TN Tamils gathered to remember Mullivaikkal in Marina beach

Keeping aside party identities, religions and castes, more than 30,000 people of grass root Tamil Nadu gathered in Marina Beach of Chennai on Sunday to remember the genocide committed on Eezham Tamils and to call for independent and sovereign Tamil Eelam, sending a strong message to New Delhi and to the international community, the organisers of the event said. The congregation organised by Mr. Thirumurukan Gandhi of May 17 Movement, received massive support and participation of leaders cutting across party lines, similar grass root movements, civil society organisations, artists, social workers and the common public that has come with families bringing even their children.

The event was mobilised through social media and grass root organisations with little resources and within a short span of time.

The Tamil Nadu police anticipated participation of only around 500, media reports said.
The highlights of the event were paying homage to the Eezham Tamil victims of the genocide by lighting candlesticks and raising slogans calling for the independence of Tamil Eelam.

“We will never forget the genocide; Tamil Eelam is the only solution; New Delhi, stop betraying Tamils, and we in Tamil Nadu will stand with Eezham Tamils,” were the main slogans that were raised by the thousands who gathered at the Marina Beach.
Usually, the pattern in Tamil Nadu is that only mainstream political parties are capable of organising gatherings of mass participation. But, for the first time after a long time, the grass root Tamil Nadu gathered for such an event, in such a way as a mass uprising, responding to the call of a civil society movement.
Contrary to the usual practices of such gatherings, there were no lengthy speeches, except for a brief introduction by Mr. Pazha Nedumaran on the purpose of the gathering and a thanking speech at the end by the organiser, Mr. Thirumurukan Gandhi.
Mr. Umar Naina, a co-organiser said that he was inspired to involve in calling for mass uprisings after his exposure to the crisis of the fishermen of Tamil Nadu.
Displaying a folklore touch to the event were a programme of “Oppaari” (traditional way of wailing) and a folk theatre performance “Vamsa vatham” (the genocide) based on the Mahavamsa-minded genocide committed on Eezham Tamils.
Poet Kaasi Ananandan, Seeman, MDMK Mallai Sahthiya, Viduthalai Rajendran, Vel Murugan of Paattali Makkal Kadchi and artists Oaviyar Chanthaanam, Professor Saraswathy, Thileepan Manram Thiyaagu were some of the prominent activists and artists, who took part in the event that began at 5:45 p.m. and ended at 8:40 p.m.
“People have begun to realise the importance of forging united action beyond political or caste identities, as Muthukumar, who sacrificed his life for bringing awareness for a mass struggle in Tamil Nadu as a response to the genocide being committed on Eezham Tamils,” the organisers said.
“The gathering is a message to New Delhi that that the time has come for Tamils in Tamil Nadu to stand for the Eezham Tamil brethren’s fight for justice,” they further said.
Hereafter, people in Tamil Nadu should be prepared to rise up and show their peoples’ responses for all future oppressions committed against Tamils, Mr. Thirumurukan Gandhi said at the end of the event.
Similar memorial events expressing solidarity were also observed in Madurai, Coimbatore and other places in the State, sources in Chennai said.

Like and Share

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.

தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.

எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.

பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.

கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

Like and Share

பட்டுக்கோட்டையில் கை, பேராவூரணியில் முரசு வெற்றி

22:00 PM பேராவூரணியில் தேமுதிக வேட்பாளர் அருண்பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு விபரம் அருண்பாண்டியன் – 51010, மகேந்திரன் – 43816, திருஞானசம்பந்தம் – 25137

17:45 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 49943, மகேந்திரன் – 43474, திருஞானசம்பந்தம் – 24661

15:25 PM பட்டுக்கோட்டையில் N R ரெங்கராஜன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. வாக்கு விபரம் ரெங்கராஜன் 55482, செந்தில் குமார் 46703, யோகானந்தம் 22066

14:55 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 24810, மகேந்திரன் – 22447, திருஞானசம்பந்தம் – 13242

13:59 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 54103, செந்தில் குமார் 45834, யோகானந்தம் 21755

13:59 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 12491, மகேந்திரன் – 11440, திருஞானசம்பந்தம் – 5677

13:33 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 50157, செந்தில் குமார் 42761, யோகானந்தம் 21173

13:22 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 47475, செந்தில் குமார் 39537, யோகானந்தம் 20877

13:11 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 44446, செந்தில் குமார் 36742, யோகானந்தம் 20069

13:11 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 9723, மகேந்திரன் – 9615, திருஞானசம்பந்தம் – 4085

12:52 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 39606, செந்தில் குமார் 34445, யோகானந்தம் 19806

12:35 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 37304, செந்தில் குமார் 31858, யோகானந்தம் 17596

12:35 PM: பேராவூரணி அருண்பாண்டியன் – 6366, மகேந்திரன் – 6033, திருஞானசம்பந்தம் – 2697

12:10 PM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 28428, செந்தில் குமார் 24922, யோகானந்தம் 16316

11:10 AM: பட்டுக்கோட்டை ரெங்கராஜன் 20000, செந்தில் குமார் 18000, யோகானந்தம் 16000

10:45 AM: பேராவூரணியில் 55 வாக்கு வித்தியாசத்தில் மகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

10:15 AM: பேராவூரணியில் அருண்பாண்டியன் முன்னிலை என சன் செய்திகள் தெரிவிக்கின்றன

10:00 AM : தேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் பட்டுக்கோட்டையில் முன்னிலை வகிப்பதாக தகவல் தெரிகிறது. வாக்கு நிலவரம் சிறிது நேரத்தில் எதிர்பார்க்கப் படுகிறது. பேராவூரணி தகவல் எதுவும் வரவில்லை

Like and Share

யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பான தினமணி செய்தி

பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் திரு யோகானந்தம் தாக்கப்பட்டது தொடர்பாக தினமணி நாளிதழின் இணையதளத்தில் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

பட்டுக்கோட்டை, ஏப். 13: பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் புதன்கிழமை பிற்பகல் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேர் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனுக்குப் போட்டியாக, அதே கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஆர். மாரிமுத்து மகனுமான யோகானந்தம் போட்டியிடுகிறார்.

அவரைப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு சமரச முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், யோகானந்தம் போட்டியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர் யோகானந்தம், அவரது ஆதரவாளர்களான வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் துவரங்குறிச்சி கே.ஆர். நாடிமுத்து (80), வேப்பங்குளம் எஸ். திருஞானம் (58), யோகானந்தம் நண்பர் செம்பாளூர் குருநாதன் (48) ஆகியோர் வாக்குப் பதிவைப் பார்வையிடுவதற்காக புதன்கிழமை பிற்பகல் காரில் பொன்னவராயன்கோட்டை வாக்குச் சாவடிக்குச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜனின் ஆதரவாளர்களான பொன்னவராயன்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் வை. நடேசன் உள்ளிட்ட சிலர் யோகானந்தத்தை திட்டிப் பேசியதுடன், அவருடன் சென்ற 3 பேரையும் உருட்டுக் கட்டையால் தாக்கினராம். மேலும் அவர்கள் யோகானந்தம் சென்ற கார் கண்ணாடியையும் உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த திருஞானம் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையிலும், மற்ற இருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பி. செல்வராஜ் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாழக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்நது மறியல் கைவிடப்பட்டது.

இதேபோல ஆலத்தூர், தாமரங்கோட்டையில் யோகானந்தத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டது.

நன்றி : தினமணி

Like and Share

அகலப்பட்டை (Broadband) இணைய வசதி

Broadbandphoto © 2009 Gavin St. Ours | more info(via: Wylio)

தாமரன்கோட்டையில் அகலப்பட்டை (Broadband) இணைய வசதி இல்லாத குறை இப்பொழுது தீர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் BSNL துவரங்குறிச்சி தொலைபேசி இணைப்பகத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதிலிருந்து இவ்வசதி தாமரன்கோட்டையிலும் கிடைக்கிறது.

இணைய வசதி மிக அவசியம் என்றாகிவிட்டு நிலையில் தாமரன்கோட்டையிலும் இவ்வசதி கிடைப்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மிக உதவியாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக, ப்ரவுசிங் செண்ட்டர் ஒன்றை யாரேனும் ஒரு தொழில் முனைவர் தொடங்கினால், தனிப்பட்ட முறையில் இணைய வசதி பெற இயலாதவர்களுக்கு மிக பயனாக இருக்கும். தற்போது இணைய சேவைக்கு பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தாமரன்கோட்டையிலேயே இணைய சேவை வந்துள்ளதால், இணையம் பற்றிய அறிதலும், இணைய பயன்பாடும் மக்களிடையே அதிகரிக்கும். மேலும் நமது தாமரன்கோட்டை இணைய தளம் புதிய தகவல்களுடன் அடிக்கடி புதுப்பிக்கப்படவும் இது உதவியாக இருக்கும்.

பிகு: இந்த பதிவு தாமரன்கோட்டையிலிருந்து வலையேற்றப்படும் முதல் பதிவு என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Like and Share

திரு. J.K அவர்களின் மணவிழா

தாமரன்கோட்டை இணையதள நிர்வாகி அண்ணன் திரு. J.P.ஜெயக்குமார் அவர்களின் திருமணம் நாளை (12/09/2010) ஞாயிற்றுகிழமை தாமரன்கோட்டை அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது .

 

நேரம்         : காலை  9:00 – 10:30

 

மணமக்கள் : ஜெயக்குமார் – பாக்கியலட்சுமி

 

இடம்          : மணமகன் இல்லம் , தாமரன்கோட்டை .

 

 

மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வில் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.
                                                        – சிங்கப்பூர் வாழ் நண்பர்கள்.

Like and Share

பூமியின் பரிசு – 2

“அப்படி என்ன சிறப்பு  அந்த கிரகத்தில் ”
“அதுவும் நம் கிரகத்தை போன்ற அமைப்பை உடையது”
“அப்படியா”
“ஆமாம் .அங்கேயும் நம்மை போன்று உருவம் கொண்டவர்கள் வாழ்கிறார்கள் ”
“கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது ”
“அந்த ஆச்சர்யத்தை அனுபவிப்பதற்குத்தான்  டோரா அங்கு சென்றான் ”
“இப்பொழுது அவன் என்னவாகி இருப்பான்”
“தெரியவில்லை. அதற்குதான் நாம் அங்கே சென்று கொன்று இருக்கிறோம் ”
“தயாராய் இரு. இன்னும் சிறிது நேரத்தில் நாம் தரையிறங்கி விடுவோம் ”
விண்கலம் பூமியை நெருங்கி கொண்டு இருந்தது .திடீரென்று கலத்தின் அபாய மணி ஒலிக்க தொடங்கியது .டினா பயந்தபடியே கேட்டாள் ” என்ன சத்தம்”
“நமக்கும் நம் கிரகத்தின் கட்டுபாட்டு அறைக்குமான 

தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது ”
“அப்படியா”
“என்ன சாதரணமாக கேட்கிறாய் ?உனக்கு பயமே இல்லையா ”
“நீ அருகில் இருக்கும்போது எனக்கு என்ன பயம் .எப்படியும் சரி செய்து  விடுவாய் .அப்படியே உன்னால் முடியாமல் நாம் இறக்க நேர்ந்தாலும் உன்னோடு இறப்பதில் மகிழ்ச்சியே !”
“நல்ல வேலை எங்கே அழுது புரண்டு விடுவாயோ என்று பயந்து விட்டேன் .என்மீது நீ வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி ”
விண்கலத்தை சோதித்தான் .எல்லாம் சரியாக இயங்கி கொண்டு இருந்தது.ஆனால் வெளியே தொடர்பு  கொள்ள முடியவில்லை.
“ஒன்றும் பயப்படுவதற்கு   இல்லை.நாம் பூமியை நெருங்கி விட்டோம் .விண்கலம் சரியாகத்தான் உள்ளது .தொலைதொடர்பு கருவிகள் வேலை செய்ய மறுக்கின்றது ”
“ஏன்”
“என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் ,பூமியில் மிகப்பெரிய அளவில் எதோ மாற்றம் நடந்திருக்க வேண்டும் .கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து  இருக்க வேண்டும்.அனேகமாக டோராவும் இதனால் பாதிப்படைந்து இருக்கலாம் .எதற்கும் தயாராய் இரு.நிலைமை மோசமாக இருந்தால் தரையிறங்காமல் மீண்டும் கிளம்பி விடலாம் ”
“உனக்கும் வாழும் ஆசை வந்துவிட்டதோ?”
“அனாவசியமாக உயிரை இழக்க ஆசையில்லை”
ஆனால் அவன் நினைத்தது போல் இல்லாமல் பூமி மிக அமைதியை இருந்து.
விண்கலத்தின் வழியே நிலைமையை அறிந்த டிமு  மெல்ல மெல்ல விண்கலத்தை தரை இறக்கினான் .விண்கலம் மெதுவாக தரையை தொட்டு நின்றது.
மெதுவாக கதவை திறத்து வெளியே வந்தான்.ஒரு கை கொடுத்து அவளையும் வெளியே அழைத்தான் .சூரிய ஒளி அவன் கண்ணை என்னவோ செய்தது .மெதுவாக கண்களை திறந்து பார்த்தான்.பூமியில் எங்கும் ஒரே அமைதி.
பார்ப்பதற்கு யாருமே இல்லை.அங்கு இருந்த கட்டங்கள் தூசி படிந்து பயன்படுத்தப்படாத பழைய கட்டிடங்கள்  போல்   

காட்சிஅளித்தது .
“என்ன பூமி அழகான் கிரகம் என்று சொன்னாய் .அதற்கான் அறிகுறியே இல்லை”
“நான் நினைத்தது போலவே இங்கு வானிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது .அதனால் அனைத்து உயரினமும் அழிந்திருக்கக்கூடும் ”
“இப்போது நாம் என்ன செய்வது”
“எங்களுடைய திட்டப்படி டோரா வந்து இறங்க  வேண்டிய இடம் இதுதான்.வா ஏதும்  அறிகுறி தெரிகிறதா என்று பாப்போம் ”
சிறுது தூரம் நடத்து சென்றார்கள் .
“டிமு .அதோ பார் நம் விண்கலத்தை போன்றே ஒன்று”
இருவரும் அது இருந்த இடம் நோக்கி விரைந்தனர்.ஆம் டோராவின் விண்கலம் அங்கே சிதைந்து கிடந்தது .
“டோராவின் கதை முடிந்து விட்டது.அவன் வந்து இறங்கியபொழுது இங்கே ஏதாவது இயற்கை சீற்றம் நடந்திருக்க வேண்டும் .அதனால் அவன் மரணமடைந்து இருக்கலாம்.வா இன்னும் கொஞ்ச தூரம் சென்று பாப்போம்”
இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றார்கள் .அங்கே அழகான கடற்கரை .எதுவுமே நடக்காதது  போல் கடல் அமைதியாய் இருந்தது.
“இனி நடந்து பயனில்லை.சிதைந்த விண்கலத்திலிருந்து சிலவற்றை எடுத்துக்கொண்டு நாம் திரும்புவோம்”
“நான் எடுத்து வருகிறேன் நீ சென்று விண்கலத்தில் இரு’
“சரி” .
டினா சென்று வின்கலதிற்குள் நுழைந்தாள்.டிமு சிதைந்த விண்கலத்தில் இருந்து சில பாகங்களை கழற்றி கொண்டு இருந்தான்.அப்போது காற்றில் ஒரு மெல்லிய சத்தம் அவனை வருடியது.கழற்றிய பாகங்களை கையில் எடுத்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான்.சிறிது தூரத்தில் ஒரு இசை பொருள்கள் விற்கும் கடையிலிருந்து அந்த சத்தம் வந்து கொண்டு இருந்தது.பயந்துகொண்டே உள்ளே சென்றான்.மெதுவாக அதை எடுத்தான்.அதிலிருந்து வரும் சத்தம் அவனை எதோ செய்தது.அவன் எடுத்தது ஒரு வீணை.
வீணையை கையில் எடுத்து கொண்டு கலம் திரும்பினான்.
டினா ஆர்வமாக கேட்டாள் .
“என்ன அது ”
“தெரியவில்லை .இதிலிருந்து வரும் சத்தம் அருமையாக உள்ளது”
“அப்படியா”
டினா அதில் உள்ள நரம்புகளை அழுத்தினாள்.விதவிதமாக ஒளி வெளிப்பட்டது.
“இது எனக்கு தருவாயா?”
“தருவாயவா?இது உனக்கு மட்டுமேயான உன் அன்பு டிமுவின் காதல் பரிசு”
அவளுடைய பார்வையில் நன்றி,காதல்,அன்பு இன்னும் என்னென்னவோ ஒரு மொத்தமாக வெளிப்பட்டது.
“உன் பரிசை நான் ஏற்றுகொள்கிறேன்”
“உனக்கு இது என் பரிசு.நமக்கு இது பூமியின் பரிசு”
“சரி புறப்படலாமா”
“ம்.சரி”
டிமு விண்கலத்தை கிளப்பினான்.ஒரு சிறய குலுங்கலோடு விண்கலம் மேலும்பி பறக்க தொடங்கியது.
ஆனால் பூமி அவர்களுக்கு  வேறு ஒரு பரிசை அவர்களுக்கு  தெரியாமலேயே அவர்களது உடலில் செலுத்தி இருந்தது.அது h2b2 என்ற உயிர்கொல்லி கிருமி. ஆங்காங்கே நடந்த இயற்கை சீற்றத்தாலும் ,வானிலை மாற்றத்தாலும்   உருவான h2n2 கிருமி மிக வேகமாக பரவி உலகில் அனைத்து உயிரினங்களையும் அழித்திருந்தது.மேலும் அதும் காற்றிலே பரவக்கூடிய அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.
இந்த h2n2 வை உடலில் கொண்டு ,வீணையை கையில் கொண்டு ,காதலை மனதில் கொண்டு இருவரும் தங்கள் கிரகம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்த கிரகமும் இந்த புதிய விருந்தாளியை வரவேற்க தயாராகவே இருந்தது.
                                                                                                                        —–முற்றும்—–
 
நன்றி
மு.வினோத்

Like and Share

ஓவியங்கள்

நானில வேந்தன் வரைந்த சில அருமையான ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.  உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு நானிலவேந்தனின் திறமையை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

அசோகச் சக்கரம் :  என் தேசத்தை நேசிக்கிறேன்

மீரா பாய்: அன்பின் வடிவம்

அன்னை தெரெசா : கடவுளுக்கு நிகரானவர்

சாக்ரடீஸ்: இவருடைய தேசப்பற்று

திருநங்கை: இவர்களின் அவல நிலை எப்போது மாறும்

ஓவியம்/கருத்துகள் – நானில வேந்தன்

Like and Share

பூமியின் பரிசு

அவன் – டிமு
அவள் -டினா
காலைமணி 7ஐ நெருங்கி கொண்டிருந்தது. விண்கலம் புறப்படுவதற்கு எல்லாவித ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. டிமு வேகமாக டினாவின்   வீட்டிற்குள் நுழைந்தான் .
“டினா, சீக்கிரம் புறப்படு. விரைவாக  செல்ல வேண்டும்”
“எங்கே”
“பிறகு சொல்கிறேன் “
புறப்பட்டு வந்தவளை தடுத்து நிறுத்தினான்.
“என் மீது அவ்வளவு நம்பிக்கையா ?”
“நீ என்ன அரசியல்வாதியா? நம்பிக்கை துரோகம் செய்ய? அறிவியல் விஞ்ஞானி. என் வருங்கால கணவனும் கூட. உன்னை நம்பாமல் யாரை நம்புவேன் “
“அப்படியானால்  கண்ணை மூடு”
“எதற்கு”
“என் மேல் நம்பிக்கை இல்லையா? “
கண்ணை  மூடினாள் டினா. இரண்டு கண்களையும் மறித்து துணியால் கட்டினான்.
“என்ன செய்கிறாய்?”
“பேசாமல் வா”
அவளை  ஒரு வாகனத்தில் ஏற்றி ஏவுதளம் நோக்கி விரைந்தான்.
“வாங்க டிமு. கொஞ்சம் தாமதம். இவர்களை அழைத்து செல்லத்தான்  சிறப்பு அனுமதி கேட்டீர்களா?”
“ஆமாம். இவள் டினா. என் வருங்கால மனைவி.”
“ஏன் அவள் கண்  கட்டப்பட்டுள்ளது “
“அவளை எங்கே அழைத்து செல்கிறேன் என்று அவளுக்கே தெரியாது “
” உங்கள் காதல் விடயத்தில் வேலையை கோட்டை விட்டு விடாதீர்கள் “
“அப்படி எதுவும் நடக்காது. ஒரு சாதனையாளனாக இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதனால்தான் யாரும் முன்வராத இந்த வேலையை நான் கையில் எடுத்துள்ளேன் “
“வாழ்த்துக்கள். வெற்றியோடு திரும்புங்கள் “
“நன்றி”
கண்ணை கட்டியபடியே அவளை விண்கலத்தில் அமரவைத்தான். விண்கலம் புறப்படத் தயாரானது.
கட்டுபாட்டுஅறையிலிருந்து உத்தரவு வந்ததும் விண்கலத்தை கிளப்பினான் டிமு. ஒளியின் வேகத்தை  மிஞ்சி விண்கலம் சீறி பாய்ந்தது .
“டிமு நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் இப்பவாவது சொல்லேன் ?”
“கொஞ்சம் பொறுமையாக இரு சொல்கிறேன் “
“கண்ணையாவது அவிழ்த்து விடேன் “
“இன்னும் இரண்டு நிமிடங்கள் “
இரண்டு நிமிடம் கழிந்தன.
மெதுவாக அவளது கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து கைகளால் மூடிக் கொண்டான்.
“டினா. நீ நட்சத்திரத்தை அருகில்  பார்க்கவேண்டுமா “
“ஏன் அது என்ன உன் வீட்டு மாடியிலா உள்ளது “
“வேண்டுமா ? வேண்டாமா?”
“வேண்டாம் என்று சொன்னால் மட்டும் விட்டு விடவா போகிறாய். சரி வேண்டும்”
“இதோ பார்”. அவள் கண்களை திறந்து கண்ணாடி வழியே காண்பித்தான் .
ஒரு நிமிடம் அவள் தன்னை கிள்ளி பார்த்து கொண்டாள்.
“ஆ மோத போகிறது .”
“பயப்படாதே. இது தூரத்தில் இருக்கும் பொருளை அருகில் காட்டும் விசேஷ கண்ணாடி. அந்த நட்சத்திரம்  வெகு தொலைவில் உள்ளது “
“நான் எங்கே இருக்கிறேன் “
“நட்ட நடு ஆகாயத்தில். நீயும் நானும் மட்டும்”
“என்னை எங்கே கடத்தி செல்கிறாய் “
“வேறு ஒரு கிரகம் நோக்கி செல்கிறோம் “
“ஏன்”
“நம்முடைய தேனிலவு ஒத்திகை “
“உண்மையை சொல்” முறைத்தபடியே கேட்டாள் டினா.
“சரி  சொல்கிறேன், தெளிவாக கேள். நம்முடைய கிரகத்தில் மிகபெரும் பணக்காரர் டோரா. உனக்கு தெரிந்திருக்கும். அவருடைய ஒரே மகன் லிம். தேனிலவுக்காக வேறு ஒரு கிரகத்திற்குச் சென்றான்”
“ஏன் நம்மூரில் இடமே இல்லையா ?”
“ஏன் இல்லை.ஆனால் அவனிடம் பணம் நிறைய உள்ளது. அதை செலவு செய்ய ஆள் இல்லை அதனால்தான். குறுக்கே பேசாமல் கேள் “
“சரிங்க குரு”
“சென்றவன் இன்னும்  திரும்பவில்லை. அவன் சென்று இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. எங்களுடைய திட்டப்படி அவன் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அவை தேடிதான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் “
“என்ன???அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்”
“பயப்படாதே! உன்னை விட்டு செல்ல என்னக்கு மனமில்லை அதனால்தான் சிறப்பு அனுமதியோடு உன்னையும் அழைத்து செல்கிறேன்”
சற்றே தெளிந்தவளாய் “எனக்கு  தலை சுற்றுகிறது “
“பயப்படாதே! நான் இருக்கிறேன்”
“சரி அப்படி என்ன கிரகதிற்குதான் சென்றான் “
“அவன் சென்ற கிரகத்தின் பெயர் ………….பூமி
அடுத்த பதிவில் முடியும் …(கொஞ்சம் பிஸி)
நன்றி
மு.வினோத் .
Like and Share

சிவன் கோயில் திருப்பணி நிதியுதவி கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரன்கோட்டை அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு கண்டேஸ்வர சுவாமி திருக்கொயில் திருப்பணி வேலைகள் பெருவாரியாக முடிவடைந்துள்ளன. தற்சமயம் வர்ணம் பூசும் வேலைகளுக்கு நிதியதவி தேவைப்படுகிறது.

கீழ்கண்ட திருப்பணி வெலைகளுக்கு நிதியுதவி செய்து இறைவனின் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வ. எண் திருப்பணி வர்ணம் – விபரம் வர்ணம்-பொருள் தொகை வர்ணம் பூச கூலி தொகை கூடுதல் தொகை
1. அ/மி விநாயகர் சன்னதி 21,875 22,400 44,225
2. அ/மி சுப்ரமண்ய சுவாமி சன்னதி 21,875 23,340 45,225
3. அ/மி சண்டிகேஸ்வரர் சன்னதி 4,375 5,740 10,115
4. அ/மி பைரவர் சன்னதி 21,875 11,800 33,674
5. அ/மி அம்மன் சன்னதி 30,625 28,900 59,525
6. இராஜ கோபுரம் 61,250 1,04,300 1,65,550
7. மூலஸ் தானம் (அ/மி சுவாமி சன்னதி) 43,750 46,040 89,790
8. அ/மி நடராஜர் சன்னதி 21,875 11,980 33,855
9. திருமதில் சுவர் 20,000 17,000 37,000
10. மணி மண்டபம் 4,375 10,650 15,025

குறிப்பு: மேற்காணும் திருப்பணி வர்ண வேலைகளை நேரடியாகவோ, திருப்பணிக்குழு மூலமாகவோ செய்யலாம். உபயதாரர்கள் பெயர்கள் திருக்கொயில் கல்வெட்டில் பதிக்கப்படும்.

தொடர்பு முகவரி:
திருக்கோயில் அலுவலகம் – 9789257263
திருப்பணிக்குழு தலைவர் – சி முருகப்பன் 99429 25933/04373 283141

இப்படிக்கு
திருப்பணிக்குழு

[இவ்வறிக்கை சிவன் கோயில் திருப்பணிக் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது]

Like and Share