம் அமையும். நண்பர்களின் பின்னூட்டங்களைப் பொருத்து மேம்பட்ட சேவைகள் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு குழுமத்தையும் இணைக்கும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இணைய வசதியுள்ள நண்பர்களின் ஒத்தாசையிருந்தால் இன்னும் சிறப்பாக செய்யலாம். இதை வாசிப்பவர்கள், உங்களது கருத்துகளை தவறாமல் பின்னூட்டப்(comments) பெட்டியில் தெரிவிக்கவும்.

தாமரன்கோட்டை வலைத் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்

தாமரன்கோட்டை பற்றிய தகவல்களையும் செய்திகளையும் இந்த தளத்தின் மூலம் வலை உலகத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

நீங்கள் தேடி வந்த தகவல் இங்கே கிடைக்கவில்லை என்றாலோ, இந்த தளத்தை மேலும் பயனுடையதாக்க உங்களிடம் யோசனை இருப்பின் தள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாமரன்கோட்டை(எங்க ஊருதாங்க) கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ரபிகா பேகம், 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தஞ்சை மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தன்னிகரற்ற சாதனை படைத்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத் தொழில் செய்வதற்காக தாமரன்கோட்டையில் குடியேறினர். இவரது தகப்பனார் முதலில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இவ்வாறான ஒரு சாதரண பின்னனியைக் கொண்ட செல்வி ரபிகா பேகம், ஒரு சாதரண அரசு பள்ளியில் படித்து மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊர்வாசிகளுக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

அரசு பள்ளிகளும், சரியாக நிர்வாகம் செய்தால், நல்ல கல்வியைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். செல்வி ரபிகா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/05/30/tn-sslc-state-topper-ram-ambigai.html

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7550

ஜேகேவின் சில குறிப்புகள்: தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.

அன்புள்ள நண்பர்களே

உலகின் பல திசைகளிலும் பரவிக்கிடந்து சாதனைகள் புரிந்து வரும் அன்புள்ள தாமரன்கோட்டையைச் சேர்ந்த நண்பர்களே, உங்களுக்கு எனது கனிவான வணக்கங்கள்.

தாமரன்கோட்டை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ளவும், நமது ஊர் முன்னோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் வலைநுட்பத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இப்பொழுதே அது நிறைவேறியது, இந்த வலைப்பதிவினை தொடங்கியதன் மூலமாக.

நமது இளைய சமுதாயத்தின் சாதனைகள் நம்பிக்கையையும் பெருமையையும் அளிக்கிற அதே சமயத்தில், நம் மக்களை முன்னோக்கியிருக்கும் பிரச்சனைகளும் மலைக்கவைக்கிறது. இப்பதிவை நீங்கள் சென்னையிலிருந்தோ, பட்டுக்கோட்டையிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, சிங்கப்பூரிலிருந்தோ அல்லது உலகின் வேறு ஏதாவது ஒரு மூலையிலிருந்தோ படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தாமரன்கோட்டை பற்றிய இப்பதிவை அனேகமாக தாமரன்கோட்டையில் இருந்து மட்டும் படித்துக் கொண்டிருக்கமாட்டீர்கள் என திடமாகவும் வருத்தத்துடனும் நம்புகிறேன். ஒன்று வேலைக்காகவோ, கல்விக்காகவோ வெளியூரில் இருப்பீர்கள். இரண்டாவது, தாமரன்கோட்டையில் இருந்தால், வலைப்பதிவுகளைப் படிக்க இணைய இணைப்பு இருக்காது. உலகம் வெகுவேகமாக வளரும் இக்காலகட்டத்தி்லும் நாம்மூர் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதை விளக்குவதற்கு இது ஒன்றே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

நம் பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் விவாதிக்க நாம் இப்பதிவை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் அனைவரையும் இதில் எழுத அழைக்கிறேன். நீங்கள் பங்களிக்க விரும்பினால் ஒரு பிளாக்கர் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டம் வழியாக தெரிவியுங்கள். பங்களிப்பாளராக சேர்த்துவிடுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

ஜெயக்குமார் – ஜேகே

பின் குறிப்பு: உங்களுக்கு தமிழில் எழுத தொழில்நுட்ப பிரச்சனை இருந்தால் ஆங்கிலத்தில்கூட எழுதலாம். தமிழில் எப்படி இணையத்தில் எழுதவது என அறியவேண்டுமெனில் எனக்குத் தெரிவியுங்கள்.

வரவேற்பு

தாமரன்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின், பட்டுக்கோட்டை வட்டதிற்கு[1] உட்பட்ட ஒரு விவசாய கிராமம். பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் தாமரன்கோட்டை அமைந்துள்ளது. இந்த வலைப்பதிவு இவ்வூர்ச் செய்திகளையும், மக்களின் பிரச்சனைகளையும், தீர்வுகளையும் எடுத்தியம்பவும் விவாதிக்கவும் முற்படுகிறது.