கபடி போட்டியில் தாமரன்கோட்டை அபார வெற்றி!

தாமரன்கோட்டையில் 6.8.2011 மற்றும் 7.8.2011 ஆகிய இரண்டு நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது,
தங்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக,வருடா வருடம் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது,
இரவு பகலாக நடைபெற்ற இப்போட்டியில்  தாமரன்கோட்டை அணி முதல் இடத்தை தட்டிச்சென்றது,
இரண்டாம் இடத்தை  புலவஞ்சி’ம்,
மூன்றாம் இடத்தை செங்கபடுதான்காடு’ம்,
நான்காம் இடத்தை உள்ளுர் பட்டிகாடு’ம் தட்டிச்சென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாமரன்கோட்டை மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவிக்கப்படுகிறது.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை இரயில் பாதை நீட்டிப்பு

நீடாமங்கலம்-மன்னார்குடி அகல இரயில் பாதை சமீபத்தில் போட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக அப்பாதையை பட்டுக்கோட்டை வரை நீட்டிக்கும் பணியை இரயில்வே நிர்வாகம் தொடங்கும் என்று தெரிகிறது. நில அளவை தொடர்பான வேலைகள் முடிந்தவுடன் இப்பணி தொடங்கலாம். இது தொடர்பான இந்து நாளிதழ் செய்திக் குறிப்பை இங்கே காணலாம்

கல்விக் கடனுதவி தொடர்பாக சில கோரிக்கைகள்

என் பெயர் செந்தில் குமார், நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தாமரன்கோட்டை இணையதளத்திற்கு மிகுந்த நன்றி.

தாமரன்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கடன் கிடைப்பது சிரமமாக உள்ளது. தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கல்விக் கடன் வழங்க பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்படியே தரும் பட்சத்தில் முழுமையான கட்டணத்திற்கு கடன் தருவதில்லை. சிலருக்கு 50% கட்டணமே கடனாகத்தரப்படுகிறது. மேலும் வட்டி விகிதமும் மிக அதிகமாக இருக்கிறது. பட்டுகோட்டையில் உள்ள அரசு வங்கிகளில் கடனுதவி கோரினால், தாமரன்கோட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியை அணுகும்படிக் கூறி கை விரித்து விடுகிறார்கள்.

கல்விக்கட்டணம் பல ஆயிரங்களாக இருக்கும் நிலையில் முழுமையான கடனுதவி இல்லாமல் மாணவர்கள் மேற்கல்வி பயில்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பலர் கந்து வட்டிக்கு பணம் வாங்கி படிக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் அவர்களின் உயர் கல்வி தடைபட்டும் போகிறது. இந்நிலை மாற வேண்டும். தாமரன்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு, பட்டுக்கோட்டை அரசு வங்கிகளில் கல்விக் கடன் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒரு அரசு வங்கியாவது தாமரன்கோட்டையில் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற மாற்றங்கள் தாமாக நிகழப்போவது இல்லை. மக்கள் ஒன்றிணைந்து ஒரு குரலில் கோரிக்கை வைத்து, எல்லா வழிகளிலும் முயன்றால்தான் நிகழும்.

பெற்றோர்களும், மாணவர்களும், வெளிநாடுகளில் வசிப்போரும், அரசியலில் செல்வாக்குள்ளவர்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும் இந்த விசயத்தில் ஒத்துழைத்து என் போன்ற மாணவர்களுக்கு அரசு வங்கிகளில் குறைந்த வட்டியில் கல்விக்கடன் கிடைக்க வழி செய்தால் பேருதவியாக இருக்கும். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

TN Tamils gathered to remember Mullivaikkal in Marina beach

Keeping aside party identities, religions and castes, more than 30,000 people of grass root Tamil Nadu gathered in Marina Beach of Chennai on Sunday to remember the genocide committed on Eezham Tamils and to call for independent and sovereign Tamil Eelam, sending a strong message to New Delhi and to the international community, the organisers of the event said. The congregation organised by Mr. Thirumurukan Gandhi of May 17 Movement, received massive support and participation of leaders cutting across party lines, similar grass root movements, civil society organisations, artists, social workers and the common public that has come with families bringing even their children.

The event was mobilised through social media and grass root organisations with little resources and within a short span of time.

The Tamil Nadu police anticipated participation of only around 500, media reports said.
The highlights of the event were paying homage to the Eezham Tamil victims of the genocide by lighting candlesticks and raising slogans calling for the independence of Tamil Eelam.

“We will never forget the genocide; Tamil Eelam is the only solution; New Delhi, stop betraying Tamils, and we in Tamil Nadu will stand with Eezham Tamils,” were the main slogans that were raised by the thousands who gathered at the Marina Beach.
Usually, the pattern in Tamil Nadu is that only mainstream political parties are capable of organising gatherings of mass participation. But, for the first time after a long time, the grass root Tamil Nadu gathered for such an event, in such a way as a mass uprising, responding to the call of a civil society movement.
Contrary to the usual practices of such gatherings, there were no lengthy speeches, except for a brief introduction by Mr. Pazha Nedumaran on the purpose of the gathering and a thanking speech at the end by the organiser, Mr. Thirumurukan Gandhi.
Mr. Umar Naina, a co-organiser said that he was inspired to involve in calling for mass uprisings after his exposure to the crisis of the fishermen of Tamil Nadu.
Displaying a folklore touch to the event were a programme of “Oppaari” (traditional way of wailing) and a folk theatre performance “Vamsa vatham” (the genocide) based on the Mahavamsa-minded genocide committed on Eezham Tamils.
Poet Kaasi Ananandan, Seeman, MDMK Mallai Sahthiya, Viduthalai Rajendran, Vel Murugan of Paattali Makkal Kadchi and artists Oaviyar Chanthaanam, Professor Saraswathy, Thileepan Manram Thiyaagu were some of the prominent activists and artists, who took part in the event that began at 5:45 p.m. and ended at 8:40 p.m.
“People have begun to realise the importance of forging united action beyond political or caste identities, as Muthukumar, who sacrificed his life for bringing awareness for a mass struggle in Tamil Nadu as a response to the genocide being committed on Eezham Tamils,” the organisers said.
“The gathering is a message to New Delhi that that the time has come for Tamils in Tamil Nadu to stand for the Eezham Tamil brethren’s fight for justice,” they further said.
Hereafter, people in Tamil Nadu should be prepared to rise up and show their peoples’ responses for all future oppressions committed against Tamils, Mr. Thirumurukan Gandhi said at the end of the event.
Similar memorial events expressing solidarity were also observed in Madurai, Coimbatore and other places in the State, sources in Chennai said.

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.

தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.

எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.

பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.

கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

சிவன் கோயில் பிரச்சனை – வாசகர் கருத்து

சிவன் கோயில் திருவிழாவின் பொழுது என்ன பிரச்சனை என்று முழுவதுமாக எமக்கு தெரியாது. ஆனால் இது தொடர்பாக வாசகர் ஒருவர் அனுப்பிய பொதுவான கருத்தை அவரது பெயர் நீக்கப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

[தாமரன்கோட்டையில்] ஏன் இப்படி செய்கிறார்கள், உள்ளூர் லோக்கல் பொலிடிக்ஸ் அரசியல் செய்ய சிவன் கோவிலா கிடைத்தது. அநியாயங்களை தட்டி கேட்க கடவுள் வருவார். ஆனால் இப்படி செய்யும் இவர்களை யார் கேட்பார் என்று தெரியவில்லை. தாமரன்கோட்டை இனைய தளம் நீங்கள்தான் பராமரித்து கொண்டுள்ளிர்கள் எனவே தவறுகளையும் சுட்டி காட்டுங்கள். [மக்கள்] முன்னேற நாமும் படிக்கட்டாக இருப்பதில் தவறில்லை. அரசியல் வருடம்தான், ஆனால் ஆயுள் அப்படி இல்லை இறைவனின் சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி அவஸ்தை பட வேண்டாம்.

எந்தத்துறையில் எவ்வளவு வேலை வாய்ப்பு?

மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படிப்புக்கு எந்த துறையை தேர்வு செய்யலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிக்கொண்டிருக்கும் நேரம் இது. எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள முக்கிய கேள்வி. அவர்களுக்கு உதவும் வகையில் மாஃபோய் நிறுவனம் ஒவ்வொரு முக்கிய துறையிலும் உள்ள வேலை வாய்ப்பு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவருகிறது. அதன் தமிழ் சுருக்கத்தை இந்த வலைப்பதிவில் காணலாம்.

+2 தேர்வு முதல் மூன்று இடம் பெற்றவர்கள்

தாமரன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களின் விபரம்.

  1. கல்பனா – 1088 – முதலிடம்
  2. ரமேஷ் பாபு – 1076 – இரண்டாமிடம்
  3. அலெக்ஸ் பாண்டியன் -1070 – மூன்றாமிடம்

கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற்ற எல்லா மாணவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் எமது வாழ்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

பட்டுக்கோட்டையில் கை, பேராவூரணியில் முரசு வெற்றி

22:00 PM பேராவூரணியில் தேமுதிக வேட்பாளர் அருண்பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு விபரம் அருண்பாண்டியன் – 51010, மகேந்திரன் – 43816, திருஞானசம்பந்தம் – 25137

17:45 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 49943, மகேந்திரன் – 43474, திருஞானசம்பந்தம் – 24661

15:25 PM பட்டுக்கோட்டையில் N R ரெங்கராஜன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. வாக்கு விபரம் ரெங்கராஜன் 55482, செந்தில் குமார் 46703, யோகானந்தம் 22066

14:55 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 24810, மகேந்திரன் – 22447, திருஞானசம்பந்தம் – 13242

13:59 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 54103, செந்தில் குமார் 45834, யோகானந்தம் 21755

13:59 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 12491, மகேந்திரன் – 11440, திருஞானசம்பந்தம் – 5677

13:33 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 50157, செந்தில் குமார் 42761, யோகானந்தம் 21173

13:22 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 47475, செந்தில் குமார் 39537, யோகானந்தம் 20877

13:11 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 44446, செந்தில் குமார் 36742, யோகானந்தம் 20069

13:11 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 9723, மகேந்திரன் – 9615, திருஞானசம்பந்தம் – 4085

12:52 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 39606, செந்தில் குமார் 34445, யோகானந்தம் 19806

12:35 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 37304, செந்தில் குமார் 31858, யோகானந்தம் 17596

12:35 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 6366, மகேந்திரன் – 6033, திருஞானசம்பந்தம் – 2697

12:10 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 28428, செந்தில் குமார் 24922, யோகானந்தம் 16316

11:10 AM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 20000, செந்தில் குமார் 18000, யோகானந்தம் 16000

10:45 AM: பேராவூரணியில் 55 வாக்கு வித்தியாசத்தில் மகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

10:15 AM: பேராவூரணியில் அருண்பாண்டியன் முன்னிலை என சன் செய்திகள் தெரிவிக்கின்றன

10:00 AM : தேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் பட்டுக்கோட்டையில் முன்னிலை வகிப்பதாக தகவல் தெரிகிறது. வாக்கு நிலவரம் சிறிது நேரத்தில் எதிர்பார்க்கப் படுகிறது. பேராவூரணி தகவல் எதுவும் வரவில்லை

யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பான தினமணி செய்தி

பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் திரு யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பாக தினமணி நாளிதழின் இணையதளத்தில் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

பட்டுக்கோட்டை, ஏப். 13: பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேர் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனுக்குப் போட்டியாக, அதே கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஆர். மாரிமுத்து மகனுமான யோகானந்தம் போட்டியிடுகிறார்.

அவரைப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு சமரச முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், யோகானந்தம் போட்டியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர் யோகானந்தம், அவரது ஆதரவாளர்களான வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் துவரங்குறிச்சி கே.ஆர். நாடிமுத்து (80), வேப்பங்குளம் எஸ். திருஞானம் (58), யோகானந்தம் நண்பர் செம்பாளூர் குருநாதன் (48) ஆகியோர் வாக்குப் பதிவைப் பார்வையிடுவதற்காக புதன்கிழமை பிற்பகல் காரில் பொன்னவராயன்கோட்டை வாக்குச் சாவடிக்குச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனின் ஆதரவாளர்களான பொன்னவராயன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் வை. நடேசன் உள்ளிட்ட சிலர் யோகானந்தத்தை திட்டிப் பேசியதுடன், அவருடன் சென்ற 3 பேரையும் உருட்டுக் கட்டையால் தாக்கினராம். மேலும் அவர்கள் யோகானந்தம் சென்ற கார் கண்ணாடியையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த திருஞானம் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையிலும், மற்ற இருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பி. செல்வராஜ் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாழக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்நது மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல ஆலத்தூர், தாமரங்கோட்டையில் யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டது.

நன்றி : தினமணி