சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல்

நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது, பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளா பொன்னவராயன்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு பார்வையிடச் சென்ற சுயேட்சை வேட்பாளர் யோகனந்தத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாக, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெருந்திரளான மக்கள் பட்டுக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டு பின்னர் போலிசாரின் உத்தரவாதத்தின் பேரில் பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. இப்பிரச்சனை சாதிப் பிரச்சனையாகவும் பெரிய கலவரமாகவும் மாற வாய்ப்புள்ளதால் பட்டுக்கோட்டை பகுதி பரபரப்பாக உள்ளது.
இது தொடர்பாக தி இந்துவில் வந்த செய்தி.

English summary:

Independent candidate Mr A.R.M. Yoganantham who contested the election on Shirt symbol in pattukkottai constituency was attacked at a polling booth in Ponnavarayankottai.

யோகானந்தத்திற்கு கோட் சின்னம்

போட்டியிடும் எல்லா வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை தொகுதி தேர்தல் சூடுபிடிக்கும் வகையில் களம் இறங்கியிருக்கும் போட்டி வேட்பாளர் ARM யோகானந்தத்திற்கு கோட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் பிற வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களும்

என். செந்தில்குமார் (தேமுதிக) – முரசு
முரளி கணேஷ் (பிஜேபி) – தாமரை
என்.ஆர். ரங்கராஜன் (காங்கிரஸ்) – கை
சி. இன்பரசன் (பகுஜன் சமாஜ்) – யானை
ஏ. சரவணன் (இந்திய ஜனநாயக கட்சி) – மோதிரம்
ஏ. ஐரின் – தொலைக்காட்சிப் பெட்டி
ஆர். சிங்காரவடிவேலன் – மெழுகுவர்த்தி
எஸ். செந்தில்குமார் – கூடை

பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களின் விவரங்கள்

இளங்கோ (பி.ஜே.பி.) – தாமரை
சி. அருண்பாண்டியன் (தேமுதிக) – முரசு
வி. மாயழகு (பகுஜன் சமாஜ் கட்சி) – யானை
கே. மகேந்திரன் (காங்கிரஸ்) – கை
மு. காளிமுத்து – கோட்
எஸ்.வி. திருஞானசம்பந்தம் – தொலைக்காட்சிப் பெட்டி
வி. சுப்பிரமணியன் – தேங்காய்
ஏ. முத்துகுமரன் – ஜக்கு
எம். பாலசுப்ரமணி – தொப்பி
தங்கமுத்து – வில்அம்பு

மகேந்திரனின் செயல் திட்ட அறிக்கை

காங்கிரஸ் சார்பில் பேராவூரணியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் தாம் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை செயல் திட்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்

திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதை குறுகிய ரயில் பாதையாக இருப்பதை அகல ரயில் பாதையாக மாற்றி இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உடன் நிறைவேற்றிட பாடுபடுவேன்
பேராவூரணி தொகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் கூடுதலாக திறந்திட பாடுபடுவேன்
படித்த ஆண், பெண் இருபாலருக்கும் வெளிநாடுகளுக்கு இணையாக நல்ல சம்பளம் பெறும் வகையில் பெரிய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பேராவூரணி தொகுதிக்கு கொண்டுவருவேன்.
சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களில் தகுந்த 1000ம் நபர்களுக்கு, பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் கடன் உதவிகளை பெற்றுத்தர பாடுபடுவேன்.
நவீன ஜி.பி.எஸ் (GPS) எனும் கடலில் இடம் காட்டும் கருவிகள் மற்றும் மீன்வளம் காட்டும் கருவிகள் போன்றவை மீனவர்களுக்கு கிடைத்திட பாடுபடுவேன்
ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டம் மற்றும் பிற மத்திய மாநில அரசுகளின் மரபு சாரா எரிசக்தி உற்பத்தி திட்டங்களின் மூலம் தடையற்ற மின்சாரம் இத்தொகுதிக்கு கிடைத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன்

இளைஞர் காங்கிரசின் தேசிய கமிட்டி செயலாளராக இருக்கும் மகேந்திரன், ராகுல் காந்தியிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பேராவூரணி தொகுதியை அவரது தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதன் முயல்வார் என்றும், இத் தொகுதியை சிறந்த தொகுதியக மற்றிடுவார் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மாநில அமைச்சகங்களில் உள்ள தொடர்புகளின் மூலம், செயல் திட்டங்களில் உள்ள அம்சங்களை தன்னால் எளிதில் நிறைவேற்றிட இயலும் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்

அரசியில் கட்சிகள் மட்டுமே இதுபோல தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டு வரும்பொழுது, ஒரு வேட்பாளர் இது போல செயல்திட்ட அறிக்கை வெளியிடுவது புதுமுறையாகவும் வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது.

யோகானந்ததிற்கு இணையதளங்களில் பலத்த ஆதரவு

விகடன் குழுமும் இந்த தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்தவர்களும் அவரது தொகுதிதொடர்பாக கருத்து தெரிவிக்கும் படி “என் தொகுதி” என்ற பகுதியை தொடங்கியுள்ளது. பட்டுக்கோட்டை தொகுதிக்கான பக்கத்தில் உள்ள கருத்துக்களில் அறுதிப் பெரும்பான்மையானவை யோகானந்தத்திற்கு ஆதரவாகவும், N R R க்கு எதிராகவுமே உள்ளன.

உதாரணத்திற்கு

Swaminathan என்பவரின் கருத்து

Dear all, this time A.R.M.Yaga will win this election, every one will konw this matter, i am from athivetti, my caste different from A.R.M.yaga, even i request u all my friends, give ur vote to A.R.M.Yoga, this time give complete rest to N.R.minorrrrrrrrrrrr.,

இணையதளங்களை பாவிப்பவர்கள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள். இவர்களின் கருத்துக்களை மட்டும் கொண்டு வெற்றி வாய்ப்புகளை நிர்ணயிக்கமுடியாது. இருந்தாலும் இணையத்தில் யோகானந்தத்திற்கான ஆதரவு சதவீதம் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

யோகானந்தம் ஆதரவாளர்கள் சென்னையில் கூட்டம்

பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டி வேட்பாளராக பலத்த ஆதரவுடன் களம் இறங்கியிருக்கும் யோகானந்தம் அவர்களின் ஆதரவாளர்கள் நாளை சென்னையில் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் கூட்டம் நடைபெறவிருக்கும் இடம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்களை பாலச்சந்தர் அவர்களை 9884213051 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

பட்டுக்கோட்டையில் 12 வேட்பாளார்கள் போட்டி, பேராவூரணியில் 16 பேர்

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப் பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் சமர்ப்பிக்கப்பட்ட 17 மனுக்களில் 12 ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்கு முக்கிய போட்டி காங்கிரசின் சார்பில் போட்டியிடும் N R ரெங்கராஜன், தேமுதிக சார்பில் போட்டியிடும் N செந்தில்குமார் மற்றும் சுயெட்சையாக மக்கள் ஆதரவுடன் போட்டியிடும் ARM யோகானந்தம் ஆகியோருக்கிடையே நடைபெறும் எனத் தெரிகிறது

பேராவூரணித் தொகுதியில் 16 வேட்பு மனுக்கள் போட்டிக்கு ஏற்கப்பட்டுள்ளன. ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தாமரன்கோட்டையைச் சேர்ந்த K மகேந்திரன் இங்கு போட்டியிடுவதால் பேராவூரணித் தொகுதி முக்கிய கவனம் பெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகள்

தஞ்சாவூர் – 18 மனுக்களில் 9 ஏற்றுக்கொள்ளப்பட்டன
திருவையாறு – 12 மனுக்களில் 7 ஏற்றுக்கொள்ளப்பட்டன
பாபனாசம் – 14 மனுக்களில் 11 ஏற்றுக்கொள்ளப்பட்டன
கும்பகோணம் – 14 மனுக்களில் 10 ஏற்றுக்கொள்ளப்பட்டன
திருவிடைமருதூர் – 12 மனுக்களில் 10 ஏற்றுக்கொள்ளப்பட்டன

மகேந்திரனது இணையதளம் உதயம்

காங்கிரசின் சார்பில் பேராவூரணித் தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனது இணையதளம் www.kmahendran.in என்ற முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் இணையத்தின் மூலமான பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இணைய பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. இளைஞர்களை சென்றடைவதற்கு இணையம் சிறந்த வழியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மகேந்திரன் அணி தமது இணையதளத்தை துவங்கியுள்ளது.

செயல்திட்டங்களையும், அறிக்கைகளையும் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் விரைவாகவும் நேரடியாகவும் மக்களிடம் தொடர்புகொள்ள இயலும். மேலும், Twitter மற்றும் Facebook பொன்ற தளங்களில் செயல்படுவதன் மூலம் பரவலான இளைஞர்களையும் அதன் மூலம் பிற இணைய தொடர்பில்லாத மக்களையும் கவரலாம் என கருதப்படுகிறது. தமிழகத்தில் இது ஒரு முன்னோடி பிரச்சார அனுகுமுறையாக அமையலாம்.

பட்டுக்கோட்டையில் சுயேட்சையாக யோகானந்தம்

காங்கிரசின் சார்பில் போட்டியிரும் N R ரெங்கராஜன் MLA வை எதிர்த்து ஆலத்தூர் ARM அவர்களின் மகன் யோகானந்தம் சுயேட்சையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக NRR போட்டியிடுவது பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொகுதி மக்களுக்கு NRR களத்தில் இறங்கி பணியாற்றவில்லை என்றும் பலர் குறை கூறுகின்றனர். இதன் காரணமாக NRR வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் சுயேட்சையாக சமுதாய பின்புலம் உள்ள யாராவது நிறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

மருத்துவர் செல்லப்பன் உள்ளிட்ட பலரது பெயர் அடிபட்டது. தற்போதைய தகவல்கள் படி யோகானந்தம் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இவரது சகோதரர் காங்கிரஸ் சார்பில் பட்டுக்கோட்டையில் போட்டியிட விருப்ப மனு அளித்து தீவிரமாக முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NRR ஐ எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் நிறுத்த முயற்சி?

மூன்றாவது முறையாக காங்கிரசு சார்பில் போட்டியிடப் போகும் தற்போதைய உறுப்பினர் ரெங்கராஜனை எதிர்த்து சுயேட்சை வேட்பாளரை நிறுத்த முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. பட்டுக்கோட்டை தொகுதி தொடர்ந்து காங்கிரசுக்கு செல்வதால் சில திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் உறுப்பினராக தொகுதி மக்களுக்கு ரெங்கராஜன் அவர்கள் ஆற்றிய பணியிலும் பலர் குறைபாடுகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர்களுக்க வாய்ப்பு இல்லை என்று வந்த தகவல்களைத் தொடர்ந்து, வேறு யாருக்காவது தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெங்கராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேட்பாளராக இடம் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக ரெங்கராஜனை எதிர்த்து சமுதாய பின்புலம் உள்ள சுயேட்சை வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சுயேட்சை வேட்பாளரால் வெற்றி பெற இயலாவிட்டாலும், அதிருப்தி வாக்குகளை பிரிப்பதன் மூலம், ரெங்கராஜனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம்.

பேராவூரணியில் காங்கிரசின் சார்பில் மகேந்திரன் போட்டி

முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போல பேராவூரணியில் மகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தொகுதியில் தற்போது உறுப்பினராக இருக்கும் N R ரெங்கராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ராஹுல் காந்தியின் கோரிக்கைப்படி இளைஞர் காங்கிரசுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு 10 தொகுதிகளுக்கும் மேலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் காங்கிரசில் செயலாளராக பொறுப்பு வகிக்கும் மகேந்திரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவருக்குப் போட்டியாக தேமுதிக சார்பில் நடிகர் அருண்பாண்டியன் போட்டியிடுகிறார். புது தில்லியிலிரிருந்து இன்று சென்னை திரும்பும் மகேந்திரன் நாளை அல்லது நாளை மறுதினம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது