தீமிதி திருவிழா…FIRE WALKING FESTIVAL…IMAGES

தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஒருலட்சம் பக்தர்கள் தீ மிதித்தார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை கீழக்காடு அருள்மிகு தீக்குதித்த அம்பாளுக்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com




நன்றி: http://thanjavure.blogspot.com/2008/05/fire-walking-festivalimages.html

Like and Share

சிங்கப்பூரில் அய்யனார் கோவில் கும்பாபிஷேக நன்கொடை திரட்டும் பணி

தாமரன்கோட்டை மேற்கில் அமைந்திருக்கும் அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோவில் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இறைபணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு சிங்கப்பூரில் வாழும் தாமரன்கோட்டை மக்களிடம் திரு R.V.உதயகுமார் ,திரு S.கோவிந்தசாமி மற்றும் திரு V.வீரபாலு உள்ளிட்ட விழா குழுவினர் நன்கொடை திரட்டி வருகின்றனர் .ஊர் நண்பர்களும் தங்கள் பங்களிப்பை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது .நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் மேற்கண்ட விழா குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.
Like and Share