யோகானந்தம் ஆதரவாளர்கள் சென்னையில் கூட்டம்

பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டி வேட்பாளராக பலத்த ஆதரவுடன் களம் இறங்கியிருக்கும் யோகானந்தம் அவர்களின் ஆதரவாளர்கள் நாளை சென்னையில் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் கூட்டம் நடைபெறவிருக்கும் இடம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்களை பாலச்சந்தர் அவர்களை 9884213051 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Like and Share

பட்டுக்கோட்டையில் 12 வேட்பாளார்கள் போட்டி, பேராவூரணியில் 16 பேர்

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப் பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் சமர்ப்பிக்கப்பட்ட 17 மனுக்களில் 12 ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்கு முக்கிய போட்டி காங்கிரசின் சார்பில் போட்டியிடும் N R ரெங்கராஜன், தேமுதிக சார்பில் போட்டியிடும் N செந்தில்குமார் மற்றும் சுயெட்சையாக மக்கள் ஆதரவுடன் போட்டியிடும் ARM யோகானந்தம் ஆகியோருக்கிடையே நடைபெறும் எனத் தெரிகிறது

பேராவூரணித் தொகுதியில் 16 வேட்பு மனுக்கள் போட்டிக்கு ஏற்கப்பட்டுள்ளன. ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தாமரன்கோட்டையைச் சேர்ந்த K மகேந்திரன் இங்கு போட்டியிடுவதால் பேராவூரணித் தொகுதி முக்கிய கவனம் பெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகள்

தஞ்சாவூர் – 18 மனுக்களில் 9 ஏற்றுக்கொள்ளப்பட்டன
திருவையாறு – 12 மனுக்களில் 7 ஏற்றுக்கொள்ளப்பட்டன
பாபனாசம் – 14 மனுக்களில் 11 ஏற்றுக்கொள்ளப்பட்டன
கும்பகோணம் – 14 மனுக்களில் 10 ஏற்றுக்கொள்ளப்பட்டன
திருவிடைமருதூர் – 12 மனுக்களில் 10 ஏற்றுக்கொள்ளப்பட்டன

Like and Share

மகேந்திரனது இணையதளம் உதயம்

காங்கிரசின் சார்பில் பேராவூரணித் தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனது இணையதளம் www.kmahendran.in என்ற முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் இணையத்தின் மூலமான பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இணைய பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. இளைஞர்களை சென்றடைவதற்கு இணையம் சிறந்த வழியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மகேந்திரன் அணி தமது இணையதளத்தை துவங்கியுள்ளது.

செயல்திட்டங்களையும், அறிக்கைகளையும் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் விரைவாகவும் நேரடியாகவும் மக்களிடம் தொடர்புகொள்ள இயலும். மேலும், Twitter மற்றும் Facebook பொன்ற தளங்களில் செயல்படுவதன் மூலம் பரவலான இளைஞர்களையும் அதன் மூலம் பிற இணைய தொடர்பில்லாத மக்களையும் கவரலாம் என கருதப்படுகிறது. தமிழகத்தில் இது ஒரு முன்னோடி பிரச்சார அனுகுமுறையாக அமையலாம்.

Like and Share

பட்டுக்கோட்டையில் சுயேட்சையாக யோகானந்தம்

காங்கிரசின் சார்பில் போட்டியிரும் N R ரெங்கராஜன் MLA வை எதிர்த்து ஆலத்தூர் ARM அவர்களின் மகன் யோகானந்தம் சுயேட்சையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக NRR போட்டியிடுவது பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொகுதி மக்களுக்கு NRR களத்தில் இறங்கி பணியாற்றவில்லை என்றும் பலர் குறை கூறுகின்றனர். இதன் காரணமாக NRR வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் சுயேட்சையாக சமுதாய பின்புலம் உள்ள யாராவது நிறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

மருத்துவர் செல்லப்பன் உள்ளிட்ட பலரது பெயர் அடிபட்டது. தற்போதைய தகவல்கள் படி யோகானந்தம் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இவரது சகோதரர் காங்கிரஸ் சார்பில் பட்டுக்கோட்டையில் போட்டியிட விருப்ப மனு அளித்து தீவிரமாக முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Like and Share

பேராவூரணியில் காங்கிரசின் சார்பில் மகேந்திரன் போட்டி

முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போல பேராவூரணியில் மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தொகுதியில் தற்போது உறுப்பினராக இருக்கும் N R ரெங்கராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ராஹுல் காந்தியின் கோரிக்கைப்படி இளைஞர் காங்கிரசுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு 10 தொகுதிகளுக்கும் மேலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் காங்கிரசில் செயலாளராக பொறுப்பு வகிக்கும் மகேந்திரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவருக்குப் போட்டியாக தேமுதிக சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். புது தில்லியிலிரிருந்து இன்று சென்னை திரும்பும் மகேந்திரன் நாளை அல்லது நாளை மறுதினம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Like and Share

பட்டுக்கோட்டை தொகுதிக்கு தேமுதிக வேட்பாளார்

அதிமுக-தேமுதிக தொகுதி உடன்பாடு இன்று முடிவடைந்த பட்டுக்கோட்டை தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, N செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேமுதிக இளைஞரணியில் மாநில இணைச் செயலாளராக உள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதைப் போல் இம்முறையும் பட்டுக்கோட்டையில் மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக அதிமுக-மதிமுக தொகுதி உடன்பாட்டு பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2006 சட்ட மன்ற தேர்தலிலும் இவர் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 10688 (8.49%) வாக்குகள் பெற்றிருந்தார்.

கடந்தமுறை இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த தகவலின் படி, இவர் மீது இரண்டு வழக்குகள்(கொலை முயற்சி IPC 307 மற்றும் கூட்டம் சேர்த்து கடையில் புகுந்து சொத்துக்களை நாசம் செய்தது IPC 326 ) நிலுவையில் உள்ளன.

http://myneta.info/tn2006/candidate.php?candidate_id=990
http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/N.Senthil%20Kumar/NSENTHILKUMAR.htm
http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/N.Senthil%20Kumar/NSENTHILKUMAR_SC2.htm

Like and Share

பட்டுக்கோட்டை தொகுதி: முக்கியமான உள்ளூர் தேவைகள்

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உள்ளடங்கிய விவசாய கிராமங்கள், பொருளாதார, கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன. பல முறை தேர்தல் நடத்தப்பட்டு, பல பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் முக்கிய உள்ளூர் பிரச்சனைகள் தீர்க்கப்படவேயில்லை.

அவ்வாறாக தொடர்ந்து தீர்க்கப் படாமல் இருக்கும் உள்ளூர் பிரச்சனைகளை இந்த சுட்டியில்(Google Moderator) தெரிவியுங்கள், அல்லது வாக்களியுங்கள். இதில் பரவலாகத் தெர்ந்தெடுக்கப் படும் முதல் பத்து பிரச்சனைகளை கோரிக்கைகளாக எல்லா வேட்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களது பதில் பெறப்படும். வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினரிடம் அடுத்த 5 ஆண்டுகளில், இக்கோரிக்கை தொடர்பாக அவர் அளித்த பதில்கள் சுட்டிக்காட்டப்பட்டு, இவை நிறைவேற நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

சுட்டி : பட்டுக்கோட்டை தொகுதி: முக்கியமான உள்ளூர் தேவைகள்

Like and Share

மகேந்திரனுக்கு காங்கிரசில் வேட்பாளர் வாய்ப்பு

அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கமிட்டி செயலாளராக பொறுப்பு வகிக்கும் தாமரன்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன் அவர்களுக்கு காங்கிரசின் சார்பாக போட்டியிட வாய்ப்பளிக்கப் படலாம் எனத் தெரிகிறது.

பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி தொகுதிகளில் காங்கிரசின் சார்பில் வேட்பாளாராக இவர் நிறுத்தப்படலாம். மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், பிரதான கட்சிகளில் முதல் முறையாக தாமரன்கோட்டையிலிருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் என்ற பெருமை மகேந்திரனைச் சாரும். இதனால் நாளை அறிவிக்கப்பட இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

மகேந்திரன் தமிழகத்திலிருந்து இளைஞர் காங்கிரசின் தேசிய கமிட்டிக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பையும் இவர் வகிக்கிறார்.

http://iyc.in/sns/pg/groups/510500/iyc-national-committee/

Like and Share

பட்டதாரி மாணவர்களுக்கு மாதம் 1000ரூ மத்திய அரசு உதவி தொகை

மத்திய அரசு +2 தேர்வில் 80% க்கு மேல் மதிப்பெண் எடுத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை தமிழக கல்வித்துறை வரவேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்குறிப்பின் படி, தமிழகத்தில் 4883 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு மணவர்களுக்கு மாதம் 1000ரூபாயும், முதுகலை மாணவர்களுக்கு 2000ரூபாயும் வழங்கப்படும். 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை – 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.

Like and Share

அரசு நிறுவனத்திற்கு பொறியாளர்கள்(B.E./B.Tech.) சேர்ப்பு

இந்திய அரசு நிறுவனமான “Engineers India Limited” பல்வேறு பணிகளுக்கு Mechanical, Electrical, Civil Engineering, படித்த பட்டதாரி பொறியாளர்களை வேலைக்குச்சேர்க்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையத்தின் மூலமாக நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

இது பற்றி மேலதிக தகவல்களை http://recruitment.eil.co.in என்ற சுட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த தகவலை பிற வேலைதேடும் நபர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்.

Like and Share